posted 19th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீக்கு, ஷியாம் செய்த துரோகங்களை மறந்தான் சிபீ. ஜனாம்மாவிற்கு எதிராக முருங்கை மரத்தில் ஏறிய சிபீ.
- உணர்ச்சிகள் இல்லாத பிறவிகளுக்கு இந்த உலகில் இருக்கத் தகுதி இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் சிபீ.
- ஆனால், ஒரு சந்தேகம், ஷியாம், சிபீயின் நல்ல நண்பன். இந்த கல்யாண விஷயத்தில் ஷியாம், சிபீக்கு உதவியினைச் செய்கின்றாளா?
- குறிஞ்சிநாதனுடன் கைகோத்து நிற்கும் கணேஷன். எப்பதான் குறிஞ்சியினால் ஏமாற்றப்படப் போகின்றானோ தெரியாது. குறிஞ்சி ஒரு business காரனாதலால், அவன் எப்பவும் இலாப – நஷ்டம்தான் பார்ப்பவன்தான். எனவே, இனி ஜனாம்மாவுடன் மோதிச் சரி வராது, நாமே நம்மைத் திருத்திக் கொள்வோம் என்று ஜனாம்மாவுடன் குறிஞ்சி கை கோர்க்க மாட்டான் என்றும் சொல்ல முடியாதா?
- இந்த சீரியலில், வீரா சீரியலானது இன்று ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, இராமச்சந்திரனின் புடைவைக் கடையில்தான் ஜனாம்மா புடவைகள் வாங்குவதால், வீராவும், மாறனும் கல்யாணப் புடவைகள் கொண்டுவரப்பட்டு தெரிவு நடைபெறுகின்றது.
- ஆனால், கல்யாணப் பெண் யார்? ஜனாம்மாவைப் பொறுத்தவரை தமிழ்தான். ஆனால், சிபீ ஜனாம்மாவைத் தாண்டி தன் விருப்பத்திற்கு ஷியாமைக் கல்யாணம் பண்ணினால்?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 18.10.2025
கல்யாணப் புடவைத் தெரிவு நடைபெறுகின்றது. ஆனால், கல்யாணப் பெண் யாரு என்றுதான் இன்னமும் தெரிவின் முடிவு வரவில்லை.
இது மாறனுக்கும், வீராவுக்கமான சந்தேகம் மட்டுமல்ல, பார்வையாளர்களாக உள்ள அனைவருக்கும் உள்ள சந்தேகம்தான். ஒரே குளப்பமாக இருக்கின்றதே!
குறிஞ்சிநாதனிடம் கணேஷன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான், தனக்குத்தான் ஜனாம்மாவின் வீட்டிலே ஒன்றும் இல்லை என்று. ஒரு பெண்பிள்ளையினை வைத்துக் கொண்டு இருந்தால் இப்படித்தான் புலம்ப வேண்டிவரலாம். ஆனால், கணேஷன் செய்யும் அடாவடித்தனத்தினால் அந்த ஆண்டவனே அவனை மன்னிப்பானோ தெரியாது. என்னென்று கடவுளும் உதவவுவதற்கு முன் வருவார்? ஒரு பிள்ளை பிறந்துவிட்டால், அந்தப் பிள்ளைக்காக பெற்றார்கள் வாழ வேண்டும், தவிர, எங்கள் அசைக்காகப் பிள்ளையினைப் பெற்று விட்டு அதனைத் தவிக்கவிடுவதும், விதியின் கையில் ஒப்படைத்து விடுவதும் ஒரு பெற்றாராக இருக்க அவர்களுக்குத் தகுதியே இல்லை.
பிழைகள் செய்யாமல் ஒரு மனிதன் இருக்க மாட்டான். ஆனால், அவனுக்கென ஒரு குடும்பம் வந்து விட்டால், அவன் திருந்த வேண்டும். இல்லையேல் காலம் அவனைத் திருத்தும். ஆனால், இங்கு அமுதாவும் சேர்ந்து கொண்டல்லவா தப்பின் மேல் தப்பு செய்கின்றார்கள்.
கல்யாணத்திற்கு புடவை எடுப்பதற்காக தமிழிடம் வீட்டார் அனைவரையும் கூட்டிவர ஜனாம்மா சொல்லுகையில், தமிழ் வெளிக்கிடும் முன்பே, சிபீ ஜனாம்மாவின் முன்னாலே ஷியாமைக் கூப்பிடுவது என்னதைப் பார்க்கும் போது, இதுதான் சிபீ ஜனாம்மாவின் மேலே வைத்துள்ள அன்பையா வெளிப்படுத்துகின்றது?
