Varisu வாரிசு 19.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • கணேஷனின் கள்ளத் திட்டத்தினை முறியடித்தா ஆத்தா. தமிழின் மேலிறங்கி கிராமத்தினையே கட்டிக் காக்கும் ஆத்தாவின் இடத்தினை வித்துத் தின்பதற்குப் போட்ட திட்டங்கள் எல்லாம் தகடுபொடியானது.
  • கொண்டாட்டத்தில் தமிழை தன் பேத்தி என்று அழைத்த ஜனாம்மா. உண்மை தெரிந்தும் அடங்கியிருக்கும் தமிழ்.
  • தன்னால் போன கௌரவத்தினை மீட்டுக் கொடுத்த தமிழ் என்று மனமாறி்க் கொண்ட தமிழின் தாய்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 18.08.2025

இத்தனை வருட காலமாக அமைதியாக இருந்த ஆத்தாவைப் பார்த்து பயம் விட்டுப் போன கிராமத்து ஜனங்களில் சிலர். இதற்குத் தலைமை தாங்கும் கணேஷன். கிராமத்திலே அநியாயங்கள் கூடிப் போய் விட்டால் ஆத்தா அந்தக் கிரமத்தினையே சுடுகாடாக்கிவிட்டு வேறு இடத்திற்குப் போவது வழக்கம். அதனை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

ஆனால், இந்தக் கிரமத்தில் ஆத்தா அங்கேயே இருக்கின்றது, ஜனகம்பாளை 18 வருடங்களாக கிராமத்தினை விட்டு ஒதுக்கி வைத்து வி்ட்டு, பொய்யான கதைகளைக் கட்டுவதுமல்லாமல், பொய்யான கனவினையும் ஜனாம்மாவுக்குச் சொல்லி அவவின் சொத்தினை கொள்ளையடிக்கும் அளவுக்குத் துணிந்து விட்டனர். தெய்வத்தினைத் தொட்டுக் கழுவி, பூசை செய்யும் பூசாரிக்கு ஆத்தா தண்டனை கொடுக்காமல் விட்டதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

ஜனாம்மா பத்திரத்திலே கையெழுத்துப் போடுவதற்கு ஆயத்தமானதும், கணேஷனின் கண்கள் மற்றவர்களைப் பார்த்ததும், அமுதாவினதும், வெண்பாவின் முகங்களிலே பல்ப் எரிவதனை காணக் கூடியதாக இருக்கின்றது. இதனால், சிபீயை அத்தான் அத்தான் என்று ஷாமுடன் போட்டி போட்டுக் கொண்டு கல்யாணம் பண்ணுவதற்கு முக்கிய காரணம் ஜனாம்மாவின் சொத்துக்குத்தான் என்று இப்போ கண்கூடாக உள்ளது.

இவற்றைப் பார்க்கையிலே, ஒருவனை உண்மையாகவே அன்பிற்காக காதல் பண்ணுவது என்றில்லாமல், சொத்துக்காவே திரிகின்றனர், ஷாமும், வெண்பாவும். இதைப் பார்க்கையிலே வெட்கமாக இல்லை. இவர்களுக்கு இருப்பது காதல் என்றா சொல்ல முடியும்?

தமிழின் வீட்டுக் காறி, ஒரு நாளும் பொய் சொல்லாத தமிழ், நீ பொய் சொன்னாய் என்றால் அதிலே ஒரு கருத்து இருக்க வேண்டும். அவ எவ்வளவுக்கு நம்பிகின்றா தமிழை.

ஆத்தா வந்ததும், கணேஷனின் குடும்பத்திற்கே fuse போன bulbபுகள் போன்று இருக்கின்றார்கள். ஆனால், இனியும் ஜனாம்மாவின் குடும்பத்தில் கை வைத்தால், வம்சத்தினையே அழித்து விடுவேன் என்று இப்போ சொன்னது உண்மையாகி விடும்.

நான் முன்னைய பதிவென்றிலே சொன்னது போன்று கெட்ட ஆத்துமாக்கள் அடங்காமல் அழிவினை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கும். கடைசியில் கடவுள் அழித்தே விடுவார். அதுதான், இனி கணேஷனுக்கும் நடக்கும்.

அனைவரும் யோசிக்க வேண்டும் – வம்சத்தின் அழிவா? அல்லது மனம் போல நல் வாழ்க்கையா?
கோவில் கர்த்தா, பூரண கும்பத்தினைக் கொண்டு வாங்க, ஜனாம்மாவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றதும் அது நடந்தது. 18 வருடங்களுக்கு முன்பு இல்லாமல் போன மரியாதை இன்று தமிழில் இறங்கிய ஆத்தாவால் அரங்கேறியது.

தெருக் கூத்தினை எல்லா கிராம மக்களுடன் இருந்து பார்க்கத் தொடங்கிய ஜனாம்மா, தனது பக்கத்திலே வந்திருக்கும்படி தமிழைக் கூப்பிட்டு இருத்தியதுமல்லாமல், நீ எனது பேத்தி என்று கூறினா ஜனாம்மா. அத்துடன், சிபீயையும் கூப்பிட்டு தனது மற்றப் பக்கத்தில் இருத்தி, உங்கள் இருவராலேயும் என் கௌரவம் மீண்டும் கிடைத்துள்ளது என்று நன்றியும் கூறினா. அதுமட்டுமா செய்தா ஜனாம்மா, தமிழினதும், சிபீயினதும் கையினைப் பிடித்து, இருவருனதும் கைகளை தனது நெற்றியில் வைத்து ஒத்தினா.

இப்படி கைகளை ஒன்றாகப் பிடித்து ஒத்திய ஜனாம்மா இனி இருவரின் கைகளை ஒன்று சேர்த்துப் பிடித்து விட இனி காலம் நெருங்குகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

இதில் ஒரு டவுட் என்னவென்றால், தமிழில இறங்கிய ஆத்தா, ஜனகாம்பாள் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த ஆத்தா, ஒரு கட்டத்திலே ஜனாம்மாவுக்கு எல்லா மரியாதையும் இன்றையிலிருந்த கிடைக்க வேண்டும் என்று சொன்னது, உண்மையாகவே சிபீ சொல்கிற மாதிரி தமிழ் நடிக்கிறாவா என்று தோன்றுகின்றது.

ஆனால், தமிழ், இந்த ஆத்தாவுக்காக ஏற்ற பாத்திரம் றொம்பவே அழகாகவும், பக்தியாகவும் இருந்தது. கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகின்றது.

இனி என்ன நடக்கும் என்பனவற்றினைப் பார்ப்போம்.

  • ஜனாம்மா, தமிழை பேத்தி என்று அழைத்தது உண்மையாகும் காலம் நெருக்குவது தெரிகின்றது. இதனால், வீட்டில் ஒரு சில பிரச்சனைகள் ஆரம்பிக்கலாம். இதனால், ஜனாம்மாவின் பாதுகாப்பிற்கு கணேஷனால் மட்டும் ஆபத்தில்லை.
  • பிரகாஷின் உயிருக்கும் உலை வைக்கத் துடிப்பார்கள்.
  • தமிழுக்குப் பொறுப்புகள் அதிகமாகும். இதனால், சிபீயின் உதவியினை நாடுவாள் தமி்ழ் – சிபீயும் இதனை விளங்கிக் கொண்டு தமிழுக்கு உதவுவான்.
  • சிபீயுக்கும், தமிழுக்கும் கூடுதலான, ஒருவருக்கொருக்கான understanding அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கும்.
  • கணேஷனின் திட்டத்தினை அறியாத மாதிரி காயினை நகர்த்தும் தமிழ். இவ்வாறு செய்யும் தமிழின் மேலே கணேஷனுக்கு எந்த விதமான சந்தேகங்களும் வராதிருக்கும்.
  • ஜனாம்மாவின் கௌரவத்தினை மீட்டுக் கொடுத்த தமிழுக்கு நன்றி சொன்ன தமிழின் அம்மா.
  • தமிழின் அம்மா தனது வாழ்க்கையிலே என்ன நடந்தது என்று தமிழுக்குச் சொல்லுவா. இதனால், தமிழ் அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகையில், தேனு ஜனாம்மாவில் கோவிக்கும் அளவிற்குக் கருத்துச் சொல்லுவா. ஏனென்றால், அவ ஒருவனை காதல் செய்கின்றதனால். அவ தனது பக்கத்திற்குத்தான் கதைக்க வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!