posted 25th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- நொறுக்கப்பட்ட தாலியினைப் பாவிக்க முடியாமல் போனதினால், ஜனாம்மா தனது தாலியினை முன் வைத்தா. முடிந்து போன வாழ்க்கையின் தாலியாதலால் ஷமீத்தா தனக்கு வேண்டாம் என்று ஜனாம்மாவிடமே நேராகக் கூறியே ஜனாம்மாவை நோகடித்தாள், ஷமீத்தா.
- கோபத்தின் உச்சக் கட்டத்தில் சிபீ. ஜனாம்மாவுடன் நின்ற தமிழ்.
- தனது மகள் தமிழின் நிகழ்வினைப் பார்ப்பதற்கு முத்தம்மா ஒரு வழிவகுத்தா, அம்முவிற்கு.
- ஜனாம்மாவைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் வாயே திறக்கக் கூடாது என்ற கருத்தில் தமிழின் கோபமும் இருந்ததனை இங்கு காணலாம்.
- ஜனாம்மாவின் வாழ்வு முடிந்த தாலியினை அமுதாவும் தன் மகள் வெண்பாவிற்கும் தர விரும்ப மாட்டா. இதற்கு கணேஷனும் சேர்ந்து ஒத்தூதினான்.
- இதன் அருமை தெரியாததுகள் என்று வாழ்வு கொடுத்த தாலியினை இவர்கள் மதிக்கவில்லை என்று குறை கூறினார்கள், அங்கு வந்த சுமங்கலிகள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 23.10.2025
ஆசாரியாரின் வருகைக்காக ஜனாம்மாவின் குடும்பமே காத்துக் கொண்டிருந்தது. ஆசாரியாரும் வந்தார். செய்து கொண்டு வந்த புதுத் தாலியினை ஜனாம்மாவிடம் கொடுத்தார். அதனைக் கண்ணில் ஒத்தி வாங்கிக் கொண்டா ஜனாம்மா.
சிபீயும், ஷமி்த்தாவும் கோவிலுக்குப் புறப்படுகையில், ஜனாம்மா இங்கு வீட்டினிலே பூஜை உண்டு என்றும் அதில் சிபீ பங்கு கொள்ள வேண்டும் என்றும் கூறியதும் அவர்களிருவரும் நின்று விட்டனர்.
தனக்கு உரிமையானவன் இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகப் போவதனால் ஏற்படும் வலியினை தமிழ் அனுபவித்துக் கொண்டு தேனுவிடம் நடித்துக் கொண்டிருந்தாள். இதனை உணராத சகோதரியா தேனு. மனதினுள் வைத்திருக்காதே அழுது கொட்டி விடு என்று இளையவளாகத் தேனு சொன்னது தமிழுக்கு எவ்வளவு ஆறுதலைக் கொடுத்திருக்கும். அழுது கொட்டி விட்டாள் தமிழ்.
ஆனால், தமிழுக்கோ அவள் மனமோ ஆறவில்லை. ஏனென்றால், சிபீ நான் உன்னை ஏமாற்றுவதற்காகத்தான் உன்னில் காதல் உண்டென்று நடித்தனான் என்றான். சும்மா சொல்கிறார் என்றும், சிபீ குறும்பு பண்ணுகிறார் என்று மீண்டும் கேட்தற்கு சிபீ சொன்னது, இல்லை இல்லை உண்மைதான் என்ற பதிலில் உடைந்து போனாள் தமிழ். அதன் பிறகு, ஷமீத்தாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி அவளுடன் அவன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கையிலே யாராவது ஒருத்தியாவது மனதாலே சிபீ போன்ற ஒருவனை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளுவாளா?
இதே கட்டத்தில்தான் தமிழின் இப்போதைய நிலைமை. ஆனால், என்ன நடக்கும் என்று தெய்வத்திற்கு மட்டும்தான் தெரியும்.
ஜனாம்மாவின் கூறை சாறியினை புதுப்பித்து கொண்டு வரப்பட்டதினையும் வேண்டாம் என்று சொன்ன ஷம்மீத்தாவும், வெண்பாவும், இப்போது பழைய தாலியினை எப்படித்தான் polish பண்ணி கொண்டு வந்தாலும் அது பழசு பழசுதானே என்பதனை யாருதான் ஏற்றுக் கொள்ளுவார்கள்? ஒருவரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்தானே! ஆனால், அந்த கூறை சாறியினை தமிழ் ஏற்றுக் கொண்டாளே!
