posted 22nd October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பொன்னுருக்குவதற்காக ஆசாரியார் வரவுள்ளார். ஆயத்தங்களை மீனாவிடம் ஜனாம்மா செய்யச் சொன்னாலும் அதனை தமிழிடம் ஒப்படைத்தா.
- முழுநேரமாக அமுதா தனது மகளின் கல்யாணம் சிபீயுடன்தான் என்று உள்குத்து வேலைகளை கட்சிதமாகச் செய்கின்றா.
- ஒன்றையும் எதிர்பார்க்காதவளாக, ஜனாம்மாவின் வேண்டுதலையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நல்லதையே செய்யும் தமிழரசி.
- குறிஞ்சிநாதன் கண்டது உண்மை – அதனை மறைத்தது தெய்வம்.
- பொன்னுருக்கலில் பழுதான தேங்காயினை வைத்ததும், தாலியினை சுத்தியலால் அடித்து நொருக்கியதும் அமுதாவே.
- எதுதான் என்னவும் நடக்கட்டும் என்று ஷியாமுடன் முன் வரும் சிபீ.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு- Varisu - 22.10.2025
ஆச்சாரியார் நல்ல நாளான இன்று பொன் வாங்கிச் செல்வதற்காக ஜனாம்மாவிடம் வந்து சென்றார். குறிஞ்சியோ, தனது குள்ளப் புத்தியினை ஜனாம்மாவிடம் காட்டிச் சென்றான். அவனுக்குக் கிடைத்த ஒரு துருப்பினைத் தவற விட்டான், குறிஞ்சி. ஆனாலும், கணேஷனை நம்பினான். தமிழின் உண்மையான தாயினைக் கண்டும், கணேஷனின் போட்டோவினை நம்பினான். தனது கண்தான் பிழை என்று தன்னை சுதாகரித்தும் கொண்டான்.
அமுதாவோ தனது மகள், வெண்பாதான் இந்த வீட்டு மருமகளாக வர வேண்டும் என்று மீனாவை கேட்டுக் கொண்டிருக்கின்றா. மீனாவுவோ தமிழை விட்ட பாடாக இல்லை. தமிழைக் கண்டதும் எரிந்து விழுந்தா. சொல்லக் கூடாத மாதிரி தமிழுடன் நடந்து கொண்டா. இதனை ஜனாம்மாவும், சேதுவும் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இப்படியெல்லாம் நடக்கிறதென்று சேதுவுக்கு வருத்தமாக இருந்தாலும், ஜனாம்மாவோ அசும்புவதாக இல்லை.
தமிழைப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கும் மீனா, தமிழ் தனது மருமகளாக வந்தால் என்ன செய்யப் போகின்றா? ஆனால், தமிழோ அமைதியாகவும், மரியாதையாகவும்தான் நடந்து கொள்ளுவாள். ஆனால், கொஞ்சம், ஷியாமையோ அல்லது வெண்பாவையோ அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால், மிகவும் கொடுரமான வாழ்க்கையினைத்தான் மீனா அனுபவிக்க வேண்டி வரும்.
ஹசீனாவைக் கண்ட குறிஞ்சிநாதனின் மனம் நன்கு ஆறுதலானது. ஆனால், அம்முவைக் கண்டால், என்னதான் நடக்கும்?
தமிழின் மேல் பழி வரட்டும் என்று அமுதா பழுதான தேங்காயினை வைத்திருக்கலாம். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் புலனாகின்றது. ஒன்று, தமிழின் மேல் பழி முடிவதற்கும், இரண்டாவதாக, ஷியாம் இந்தக் குடும்பத்திற்கு ஆகாதவள் என்றும் சொல்லுவதற்காகவே.
