Varisu - வாரிசு - 18.11.2025

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சிபீயின் இறுதி முடிவானது தமிழைத் தான் கல்யாணம் பண்ண முடியாது என்பதுதான். ஜனாம்மா கேட்டதற்கிணங்க தமிழுக்கு விருப்பம் இல்லாமலே மணமேடையிலே தமிழ் உட்கார்ந்தாள்.
  • தனது உயிரா உன் முடிவா என்று சிபீயிடமான கேள்விக்கு சிபீ தமிழுடன் மணமேடையில உட்கார்ந்தான். தாலியினை வேண்டா வெறுப்பில் தமிழுக்குக் கட்டினான் சிபீ. சபையில் நின்ற அத்தனை பேரும் ஆசீர்வதித்தனர், தமிழின் தகப்பன் உட்பட.
  • தான் உன்னைப் பழிவாங்குவேன் என்று தமிழுக்கு தாலி கட்டியதும் சிபீ சொன்னாலும், தமிழ் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தாள். மரியாதையா? அல்லது தன் வாழ்க்கை என்னவாகும் என்பதா? இல்லை தமிழும் சிபீயை அடக்குவதற்கு தனது ஆட்டத்தினைத் தொடங்குவாளா?
  • தமிழை இழுத்துக் கொண்டு வெகு வேகமாகக் காரினை ஓட்டின சிபீ, இறுதியில், ஜனாம்மாவைத் தான் இனி செக்கனுக்குச் செக்கன் பழி வாங்குவதாக சொல்வானாக இருந்தால், சிபீயின் வளர்ப்பு சரியில்லை என்றுதானே தெரிகின்றது.
  • வளர்ந்து முதிர்ந்திருந்தாலும் முறியாமல் நிமிர்த்தும் ஜனாம்மா. சிபீ தனது கோபத்தினைக் காட்டிவிட்டான், இனி, ஜனாம்மாவின் உண்மையான ஆட்டம் ஒருவருக்கும் தெரியாதுதானே! இனிப் பார்பார்கள்.
  • ஜனாம்மா சொன்னபடி தமிழுக்கு சிபியால் தாலி கட்டப்பட்டாயிற்று. இனி அதனை ஜனாம்மா பார்த்துக் கொள்ளுவா என்று மிகவும் திடமான நம்பிக்கையில் முத்தம்மா. ஆறுதலான இவவின் வார்த்தைகள் அம்முவிற்கும், ஹசீனாவிற்கும் கிடைத்தது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

வாரிசு - Varisu - 18.11.2025

தோளுக்கு மேலே வளர்ந்து விட்டால், பிள்ளைகள் தாங்கள் தங்களைப் பெத்ததுகளையே மதிக்க மாட்டார்கள், மிதிக்கவே செய்வார்கள். இது எப்போது நடக்கும் என்றால், பிள்ளைகள் நல்ல வேலையில் இருந்தும், பெருமளவான ஊதியமும் அவர்களுக்குக் கிடைக்கிறதென்றால் மட்டுமல்ல, தாங்கள் விரும்பியதை பெற்றார் பெரியவர்களாக புத்திமதி கூறினால் இந்த வில்லங்கள் தொடங்கும்.

ஜனாம்மா என்னத்திற்குச் சொல்கின்றா, ஏன் சொல்கின்றா? என்று விளங்கப்படுத்திய காரணங்களைச் சொல்லும் போது ஒரு கணம் சிபீ சிந்தித்திருப்பானா? தனக்கு இப்படி scheduleலின் படி வாழ்க்கையினை நடத்த முடியாது. மாறாக, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தான் ஒருதரின் கட்டுப்பாடுகளுக்குள்ளும் இருக்காது சுதந்திரமாக இருக்க வேண்டும். இதுதான் சிபீயின் வாழ்க்கையின் வரைவிலக்கணம்.

இப்படிச் சொன்னவர்களின் வாழ்க்கையானது அவர்களின் இறுதிக் காலத்தில் மனைவி ஒன்று இருந்திருக்கலாம், அல்லது அவள் இப்போ உயிருடன் இருந்தால் தனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். அதுதான் சிபீயின் நிலைமையும்.

