
posted 16th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒரு சிறுநீரகக் கிராமம் (One Kidney Village)
நீங்கள் பலவிதமான சரித்திர றீதியான பெயர்களைத் தாங்கி உருவான கிராமங்களை அறிந்திருப்பீர்கள். ஆனால், இந்தக் கிராமத்தில் வாழும் அல்லது வாழ வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டு வாழ வைக்கப்பட்ட இந்த மக்களுக்கு ஒரேயொரு சிறுநீரகம் தான் உள்ளது.
இது அவர்கள் பிறக்கும் போதே இருந்ததா? இல்லை. ஆனால், இவர்களுக்கும் அவர்கள் பிறக்கும் போது சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய இரு சிறுநீரகங்களும் இருந்தனதான். அப்போது யாருக்காகவாவது குறிப்பாக அவர்களது உடன் பிறப்புகளுக்கு அல்லது உறவினர்களுக்குத் தானம் செய்தார்களா? அதுவும் இல்லை. அப்படியானால் என்னதான் இவர்களுக்கு நடந்தது?
இது நாடியின் கீழே கையினால் முண்டு கொடுத்து கேட்கின்ற சுவார்சமாகக் கேட்டும் கதை அல்ல - இம் மக்களின் தாங்கொணாத் துயரினைத் தாங்கி நிற்கும் கதை. அதாவது, கஷ்டத்தினால் துவளும் மக்கள் எவ்வாறு கறுப்புச் சந்தையில் உலாவரும் கழுகுகளால் வேட்டையாடப்படுகின்றார்கள் என்பதனைச் சொல்லும் உண்மை சோகக் கதை.
உலகத்தில் உள்ள வறிய மக்கள் வாழும் நாடுகள் தான் இவற்றில் குறிப்பாக நேபாளிலுள்ள ஹொக்சி என்ற கிராமம், இந்தியாவிலுள்ள நல்கொண்டாவுடன், இந்தியாவின் தமிழ் நாடு ஆகிய கிராமங்கள், வியட்நாமிலுள்ள சாப்பா என்ற கிராமம் ஆகியன குறிப்பிடத்தக்கன.
இக் கிராமங்களில் வாழும் மக்கள் வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் வாழ்ந்துவருகையிலே, அதாவது, தங்களது கடன்களை அடைக்க முடியாமலும் அவர்கள் தங்கள் சீவியத்தை ஓட்டிக் கொண்டிருக்கையிலே, குடும்பச் சுமையினைக் குறைப்பதற்காகவும், நல்ல வாழ்க்கையினை அமைக்க முடியும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் தங்களது ஒரு சிறுநீரக்த்தினை கறுப்புச் சந்தையிலே விற்கின்றார்கள். அதன் பின்பும் அவர்களது கடன் சுமையோ குறைந்ததாகவும் இல்லை, வாழ்க்கை செழித்ததாகவும் இல்லை. அவ்வாறு தங்கள் சிறுநீரகத்தினை கறுப்புச் சந்தையில் விற்றப் பிறகு அவர்கள் உடல் சுகாதாரம் குறைவடைந்து போவதைத் தடுக்க முடியாமலும், அதனைக் குணப்படுத்த முடியாமலும் மேலும், இன்னமும் அதிகமாக இன்னல்களை அனுபவிக்கும் அம் மக்களின் உண்மை வாழ்க்கையினைச் சித்தரிக்கும் சோகக் கதை.
அவ்வாறு ஒரு சிறுநீரக்த்துடன் வாழுபவர்கள் தங்கள் சொந்த நகரத்தை விட்டு அல்லது தாங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு அயலிலுள்ள புற நகரில் வாழத் தொடங்குவார்கள். அவ்வாறாக அவர்கள் வாழும் புற நகர்தான் ‘சிறுநீரகக் கிராமம்’ என்று அழைக்கப்படுகின்றது.
இந்தக் கறுப்பு வியாபாரத்தில் ஈடுபடும் தரகர்கள் வெகுவான கஷ்டத்தில் வாடுபவர்களைத்தான் குறிவைப்பார்களாம். அவ்வாறு குறி வைக்கப்படுபவர்களைத் தரகர்கள் தம்வசம் ஈர்த்துக் கொள்வதற்காக சில சமயங்களில் தரகர்கள் பல வருடங்களாக அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவார்களாம். அத்துடன் அம்மக்களை சிறு தொழிலுக்கென்று அயல் கிராமங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய் உதவுவது போல நடிப்பார்களாம். இதை நம்பி அந்த வறியவர்களும் அவர்களுடன் சேர்ந்து போவார்களும். அந்த வருமானமும் அவர்களின் சீவியத்திற்குக் காணதது என்று உணரும் மட்டும் இந்த தரகர்களும் அவர்களுடன் தங்களது நேரத்தினை செலவிடுவார்களாம்.