ஆனால், குசினியினுள் இருந்த தேங்காயானது முளையுடன் இருந்ததினைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இதெல்லாம், பலரின் சூழ்ச்சியென்று ஜனாம்மாவிற்குத் தெரியாமல் இல்லை. எல்லாப் பிழைகளையும் அதன் போக்கிலே போகும் படி விட்டு விட்டா. அதனால், தவறுகளைச் செய்பவர்கள் மிகவும் free யாக அவரவர் தவறுகளைச் செய்யட்டும் என்று சுதந்திரம் கொடுத்தும் விட்டா. இதுவும் ஒரு பிரச்சனை இல்லாத solution என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
நல்ல நாளானதால் ஆசாரியார் பொன்னுருக்கி தாலியும் செய்து முடித்துவிட்டார். வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையில் அந்தத் தாலியினை வைத்து ஜனாம்மாவிடம் கொடுப்பதற்கு இருக்கையிலே, தாலியானது அடித்து நொருக்கப்பட்டிருந்தது. வியப்பினில் ஆழ்ந்தார்கள் அனைவரும்.
இதனைச் செய்தவர் யார்? ஒன்று தேங்காயினை வைத்தது கணேஷனாக இருக்கலாம். அல்லது அமுதா அல்லது மீனா கூட இருக்கலாம். ஆனால், தாலியை அடித்து நொருக்கியது யார்? அது கட்டாயமாக அமுதாவாகத்தான் இருக்கும்.
ஆனால், இதில் ஒரு விஷயம் தொக்கு நிற்கின்றது. தாலியானது நொறுக்கப்பட்டுள்ளது. இது போலித் தாலியாகக்கூட இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே original தாலியானது ஜனாம்மாவிடம் உள்ளது. அதாவது, ஜனாம்மா ஆச்சாரியாரிடம் கூறியபடி, அவவே ஆச்சாரியாரிட்ம் போய் அதனை வாங்கி வந்து தன்னகத்தே வைத்துக் கொண்டு, போலியானதினை ஆச்சாரியாரை வைத்து வீட்டிற்குக் கொண்டுவரும் படி சொல்லி இருக்க வாய்ப்புகள் உண்டு.
இதனால், யார் யாரெல்லாம் இந்தக் கல்யாணத்திற்கு இடஞ்சலாக இருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகக் கூட இருக்கலாமல்லவா?
ஏனென்றால், ஜனாம்மாவிற்கு, கணேஷனாப் பற்றியும் தெரியும், ஒருகாலும் இல்லாமல் தானாகவே உள்ளே நுளைந்த குறிஞ்சியையும் தெரியும். அதுமட்டுமா, மீனாவின் கதைகளையும் கேட்டவதானே, அமுதாவின் ஊமைக் குத்தினையும் தெரியாமலா இருக்கும் ஜனாம்மாவிற்கு.
தனது வீட்டிற்கான மருமகளைத் தெரிவு செய்து நல்ல குடும்பத்தினை உருவாக்க வேண்டும் என்று எல்லாரையும் யோசிக்கும் ஜனாம்மாவின் மனதினை ஒருதரும் நினைப்பதாக இல்லை. மீனா, அமுதாவுடன் கூட்டுச் சேர்ந்தாலும், வெண்பாவைத் தனது மருமகளாக்கினால் தனக்கு என்ன நடக்கும் என்று கூட ஒன்றுமே நினைக்காமல் ஜனாம்மாவை எதிர்த்து நிற்கின்றா மீனா.
தமிழிடம் பொறுப்புக்களை பாரம் கொடுக்கும் போது ஜனாம்மா தமிழிடம் குண்டூசி எங்கே போகின்றது என்று கூடக் கணக்குச் சொன்னா. அப்படியிருக்கும் ஜனாம்மாவிற்கு இந்த திமிங்கலங்களின் ஆட்டமும், அசைவுமா தெரியாது.
சிபீ நடிக்கின்றான் தனது கல்யாண விஷயத்தில் என்று ஜனாம்மாவிற்குத் தெரியாமல் இல்லை. ஆனால், தமிழை சிபீ கல்யாணத்தின் பின்பு ஏற்றுக் கொள்கின்றானோ இல்லையோ, தமிழை அவன் ஏற்றுக் கொள்ளத்தான் வைப்பா ஜனாம்மா. இதுதான் ஆடியும், பாடியும் கறப்பது என்பது.
பழுதான தேங்காயினை வைத்ததினையும், தாலியினை அடித்து நொறுக்கியதினையும் ஜனாம்மா கண்டும் காணாமல் விட்டு விடுவா என்று நான் நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!