posted 30th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அறையினுள் வந்தவன் யாரு? அவனை யாரு உள்ளே அனுப்பியது? பிறேம்தானே!
- தமிழை அனைவரும் தின்று தண்ணி குடித்துக் கொண்டிருக்கையிலே, தமிழுக்கு ஆதரவாக இருந்தது சேது மட்டும்தான். அனைவரையும் அடக்கினான் சிபீ.
- பிறேமின் குடும்பத்திலுள்ளவர்கள் கெட்ட மனமும், பழக்க வழக்கங்களும் உள்ளவர்களாதலால், இவர்களின் உணர்வுகள் அனைத்தும் எப்பவும் உள்ளடங்கி இருக்காது.
- சம்மீத்தாவும், பிறேமும் திட்டம் போட்டு தமிழின் உணர்வுடன் விளையாடுகின்றனர். அதுவும் தமிழினுடைய character ரில் கைவைத்தது பெரிய தவறாக இங்கு தெரிகின்றது.
- தமிழுடன் கை கோர்த்து நின்றான் சிபீ. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாம்மா. ஆனால், ஏன் ஜனாம்மா இதில் அமைதியாக இருந்தா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 28.10.2025
தமிழ் இருந்த அறையினுள் என்னென்று இவன் நுளைந்தான். யாரின் துணையுடன் இவன் வந்தான்? இதற்கு பிறேம்தான் காரணம் என்று நான் நேற்றைய பதிவில் கூறிவிட்டேன். அதுவும் சரியாகி விட்டது இன்று. வந்தவனை சிபீ பிடித்துக் கொண்டிருக்கையிலே அவனுக்கு சொல்ல வேண்டாம் என்று சைகை காட்டினான் பிறேம். அத்துடன் பிறேமினதும், சம்மூத்தாவினதும் முகங்கள் மாறியதிலிருந்து இது தெரிகின்றது.
தமிழின் காதலனாக உள்ளே வந்தவன் சொன்னான் தமிழின் தகப்பனைக் கண்டதாக. இத்தனைக்கும் ஒரு நாளும் தெரியாதவன் உள்ளே நுழைந்திருக்கையிலே, தமிழ் அசட்டைத் தனமாக இருந்ததும் இங்கு தவறெனக் கூறலாம். ஆனால், தமிழ், மிகவும் கவனமாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டுமல்லவா?
ஆனால், இங்குள்ள சந்தர்ப்பமானது, காணாமல் போன தமிழின் தகப்பனைப்பற்றியது. அதாவது, அவரை சேலத்தில், ஒரு ரீ கடையினில் பார்த்தேன் என்று சொன்னது நல்ல information ஆக இருந்தாலும், தகப்பனைப் பற்றிச் சொல்லுகையில் தமிழுக்கு தகப்பனைப்பற்றிய கவலை வந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் தமிழ் தன்னையும் மறந்தாள், உள்ளே வந்தவனையும் மறந்தாள்.
சில சமயம், இப்படியும் நடந்திருக்கலாம். அதாவது, தமிழ் தனது தகப்பனைத் தேடிக் கொண்டிருப்பதனைக் அறிந்த பிறேமின் நண்பன், அவன்தான் தமிழின் அறையினுள் நுளைந்தவன், இந்த தகவலை தமிழிடம் சொல்லுவதற்காகத் தமிழைத் தேடிக் கொண்டு ஜனாம்மாவின் வீட்டில் இருக்கின்றாள் தமிழ் என்று இங்கு நல்ல நோக்கத்தோடு அவன் வந்திருக்கலாம்.
அப்போது, accidentalலாக பிறைமைச் சந்தித்திருக்கலாம். இந்தச் சந்தர்பத்தினை பிறேம் தனக்காகப் பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறு எனக்காகச் செய் என்று அவனை தனது தங்கையின் வாழ்க்கைக்கு உதவும் படியாகப் பணித்திருக்கலாம் அல்லது காசு கொடுத்து இப்படிச் செய் என்று வெருட்டியும் இருக்கலாம்.
ஆனால், ஒரு நாளைக்கு அவன் சிபீயின் கையில் சிக்குவான்தானே, அப்போது எல்லாம் வெளிச்சத்திற்கு வரும்தானே!
இதற்குள் சம்யூத்தா பேசின வார்த்தைகள் இருக்கே மிகவும் கேவலமானவை அவைகள். அதனையும் சிபீ உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்தானே! பிறேமும் சேர்ந்து வாரி இறைச்சான் வார்த்தைகளை. ஆனால், மீனா ஒன்றுமே சொல்லாமல் சொக்கிப் போய் நின்றா. ஆனால், மற்றவர்கள் விட்டார்களா – சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தினார்கள்.
கோபத்துடன் வெளியே வந்தான் சிபீ. சிபீயின் வரவினை அதுவும் washroomமினுள் இருந்து வருவதனை ஒருவரும் எதிர் பார்க்கவே இல்லை. எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்தான், அவரவர் என்னவெல்லாம் சொல்கின்றார்கள் என்று. அனைவரையும் கடிந்து கொண்டான் சிபீ. ஒருவரும் வாயே திறக்க முடியாமல் இருந்தது சிபீயினுடைய வார்த்தைகளால். அத்தனையும் தமிழைப் பற்றித்தான். இனித் தமிழைப்பற்றிக் கதைப்பவர்களுடன் சீவியத்திற்கும் உறவினை அறுத்து விடுவேன் என்றான், சிபீ. அதிர்ந்து போயினர் அனைவரும்.
தமிழைக் கையில் பிடித்து வெளியில் கொண்டு போய் ஆறுதல் கூறினான் சிபீ. அழுது தீர்த்து விட்டாள் தமிழ் சிபீயின் முன்னால். எல்லாவற்றிற்கும் நான் இருக்கின்றேன் என்று திடம் கொடுத்தான் சிபீ. எல்லாவற்றினையும் அவதானித்துக் கொண்டிருந்தா ஜனாம்மா.
ஆனால், இப்படி ஒருவன் உள்ளே வந்து தமிழைப் பற்றி கூடாததெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததையும், வீட்டில் உள்ள அனைவரும் தமிழைக் கரைச்சுக் கொட்டுகையிலும் ஜனாம்மா ஏன் அமைதியாக இருந்தா என்று தெரியவில்லை.
சிபீயின் கல்யாணத்தினிலே எதுவும் இடஞ்சல் பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ணியுள்ளாள் தமிழ். அதனைக் காப்பாற்றவேன் என்று மீண்டும் தமிழ் சொன்னாள். உங்களுக்கு கல்யாணம் நடந்தேறினால் என்னில் உள்ள பகைமை எல்லாம் குறைந்து விடும்தானே. அதுமட்டும் பொறுமை காப்பேன் என்று தமிழ் சிபீயிடம் சொன்னாலும், சிபீயின் மனதினில் யார் இருக்கின்றார்கள்?, சம்யூத்தாவா? தமிழா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!