தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமானஇரா. சம்பந்தன் அவர்களின் அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களின் அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கிறார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை அரசியல் யாப்பினூடாக பெற்றுக்கொள்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக பிரதானமான குறிக்கோளாகும். இந்த நாட்டிலே தமது பூர்விகத்தினை கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், மற்றும் வாக்குரிமை என்பவற்றினை உள்ளடக்கும், அவர்களின் வரலாற்று ரீதியான பூர்விகம், மற்றும் இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் ஏற்ட்டுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும். இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது.

ஏனைய சில விடயங்கள் தொடர்பில், ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஒரு அரசியல் யாப்பினை இந்த நாடு உருவாக்க முனைவதாக கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையை பேணுவது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்கவேண்டும் மாறாக அவர்களை குழப்பக்கூடாது.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டிற்குள், சமத்துவம் நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வினை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு


Statement issued by R Sampanthan Member of Parliament, Leader Tamil National Alliance

TNA leaders, Members of Parliament, and other functionaries generally reside in their respective districts of the North and East. The Corona Virus has been an impediment to personal meetings and group discussions. This has led to lack of clarity on some matters.

The TNA’s main political objective is the evolution of a political solution through Constitutional measurers of the National Question. The Sovereignty of the peoples who have inhabited the country, meaning their powers of Governance fundamental rights and franchise in the whole country, and in their historical habitation, in keeping with commitments made by the Sri Lankan Government and leaders domestically and internationally, and also in keeping with international Covenants and Instruments which Sri Lanka has accepted. On this fundamental question the TNA has articulated its position quite clearly and is firm.

In regard to some other issues however, lack of joint meetings and discussions has led to some misunderstanding and confusion. There have also been some elements who have endeavored to disunite the TNA. These matters will be discussed amongst all concerned in order to preserve unity.

The country is said to be engaged in the formulation of a new Constitution which is inclusive and all-encompassing. Unity at this critical juncture is fundamental, there must be clarity amongst people, and they should not be confused.

I appeal to everyone to avoid misunderstanding and confusion and to be firm to achieve our main objective within a united an undivided country on the basis of equality justice and dignity.

R. Sampanthan
Member of Parliament
Leader – Tamil National Alliance