அப்போ, பெண்கள் அல்லது பெண்டாட்டி என்றால் அவள் ஆண்களுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்ய வேண்டும், கழுவித் துடைக்கிறதெல்லாம் செய்து நீங்கள் சாகும் மட்டும் செய்ய வேண்டும் என்பதுதான் ஆண்களின் ஆசையாக இருக்கும். அப்படித்தானே! அதேபோலத்தான் தமிழை சிபி எதிர்பார்ப்போனோ? இது தமிழிடம் வாய்க்காது. அவளிடம் கொள்ளை அன்பு, பாசம் இருக்கு. ஆனால், இந்த பூச்சாண்டி காட்டிற வேலையெல்லாம் அவளிடம் வேகாது.

தமிழோ எவ்வளவு மென்மாயானவள். ஆனால், இப்போ உயிர் பிழைத்து வந்துள்ளாள். இங்கு வந்தால் ஜானாம்மா அவளை மணமேடையிலே உட்கார வைத்து பிடிக்காத கல்யாணத்தினை நடத்தியும் வைத்தா. இதெல்லாம் எவ்வளவு மனத்தில் வேதனையைக் கொடுக்கும் தமிழுக்கு. அப்படியான மனநிலையில் இருக்கும் தமிழை சிபீ இழுத்துக் கொண்டு போறானாம், காரினுள் தள்ளி விடுறானாம், வேகமாகக் காரை ஓட்டி அவளைப் பயமுறுத்துகின்றானாம். இப்படியா தமிழை அவள் தகப்பன் பார்த்துக் கொண்டார். எவ்வளவு செல்லமாக வளர்த்தார் அவளை. ஆனால், ஒன்று ஜனாம்மாவை விட தமிழ் உரமானவள். இன்றைக்குப் பொறுத்துப் போகின்றாள் என்று நெடுகவும் சீண்டிப் பார்த்தால் எரிக்கப் படுவது சிபீதான்.

தானும், ஜனாம்மாவும் சேர்ந்துதான் இந்த விளையாட்டினைச் செய்தோம் என்றால், தான் சொன்னவை பொய் என்றும், அதற்கு சாட்சிகள் என்ன என்றும் கேட்டாளே சம்யூத்தா, அதே போல தானும், ஜனாம்மாவும்தான் இவற்றினைச் செய்தோம் என்பதற்கு என்ன சாட்சிகள் இருக்குது என்று தமிழ் கேட்பதற்கு எத்தனை செக்கன்கள் ஆகும்? இந்த நிலை கெதியில் சிபீயிடம் கேட்பாள். அப்போ விளிப்பான் சிபீ.

நிலைமை மோசமாக சம்யூத்தாவின் சொல்லினைக் கேட்டு றொம்ப ஆடும் சிபீக்கு ஜனாம்மா துப்பாக்கியினை எடுத்து வெருட்டினா என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால், தமிழ் அதே துப்பாக்கியினால் சுட்டுக் காட்டுவாள். அடிச்சு வெருட்டுவாள்.

எல்லாப் பொறுப்புகளையும் தமிழிடம் ஜனாம்மா ஒப்படைப்பா. ஆரம்பத்தில், தமிழுக்கு ஒரு உத்தியோகத்தினைக் கொடுத்தா ஜனாம்மா. ஆனால், அவள்தான் இனி ஜனாம்மாவின் வாரிசு. தனக்குத்தான் எல்லாம் என்று சிபீ ஆட வெளிக்கிட, ஜனாம்மா எல்லா சொத்துக்களையும் தமிழுக்கு மாற்றி விடுவா. ஆனால், சிபீயால் எந்த சொத்துகளையும் தமிழின் அனுமதியின்றி ஒரு சதமும் அனுபவிக்க முடியாமல் ஜனாம்மா முடக்குவா.

தின்னக் கூட வழியில்லாத கூட்டம்தான் சம்யூத்தாவும் அவளின் குடும்பமும். இனியும் சம்யூத்தா சிபீயைத்தான் நம்பி இருப்பாள். சொகுசிலும், ஓசிக் காசிலும் ஆடம்பரமாக வாழ்ந்த சம்யூத்தா இனி கஷ்டத்தினை அவளால் அனுபவிக்க முடியாது. ஆனால், சிபீ அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்வான். இதனை தமிழ் கண்டறிந்து எல்லா உதவிகளையும் முடக்கும் விதமாக ஜனாம்மா சொல்லும் முன்பே கட்சிதமாகச் செய்வாள்.