இதே மாதிரித்தான் தமிழிடம் அந்த சந்தர்ப்பம் வரும் இந்த தாலி விஷயத்திலும். தெய்வம் அந்தச் சந்தர்ப்பத்தினைக் கொண்டுவரும், ஜனாம்மாவின் மூலமாக. ஆனால், தமிழ் அந்தத் தாலியினையும் ஏற்றுக் கொள்ளுவாள். எந்தச் சந்தர்பத்தில் என்றால், வெண்பாவும், ஷம்மித்தாவும் ஜனாம்மாவின் முகத்திற்கு முன்னால் இந்தப் பழைய தாலியானது எங்களுக்கு வேண்டாம் என்று சில சமயம் அதனைத் தூக்கி எறியலாம்.
ஷம்மித்தாவுடன் சிபீ ஷெல்பீ எடுத்துக் கொண்டிருந்ததையும், ஒரு வெட்கமும் இல்லாமல் சிபீ கதைக்க வேண்டியனவற்றை எல்லாம் ஷம்மித்தாவே பெரியவர்கள் முன்னிலையில் கதைத்தாள். அதாவது, தேனிலவிற்கு எங்கு போகலாம் என்பதைத்தான். கூச்சத்தில் தலை குனிந்து நின்றனர் வீட்டிலுள்ள பெரியவர்கள்.
இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அவளை அறியாமலே அவளின் கண்கள் கண்ணீரைச் சொரியத் தொடங்கின. இத்தனைக்கும் நடுவில் சிபீ அதனை அவதானித்துக் கொண்டான். உடனே சிபீ ஏன் தமிழ் உனது கண்கள் கலங்குகின்றன என்று முன்னைய நாட்களில் கேட்பது போன்று கேட்டான். அதனைக் கண்டு ஜனாம்மாவிற்கு ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தது. ஆனால், ஒரு நெரிசல் அவவின் மனதில் கீறலாக விழுந்தது.
தமிழும், தேனுவும் கதைத்துக் கொண்டிருந்ததையும், சிபீக்கும், தமிழுக்குமான உறவினையும் கேடீ அறிந்தும், உணர்ந்தும் கொண்டான். அப்பவும் தமிழ் தேனுவிடம் சிபீயைப் பற்றி ஒரு குறையும் சொல்லவில்லை. தான்தான் விரும்பியதாக பழியினை ஏற்றுக் கொண்டாள்.
பூஜையில் நொறுங்கிய தாலிக்காக தனது தாலியினை வைத்த ஜனாம்மாவிற்குக் கிடைத்த பெயர், பழைய, வாழ்ந்து முடிந்த தாலியினைத் தங்கள் தலையினில் திணிக்கின்றா என்றுதான்.
கோபம் கொண்டனர், அமுதாவும், ஷம்மித்தாவும். கோபத்தில் வந்த இவர்களில் ஒருவர் அந்தத் தாலியினை எடுத்துத் தூக்கி எறிய அந்தத் தாலியானது தமிழின் கழுத்தினிலே போய் விழும். தெய்வம் அதனை விழ வைக்கும். அது தமிழுக்கும் தெரியாது, சிபீ்க்கும் தெரியாது.
எங்கே போனது தாலியென்று தமிழும் அவர்களுடன் சேர்ந்து தேடுவாள். திடீரென்று பார்க்கையிலே தமிழின் கழுத்தில் ஜனாம்மாவின் தாலி விழுந்திருக்கும். அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்து உறைந்து போனார்கள். இது தெய்வத்தின் செயல்தான் என்று சொல்லுவார்கள். இனி இதனை ஒருதராலும் களற்ற முடியாது. வேண்டாம் என்று தமிழை ஒதுக்கவும் முடியாது. இது கடவுளால் போடப்பட்ட முடிச்சு.
ஆனால், ஜனாம்மாவிற்கோ ஆச்சரியமும், தமிழின் அனுமதியும் இல்லாமல் இது நடந்து விட்டதே என்றுணர்ந்து, அந்தத் தாலியினை கழற்றித் தரும்படி ஜனாம்மா தமிழிடம் கேட்பா. ஆனால், தமிழ் என்ன செய்வாள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
நான் நினைக்கின்றேன், தமிழ் அந்தத் தாலியினை எடுத்து அவளது கண்ணில் ஒற்றிக் கொண்டு, தலை குனிந்து நிற்பாள், அதனைத் தான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!