
posted 25th March 2022

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரை நினைவு கூர்ந்து இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்னாருக்கு கௌரவமளித்துள்ளது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமதீஸ் அபூபக்கரின் ஆலோசனையுடனும், பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீனின் தலைமையிலும் பல்கலைக்கழக நூலகம் முன்னெடுத்துவரும் “புத்தக்கக் கண்காட்சி” எனும் முன்மாதிரி திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுட்பட பல்கலைக்கழக சமூகத்தினரின் வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் உலகப் பெரியார்கள் அறிஞர்களை முதன்மைப்படுத்தி இந்த புத்தகக் கண்காட்சி செயற்திட்டம் தொடராக இடம்பெற்று வருகின்றது.
இதன்படி குறித்த புத்தகக் கண்காட்சி செயற்திட்டத்தின் ஐந்தாவது தொடராக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பற்றிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீனின் தலைமையிலும் தமிழ் சிறப்புத் தேர்ச்சி இறுதியாண்டு மாணவி எம்.ஏ.எப். நசீறாவின் ஏற்பாட்டிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், மெய்யியல் துறை பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கே. கணேசராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன்,
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் யாழ் நூல் உட்பட பல்வேறு நூல்கள், ஆய்வு கட்டுரைகள், ஆவணப்படங்கள், தகவல்கள் கொண்ட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நூலகர் றிபாயுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் சிறப்புத்தேர்ச்சி, இறுதியாண்டு மாணவி எம்.ஏ.எப். நசீறா, அடிகளாரின் யாழ்நூல் பற்றியும், அவரது வரலாறு பற்றியும் சிறந்த ஆய்வுடன் கூடிய முக்கிய உரை ஒன்றை ஆற்றினார்.
சமூகத்திற்காகவும், கல்விக்காகவும் செய்யும் இத்தகைய பணிகள், செயற்பாடுகள் பீடங்களிலும் இடம்பெறவேண்டுமென தமது உரையில் குறிப்பிட்ட பிரதம அதிதி கலாநிதி கணேசராஜா,
விபுலாநந்த அடிகளார் பற்றிய தேடல் ஒன்றைத் தமிழ்த்துறை ஆரம்பிக்க முன்வரவேண்டுமெனவும் கோரினார்.
உலகின் முதலாவது தமிழ்ப் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்த அடிகளார், தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள கிழக்கு மண்ணின் பெருமை மிக்க காரைதீவில் பிறந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House