இந்தியாவில் அகதிகளாக இருந்து தாயகம் திரும்புவோருக்கு விமோசனம் கிடைக்குமா?

போர் முடிவுக்கு வந்தபின்னர் நாடு திரும்பியவர்களில் கணிசமானவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு வந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் நாடு திரும்புதலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பது இவர்களின் எண்ணக்கருவாக இருக்கின்றது. இலங்கையில் சார்க் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள் இலங்கை திரும்பி அங்கும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அங்கீகாரச் சான்று பெற்ற பின்னரும் அவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது என இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை அகதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுபோரின் காரணமாக புலம்பெயர்ந்து, தமிழகத்தில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 65,000 நபர்களும், முகாமிற்கு வெளியில் காவல்துறை பதிவு பெற்று ஏறத்தாள 35,000 நபர்களும் வசித்து வருகிறார்கள்.

கடந்த கால் நூற்றாண்டாக இங்கு வசித்துவரும் நபர்களின் நீண்டநாள் கோரிக்கையான வாழ்விடம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உட்பட பல்வேறு திட்டங்களை தற்போது பொறுப்பேற்று இருக்கும் தமிழக அரசு ரூ.317.4 கோடி மதிப்பீட்டில் அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய சிறப்பு குழு ஒன்றையும் அமைத்து, அகதி மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இது அகதி மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியா இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டால் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள்' என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரான தாங்களும், இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் போன்றவர்கள் கலந்துரையாடி உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இங்குள்ள அகதிகளில் ஒரு சாரார் தங்கள் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விரும்புகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி இங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகின்றனர். சிலர் என்ன முடிவு எடுப்பது என்று முடிவெடுக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

போர் முடிவுக்கு வந்தபின்னர் நாடு திரும்பியவர்களில் கணிசமானவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு வந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் நாடு திரும்புதலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பது இவர்களின் எண்ணக்கருவாக இருக்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவில் அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒவ்வர் (ழுகநுசுசு) நிறுவனம், அகதிகள் நாடு திரும்புவதில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அகதிகள் நாடு திரும்ப வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் எடுத்துரைக்கும் அரசியல் காரணங்கள் ஏற்புடையதாக இருந்தாலும், அங்கு மக்கள் சென்று வாழ்வதற்கான நீண்டகாலத் தீர்வுகள் என்று பார்க்கும்போது அதற்கான சூழலும் உடனடி சாத்தியங்களும் அங்கு தற்போது இல்லை என்றே தோன்றுகின்றன.

இலங்கையில் நாடு திரும்பும் மக்களுக்கு உள்ள சவால்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படையாகக் கூறாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட, நம்பிக்கை அளிக்கக்கூடிய தகவல்களை மட்டுமே மக்களிடம் எடுத்துக்கூறி, மக்களை நாடு திரும்ப ஊக்குவித்து வருகின்றனர். கடந்த காலங்களிலும் இதுதான் நடந்தது. அதனால்தான் நாடு திரும்புதல் என்ற கூற்றின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படவில்லை.

இதுவரை நாடு திரும்பிய மக்களின் நிலையை நாங்கள் ஓரளவு அறிந்து வைத்துள்ளோம். நாடு திரும்பியவர்களுக்கான மீள்குடியேற்றம், குடியுரிமைக்கு அதிகளவு கட்டணம் பெறுதல், கல்வி ஆவணங்களுக்கான அங்கீகரிப்பு கட்டணம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படாத நிலை அங்கே தொடர்ந்து வருகிறது.

எனவேஇ பின்வரும் தகவல்கள் மீது தாங்கள் உரிய கவனம் எடுத்து, தங்கள் ஊடாக இலங்கை அரசு மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண்பதன் மூலமே, மக்களிடம் நாடு திரும்புதல் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

1. இலங்கையில் சார்க் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள், இலங்கை திரும்பி, அங்கும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அங்கீகாரச் சான்று பெற்ற பின்னரும், அவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் என புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி இதுவரை 119 நபர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட அவர்களில் 95 நபர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் தங்களின் மேலான பார்வைக்கு இணைக்கப்பட்டு உள்ளது. (மாவட்ட வாரியாக கணக்கிட்டால் ; யாழ்ப்பாணம் 25, கிளிநொச்சி 4, மன்னார் 27, முல்லைத்தீவு 4, திரிகோணமலை 21, வவுனியா மாவட்டத்தில் 14 நபர்கள் என உள்ளார்கள்)

2. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட தரப்படுத்தலே இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைக்கு வழிகோலியது. இப்பிரச்சினையின் காரணமாக தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்பது கல்வி கற்கும் வாய்ப்பு. இங்கு கல்வி கற்றவர்களுக்கு ஆரம்ப கால கட்டங்களில் தொழில் வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தனியார் வேலை வாய்ப்புகளில் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.

3. அதேவேளைஇ இலங்கை செல்ல விரும்பும் குடும்பங்களின் ஒரே நம்பிக்கை தங்கள் குடும்பங்களில் உள்ள படித்த நபர்களுக்கு இலங்கையில் ஒரு நிரந்தர அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே உள்ளனர். அவர்களுக்கு மேற்கண்ட புறக்கணிப்புகள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுத்து உறுதியளிக்க வேண்டும்.

4. நாடு திரும்பும் குடும்பங்கள் இலங்கையில் தாங்கள் விரும்பும் இடங்களில் குடியேற இலங்கை அரசு அனுமதித்தாலும், சில அரச அதிகாரிகளின் கெடுபிடிகளால் அதனை அடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

5. வீடமைப்பு என்பது இலங்கையில் உள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், நாடு திரும்பிய பலருக்கும் முறையாக வீடமைப்பு கிடைக்காத நிலை உள்ளது.