அத்துடன், அவ்வாறு குறிவைக்கப்பட்டவர்கள் அவர்களாகவே தம் கஷ்டம் தீர்க்கப்பட முடியாதென்ற நிலைக்கு வரக்கூடிய சூழ்நிலையினை தரகர்கள் உருவாக்குவார்களாம் அக் கறுப்பு வியாபாரிகள்.
அந்த நிலைக்கு தள்ளப்பட்ட அந்த அப்பாவி மக்கள் அந்த கறுப்புச் சந்தை தரகர்களிடம் இறுதியில் தம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலும், அவர்களை விட்டால் வேறு ஒருவரும் இல்லை நமக்கு இல்லை என்ற சூழ்நிலையிலும், இவர்கள்தான் எமக்குத் தஞ்சம் என்று இம் மக்களின் மனதில் இடம் பிடிகும் நிலையினை உருவாக்கி, அவர்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மட்டும் அத் தரகர்கள் உடனிருப்பார்களாம். அந்த சமயம் பார்த்து அக் கறுப்பு வியாபாரிகள் இவ்வாறான ஒரு விஷயம், அதாவது, சிறுநீரகக் கதையினை அவர்களிடம் முன் மொழிவார்களாம். அதுதான் ஒரு சிறுநீரகத்தினை நீங்கள் விற்பதானால் உங்கள் கஷ்டங்களை இலகுவாக நிவர்த்தி செய்யலாம் என்ற பொய்யானதை உண்மை மாதிரிச் சொல்லுவார்களாம். ஒன்றை விற்று விடலாம் என்று அப்பவும் அம் மக்களை கட்டாயப் படுத்த மாட்டார்களாம். மேலும் உடனே முழுவதுமாகவும் இந்தத் தெரிவினை சொல்லவும் மாட்டார்களாம். அந்தத் தெரிவினைச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை தரகர்கள் உருவாக்கிக் கொண்டிருப்பார்களாம். எப்படா இவர் தன் வலையினுள் விழுவார் என்று கண் இமைக்காமல் பொறுமையாகக் காத்திருப்பார்களாம். இக்கதையினை மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகச் சொல்வார்களாம், அக் கறுப்பு வியாபாரிகளின் தரகர்கள். அதற்குரிய சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்களாம்.
அவர்களது அந்த சமயம் வரும்வரை வெகு பொறுமையா அந்த கறுப்பு வியாபாரிகள் பொறுமையுடன் காத்திருக்கையிலே, எந்த சந்தர்பத்திற்காகக் காத்திருந்தார்களோ அந்த சமயம் வந்ததும் தரகர்கள் தங்களது பொய்களை உண்மை போன்று சொல்வார்களாம்.
அப் பொய்களில் சில;
ஒரு சிறுநீரகத்தினை எடுத்து விற்றால் விடுபட்ட சிறுநீரகம் இன்னுமொரு குட்டி போடும் என்றும், விடப்பட்ட சிறுநீரகம் பெரிதாக வளர்ந்து வரும் என்றும், எந்த விதத்திலும் உங்கள் சுகாதாரம் பாதிக்கப்படாது என்றும், பெரிய அளவிலான பணம் கிடைக்கும் என்றும், அதனால், உங்கள் வாழ்வாதாரம் பிரகாசிக்கும் என்றும் கூறி அந்த அப்பாவி மக்களைத் தங்கள் வலையினுள் விழ வைத்து விடுவார்களாம்.
அவ்வாறு கூறப்பட்ட பொய்களினை உண்மையென நம்பி, அவர்கள் தங்கள் கடன்களை அடைத்துவிடலாம், தங்கள் குடும்பத்தினை நன்கு வாழ வைக்கலாம், காணி வாங்கலாம், வீடு கட்டலாம் என்று பல விதமான கனவுகளுடன் அக் கறுப்பு வியாபாரிகளின் தரகர்களிடம் தஞ்சம் புகுந்துவிடுவார்களாம்.
இவ்வாறான அப்பாவி மக்கள்தான் வாழ்ந்து கொண்டிருக்கும் தத்தமது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் குடியேறுவார்களாம். அவ்வாறு குடியேறியுள்ள மக்களால் உருவாகியதுதான் அந்த ‘ஒரு சிறுநீரகக் கிராமம்’ ஆகும்.
இது கதை அல்ல. சகிக்க முடியாத ஒரு துரோகக் கதை. பார்த்தீர்களா கஷ்டம் மனிதரை எங்கு கொண்டுபோய் நிறுத்தி இருக்கின்றதென்று.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி