
posted 20th April 2022
உடல் அலுப்பு அல்லது உடலை முறிச்சுப் போட்டது போன்றிருப்பது, என்று விளக்கம் சொல்ல முடியாத, விபரிக்க முடியாத ஒரு அசதியீனமான நிலைமை.
இதற்குக் காரணம் சரியாகச் சொல்லமுடியாமல், விளக்கமுடியாமல் அவதிப்படுபவர்கள் அனேகம் பேர். நமது உடல் முழுவதும் முறிச்சுப்போட்டது போல அலுப்பாக உள்ளது; ஆனால் அதற்குக் காரணம் கூடத் தெரியாமல் இருக்கும். இது தொடர்ந்து, தினமும் நடைபெறும் இது வியாதியா அல்லது உடம்பில் ஏற்படும் பெலவீனமா, ஒன்றும் புரியாமல் இருக்கும்.
இதனைக் குறைப்பதற்கு சிலர் நன்றாக நித்திரை கொண்டெழும்புவர். சிலருக்கு நித்திரையே குளப்பமாகிவிடும்.
எனவே, அனேகம் பேர் வைத்திய உதவியை நாடி மருந்துகளைப் பாவிப்பர். ஒரு சிலர் கைமருந்து பாவிப்பர். இந்த ஒரு சிலர் பாவிக்கும் கை மருந்து என்னதான் என்று இங்கு பார்ப்போம்.
தொடரும்...>>>>>>