தனக்கே ஒரு சதம் இல்லாமல் இருக்கும் நிலையில் துடிக்கும் காலம் சிபீக்கு கெதியில் வரும். எல்லாக் கணக்குகளையும் தமிழ் முடக்குவாள். சிபீயையும் முடங்க வைப்பாள்.

தமிழ் வேலை செய்த beauty parlour றில் சம்யூத்தா வேலை செய்யத் தொடங்குவா. அவளைக் காண்பாள் தமிழ் ஒருநாள். சம்யூத்தா தனக்கு என்ன செய்தாளோ அதனையே தமிழ் சம்யூத்தாவிற்குச் செய்வாள். எல்லா வேலைத் தளங்களையும் முடக்குவாள், சம்யூத்தாவின் குடும்பம் எங்கும் தலைவைக்கா வண்ணம் செய்வாள். சம்யூத்தாவைத் தாங்கிப் பிடிக்க முடியாதவகையில், சிபீக்கே தனக்கு வழியில்லாத நிலையில், மூஞ்சூறு தான் போக வழியைக் காணாமல் என்ற பழமொழியினை நினைவு கூருங்கள்.

சிபீக்கு இவ்வளவுதான் தமிழுக்குச் செய்ய முடியும். ஆனால், தமிழால் என்னெல்லாம் செய்யலாம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இரு சில sampleகளைச் சொல்கின்றேன். மீதியானவற்றினை நீங்கள் சொல்லுங்கள். இதெல்லாம் ஏன் என்று நினைக்கின்றீர்கள்? தானே தேடிக் கொள்கிறது இதுதானா என்று சொல்கின்றேன் என்றா கேட்கின்றீர்கள்.

தமிழே இப்போ எல்லா கடமைகளுக்கும் பொறுப்பாகின்றாள். மூச்சு விடனும், உள்ளே எடுக்கணும் என்றாலே தமிழைக் கேட்கணும என்றால் பாருங்களன்.

தமிழின் சொற்படிதான் உணவானது எவையெவை என்று தினமும் தீர்மானிக்கப்படும். விரும்பியோ விரும்பாமலோ அவரவர் தருவதைச் சாப்பிடத்தான் வேண்டும். இல்லை, வெளியில் சாப்பிடலாம் என்றால் அவர்களிடம் காசு இருக்காது. அப்படி இல்லையென்றால் அவரவர் வெளியால் ஏதும் வேலை செய்துதான் அதனைச் செய்யலாம். அப்படி வேலை செய்வதற்கும் தமிழின் அனுமதி தேவைப்படும்.
யார் யாரெல்லாம் தமிழுக்கும், அவளின் குடும்பத்திற்கும் அநியாயம் செய்தீர்களோ அவர்களது சாப்பாடு உண்மையாகத் தூய்மையானதாக இருக்குமா? அல்லது ஏதாவது நஞ்சு கலந்திருக்குமா? தெரியவில்லையே! இப்போது இவர்களின் நிலைகளை யோசித்துப் பாருங்கள்.

இன்னமும் நடக்கலாம். சிபீ போன்றவர்களால் குடிக்கலாம், ஆனால், சிபீயால் குடிக்கவும் முடியாது. ஏனென்றால் பணமும் இல்லை. கடனும் கொடுக்க மாட்டார்கள். தமிழை வெருட்டாலாம். அடிக்கலாம். ஆனால், கை தூக்குவதற்கும் பலம் இல்லாமல்தான் இருக்கும் நாள் வரும். எனவேதான், வாய் திறக்கும் முன்பும், கை தூக்கும் முன்னமும் றொம்பவாக யோசிக்க வேண்டும். இது சரியா? பிழையா? நடக்குமா? நடக்காதா?

இன்னமும் இந்தச் சாப்பாடு நல்லதா? கெட்டதா? என்றுகூடத் தெரியவில்லையே! உங்களுக்குத் தெரியுமா?

இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)