
posted 18th January 2022
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அராசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி இந்தியப் பிரதமருக்கு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயே தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தைக் கையளித்தார்.
ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதத்தை இரா. சம்பந்தன் தூதுவரிடம் கையளித்தபோது, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மற்றும் ரெலோ கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கையளிக்கப்பட்ட கடிதத்தில், இனப் பிரச்னைக்கான தற்காலிக தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவும், 16ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறும், இனப்பிரச்னைக்கான தீர்வாக கூட்டு சமஷ்டியை ஏற்படுத்த உதவுமாறும் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரை கோருவதற்காக ரெலோ கட்சியின் அழைப்பின் பேரில் முதலாவது கூட்டம் யாழ்ப்பாணத்தில் நவம்பர் 2ஆம் திகதி இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன் எம்.பியின் கட்சியும், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ரவூப் ஹக்கீமின் கட்சியும் பங்கேற்றன.
இதைத் தொடர்ந்து டிசெம்பர் 12ஆம் திகதி கொழும்பில் கூடிய தமிழ் பேசும் கட்சிகள் பொது ஆவணத்தைத் தயாரித்தன. இந்த ஆவணத்தில் அனைத்துக் கட்சிகளும் முதலில் கையொப்பமிட இணங்கின. எனினும் பின்னர், மலையக, முஸ்லிம் கட்சிகள் கையொப்பமிட பின்னடித்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் கையொப்பமிடுவது என முடிவானது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்ட கட்சிகளின் தலைவர்களே நேற்றைய தினம் தூதரை சந்தித்து கடிதத்தைக் கையளித்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சில் ஈடுபட்டநிலையில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் உடனடியாகத் தெரியவரவில்லை.


எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House