6. தனி நபராக இலங்கைக்கு வரும் முதியவர்களுக்கு வீடு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. (அகதியாக தமிழகத்திற்கு குடும்பத்துடன் சென்ற ஒருவர், பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு கணவனை அல்லது மனைவியை இழந்து அல்லது திருமணமே செய்துகொள்ளாமல் தனியாக சொந்த நாடுக்கு திரும்பும் போது வீடு இல்லையெனில் அவர் எவ்வாறு அங்கு வாழ முடியும்)

7. கணவன் மனைவி என இருவர் மட்டும் நாடு திரும்பினால், அவர்களுக்கும் வீடு வழங்க அதிகாரிகளால் மறுக்கப்படும் நிலை உள்ளதாக தெரிகிறது. (அகதியாக இடம் பெயரும்போது, குடும்பத்துடன் சென்று பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு வயதான காலத்தில் திரும்பும் தம்பதிகள் எவ்வாறு அங்கு வீடற்று வாழமுடியும் )

8. தமிழகத்திற்கு புலம்பெயரும் போது இருந்த காணிகள் தற்போது பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டும், அங்குள்ள காணிகளை அரசு அதிகாரிகள் வேறு நபர்களுக்கு அவற்றை முறைகேடாக வழங்கியும் உள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மூலம் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை அந்த புகார்கள் பற்றி கண்டுகொள்ளப்படவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். தங்களுக்கு முன்பாக இருந்த தூதர்களுக்கும், இலங்கை அரசு மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் போன்றோருக்கும் இவ்வாறான கடிதங்கள் சில தான்னார்வ சேவையாளர்கள் மூலம் எழுதப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று தெரிகிறது.

9. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இருந்து சொந்த விருப்பத்தில் நாடு திரும்பும் மக்கள் தாங்கள் இங்கு சம்பாதித்த வாழ்வாதார மற்றும் அசையும் சொத்துக்களை தங்களுடன் எடுத்துச் செல்ல சுங்க கட்டண விலக்கு அளித்து உதவிட வேண்டும். நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கான இருநாட்டு உடன்படிக்கைவரை காத்திராமல் இதற்கென ஒரு அரசானை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்கள் இலங்கை திரும்பி மீண்டும் தமிழகத்திற்கு அகதியாக புலம்பெயர்வதை தடுக்க உதவிகரமாக இருக்கும்.

10. விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் நிறைக்கு மேலான பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களில் முன்பதிவு செய்து கொழும்பு மார்க்கமாக பெற்றுக்கொள்ளும் விதமாக அனுமதித்தால், இதற்கான கட்டணமும் மிகக் குறைவாக இருப்பதால் மக்களே தாமாக முன்வந்து இதை செய்வார்கள். இவ்வாறு கப்பல் மூலம் தங்கள் வாழ்வாதார தேவைகளுக்கு பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்வதால், இலங்கையில் அவர்கள் யாருடைய உதவியுமின்றி குறைந்தது 9 மாதங்களுக்காவது அல்லது தங்களுக்கான மீள்குடியேற்றம் உறுதி செய்யப்படும் வரை தங்களுக்கான மாற்று வாழ்வாதார தேவைகளை தக்கவைக்க இது உதவியாக இருக்கும். அப்படி ஒரு நிலை இல்லாதபட்சத்தில், இங்குள்ள பொருட்களை அவர்கள் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இலங்கை திரும்பிய பின்பு மீண்டும் இலங்கையில் அவற்றை வாங்குவதில் கையில் இருக்கும் பணத்தை செலவழித்துவிட்டு கஷ்டங்களுக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாவதை தவிர்க்க வழிகோலுவதாக இருக்கும்.

மேற்கண்ட விடயம் தொடர்பாக தங்களுக்கு முன்பு பொறுப்பு வகித்த இலங்கைத் தூதுவரான திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு புலம் பெயர் மக்கள் பணியில் இருந்த ஒரு சமூக சேவையாளர் நேரில் வலியுறுத்தியதுடன் எழுத்துப்பூர்வமாகவும் கையளித்துள்ளார் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.

எனவே, இனிவரும் காலங்களில் இந்திய இலங்கை அரசுகள் மூலம் முன்னெடுக்கபடவுள்ள ஒரு உடன்படிக்கையின் மூலம், மேற்கண்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தீர்வு காண்பதுடன், நாடு திரும்பும் மக்கள் தங்களுக்கான மறுவாழ்வு செயற்திட்டங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளும் விதமாக, 1995 ஆம் ஆண்டு நாடு திரும்பும் போது, மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு விளக்கக் கையேடு போன்று இம்முறையும் கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்துவதே நாடு திரும்புதல் பற்றி மக்கள் முடிவெடுக்க உறுதுணையாக இருக்கும் என்று தங்களுக்கு அறியத்தந்து அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என இவ்வாறு இந்தியா சென்னை துணைத் தூதுவர் உயர்திரு.டி. வெங்கடேஸ்வரன் அவர்களுட்க்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமpல் உள்ள டேவிட் அனோஜன் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கான பிரதிகள்மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு. சென்னை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை மற்றும் சிறப்பு ஆலோசனைக்குழு முதன்மைக் குழுவின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் அவர்கள் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சேப்பாக்கம் சென்னை. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அகதிகளாக இருந்து தாயகம் திரும்புவோருக்கு விமோசனம் கிடைக்குமா?

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House