posted 5th August 2025
- காவேரி – விஜேயின் காதல் கனவாகும் காலமிது. இயற்கையின் அனத்தத்தினைத் தாண்டி கூடியவர்களின் துரோகம் இங்கு.
- காவேரி என்னதான் முடிவெடுப்பா – வாயைத் திறந்து சொன்னால்தானே என்னென்று உண்மை விளங்கும்.
- விஜேயின் வீட்டில் சித்தியினதும், பாட்டியினதும் நடிப்பை நம்பி ஏமாறும் விஜேய் – தாத்தாவுக்குத் தெரிந்தும் அமைதியாக இருப்பது ஏன்?
- எல்லாரின் முன்னிலையில் வில்லியாகப் பிரகடணப்படுத்த்ப்பட்ட சாரதாதா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 04.08.2025
காவேரியின் கனவும், விஜேயின் கனவும் கலைக்கப்பட்டன. உண்மை தெரிந்த காவேரி, ஒன்றுமே தெரியாமல் தலையினைப் பிய்த்துக் கொள்ளும் விஜேய்.
ஆசையுடன், இனி நானும், காவேரியும் ஒன்றாக என் வீட்டில் வாழப்போகின்றோம் என்று மிகுந்த கனவுடனே வந்த விஜேயை, காவேரியின் வீட்டு வாசலண்டையில் வைத்து இடைமறித்தா சாரதா. என்ன நடந்தது என்று விஜேய் அத்தனைதரம் கேட்கையிலே காவேரி உண்மையினைச் சொல்லி இருக்கலாம்தானே! ஏன் சொல்லவில்லை? பாட்டிதன்னும் சொல்லி இருக்கலாம்தானே? கங்கா சொல்லி இருக்கலாம். ஒரு பெண்களும் வாயைத் திறக்கவில்லையே! ஆனால், அங்கு நின்ற ஆண்கள் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாமல், வீட்டின் பெண்களெல்லாம் என்ன சொல்கின்றார்கள், சாரதா அத்தை ஏன் இன்னமும் பிடிவாதம் பிடிக்கின்றா என்று ஒரு விளக்கமும் இல்லாமல் தடுமாறுகின்றனர்.
இதற்கிடையில், விஜேய் காவேரியின் தற்போதைய நிலையினைச் சொல்ல வெளிக்கிட, காவேரி, விஜேய் என்று அதட்டி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டா.
இரவெல்லாம் நல்லாகத்தானே காவேரி கதைத்துக் கொண்டிருந்தாள், இப்போது என்ன நடந்து விட்டது இவளுக்கு என்று ஒன்றுமே விஜேயுக்குப் புரியவில்லை. அத்துடன் வீஜேயினால் ஒன்றும் ஊகிக்கவும் முடியவில்லை.
ஒருதராலேயும் விஜேயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், காவேரி விஜேயிடம், எனக்கு உங்களுடன் வாழப் பிடிக்கவில்லை என்று ஒரு கோரிக்கையினைப் போட்டுப் பார்த்தாள், காவேரி. உனக்கென்ன லூசாடி என்று விஜேய் உரக்கச் சொன்னான்.
ஏன் பாட்டி நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றுதானே ஆசைப் பட்டீங்கள். இப்போது என்ன திடீரென மாறிச் சொல்லுறீங்கள் என்று கேட்டதற்குப் பதில் இல்லை பாட்டியிடமிருந்து.
காவேரியின் வீட்டில் உள்ளவர்கள் அமைதியாக இருப்பதற்குக் காரணம், வீஜேயின் குடும்பத்தினை தாங்கள் அசிங்கப்படுத்தக் கூடாதென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள்.
ஆனால், காவேரி வீட்டில் நினைத்திருக்கலாம், விஜேய் வீட்டிலிருந்து வந்த அத்தைக்காறி, காவேரியைப் பிரித்துக் கொண்டு வந்தனீங்கள்தானே அப்படியே பிரிந்து போவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என்று சொன்னதை சாரதா குடும்பத்தினால் மறக்க முடியுமா? அவங்களுக்கும் வலிக்கும்தானே!
அது மட்டுமா, காவேரி இனி எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் முடிவெடுத்து விட்டோம் என்று இனி அவள் வேண்டாம் எங்களுக்கு என்று சொன்னதினையும், இப்படியாக எல்லாவற்றினையும் சேர்த்துப் பார்த்தால் காவேரி, விஜேயின் வீட்டிற்கு வாழப் போனால் நிம்மதியாக அவளால் சீவிக்க முடியுமா?
சாரதா, காவேரியின் தாய் எல்லாவற்றினையும் யோசிக்க மாட்டாவா என்ன?
காவேரியைப் பார்த்த பாட்டி, என்ன? இவளைப் பார்த்தாதான் மாசமாக இருக்கிற மாதிரி இருக்குது. இவளின் வயிறு முன்னதைய விட பெரிதாக அல்லவா இருக்கின்றது? இந்தக் கேள்வியினால் திடுக்கிட்டுப் போனாள் காவேரியும், சாரதாவும்.
துரோகங்களை உள்மனதினிலே வைத்துக் கொண்டு வெளியே நடித்துக் கொண்டிருப்பவர்களுடன்தான் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவர்களை எங்களாலும் ஊகிக்க முடியாது, கண்டுபிடிக்கவும் இயலாது. அப்படி கண்டு பிடித்தாலும் அவர்களை மற்றவரகளிடம் அடையாளம் காட்டவும் முடியாமல் இருப்போம், அது மட்டிமல்லாமல் அவர்களுக்குப் பயந்து நாங்கள் ஒன்றுமே வாய் திறக்கமுடியாமல் இருப்போம். இதோடே நின்றுவிடுமா, இப்படியே எங்கள் வாழ்க்கையினை முடித்துக் கொள்ளுவோம்.
இவ்வாறான வேறுபட்ட வாழ்க்கை நிலைகளைச் சித்தரிக்கின்றது எமது Healthy Life Hacks Channel ஆகும். நீங்கள் description னில் உள்ள இந்த லிங்கினைக் https://www.youtube.com/@Healthylifehacks-b7z கிளிக் செய்து அதில் உள்ள உண்மை கலந்த கதைகளினை கேட்பதுமட்டுமல்லாமல், இவற்றினால் எவ்வாறு ஒருவரின் மனமும், உடலும் பாதிக்கப் படுகின்றது என்பதனையும், இவ்வாறான வாழ்க்கை நிலைகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதனையும், இதனால், சுக வாழ்க்கையினை நாங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
இனி,
- விஜேய் - காவேரி இவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.
- சாரதாவுக்குச் சூடு ஏறிச்சுது விஜேயின் பாட்டியும், அத்தையும் துண்டக் காணோம், துணியக் காணோம் என்று ஓடுவதைப் பார்ப்பதுதான் மிச்சமாக இருக்கும் என்று என் நினைவு. இது சரியாக வருமா?
- விஜேயின் தாத்தா உடனுக்குடன் விஜயுடன் கதைப்பவராச்சே! தனது மனைவி என்ன செய்தா காவேரிக்கு என்று சொல்லுவாரா?
பார்க்த்தானே போகின்றோம்.
நீங்கள் எனக்கு மின்னஞ்சலில் உங்கள் கருத்துக்களை சொல்வதற்கு நன்றி. ஒரு வேண்டுகோள், எனது கொமேன்ற் பகுதியில் உங்கள் கருத்துக்களைச் சொன்னால், அனைவருக்கும் நன்மையாக இருக்குலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், உங்கள் தனிப்பட்ட பிரத்தியேகமான கருத்துக்களை மின்னஞ்சலில் எழுதுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!