இது அடங்காத் தன்மை, ஈட்டிக்குப் போட்டி செய்வது. அதுவும் பாட்டிக்கு எதிராக நிற்பது என்பது, அதுவும் உன்னையே சிறையினுள் வைக்கக் காரணியாக இருந்தவளுடன் சிபீ கல்யாணம் பண்ணுவேன் என்று இருப்பது என்பது – அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது.
ஆனால், ஒரு சந்தேகம் தொக்கு நிற்கின்றது. அதாவது, ஷியாம், சிபீயின் உண்மையானதும், நல்ல நண்பியும் கூட. இதனால், ஷியாமை வைத்து சிபீ ஒரு விளையாட்டினைக் காட்டுகின்றானோ? அதாவது, சிபீ ஏற்கனவே சொல்லிவிட்டான், தான் நண்பன்தான். ஆனால், கல்யாணம் பண்ணும் அளவிற்கல்ல என்று. ஆனால் இப்போ கல்யாணம் பண்ணப் போகின்றேன் என்று சொல்லுவதுதான் உதைக்கின்றது.
சிபீக்கு தமிழில் ஏற்கனவே ஒரு கண் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவன் வெளிக் காட்டவி்ல்லை. ஒரு ego பிரச்சனையாக முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கின்றான். ஆனால், இப்போ தமிழுக்கும் தெரியும் சிபீ தன்னை விரும்பவில்லை என்று. இதனை அத்திவாரமாக வைத்து தமிழைப் பல வழிகளில் அணுகியும் இருக்கின்றான். இரண்டு முறை நன்றியும் கூறுகின்றான். அதனையும் உதாசீனம் செய்கின்றாள், தமிழ். ஆனால், சிபீ நன்றியினைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், தமிழின் கண்களில் அந்த காதலின் ஏக்கம் தெரிந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது. அதனையும் சிபீ உணர்ந்திருப்பான் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
அத்துடன், சிபீ நினைத்திருக்கலாம், தமிழ் தன்னிடம் முன்னைய மாதிரி அவளது காதலை வெளிப்படுத்தட்டும் என்று. அது சிபீ, ஷியாமுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டாகவும் இருக்கலாம்.
ஆனால், இதில் ஒரு சிக்கலும் வரலாம். அதாவது, ஷியாம் இதனால் சிபீ மேலே காதல் கொண்டால்?
விளையாட்டு கடைசியில் ஒன்றாய் முடியும் என்று சொல்லுவார்களே!
ஜனாம்மா அடி மட்டத்திலிருந்து அடிபட்டு மேலுக்கு வளர்ந்து வந்தவ. இதனால், வாழ்க்கையில் நெழிவு, சுழிவுகளை எல்லாம் பார்த்து, அனுபவித்து, அடித்துத் தூக்கி எறிந்துவிட்டு வந்தவ. இவர்களின் வயசுகளை விட அனுபவித்தினை படிப்படியாகப் பெற்றுக் கொண்டவவும் கூட. எனவே, இவவுக்கு தமிழ் நெடுகலும் பொய் சொல்ல முடியாது. அத்துடன், சாறிகள் தெரிவிலும், சிபீ உன் அம்மா எங்கே என்று தேனுவிடம் கேட்கின்றான். இதனால், ஜனாம்மாவுக்குச் சந்தேகம் வந்து கொண்டிருக்கின்றது, தமிழின் அம்மா எங்கே? ஏன் அவ எதற்கும் முன்னுக்கு வருகிறா இல்லை. அது மட்டுமல்லாமல், மீனா தமிழின் அம்மாவைப்பற்றி சொன்னது பிழையாகவும் இருக்காது. இதனால், ஜனாம்மா, இப்போ தமிழின் அம்மாவாக நடிக்கும் ஹசீனாவைப்பற்றி விசாரி்க்க மாட்டா என்று என்ன நிட்சயம்? ஆனால் ஒன்று, ஜனாம்மாவின் அமைதிக்கு தமிழில் ஜனாம்மா வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்றும் சொல்லலாம்.
கணேஷனோ, குறிஞ்சியிடம் தனது மகளின் வாழ்க்கையினை ஒப்படைத்துள்ளான். இதனால், ஷியாமைக் கடத்துவதாக வெண்பா கடத்தப்படுவாளா? அத்தடன், இதில் தமிழைக் கடத்துவதென்று பிறேம் தனது தங்கை ஷியாமையே கடத்துவானா? இதனால் தமிழ்தான் கடைசியில் விடுபடுவாளா? தமிழும் ஜனாம்மாவின் சொல்லைத் தட்ட முடியாமல், அவளுக்கு சிபீ மேலே விருப்பம் இருந்தாலும், சிபீக்குத் தன்மேலே விருப்பம் இல்லையென்று தெரிந்தும் கல்யாண மேடையில் உட்காருவாளா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!