posted 18th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- வர்ஷினியையும், ஷியாமையும் பார்த்து தொடர்ந்து பயத்தில் ஓடும் சிபீ. திருப்பியும் சொல்கின்றேன், இவ்வாறு சிபீதான் தானாகவே ஓடுகின்றானா அல்லது இது அம்மனின் விளையாட்டுகளில் ஒன்றா?
- கயிறிழுத்தல் போட்டியிலே உரிமையுடன் தானாகச் சேர்ந்த உறவுகள். ஜனாம்மாவின் பரம்பரையினை வெற்றி பெறவைத்தனர். இந்த உறவுகள் எதையுமே எதிர்பார்க்காதவர்கள் – அன்பினைத் தவிர. ஆனால், எல்லாரும் அப்படி இல்லையே – தங்கள் காரியம் ஆவதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யும் உறவுகளையும் இந்த இடத்தில் மறக்க முடியாதே!
- ஜனாம்மாவைத் தூற்றும் ஒருசில கிராமத்தவருக்குப் பாடம் படிப்பித்த அம்மனின் சாட்சி. அதுவும், தமிழின் மேலே இறங்கிய அம்மாளாச்சி. இனி அம்மனின் ஆட்டத்தினைப் பார்க்கத்தானே போகின்றோம்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 18.08.2025
ஓடி ஒழிக்க வேண்டிய சூழ்நிலையிலே சிபீ. சிபீயை வர்ஷினியிடமும், ஷியாமிடமும் காட்டிக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும் முறைப் பெண்ணான தமிழ். இது அவளின் ஆட்டம் – ஆனால், இதெல்லாம் அவள் காட்டும் ஒரு sample ஆட்டம்தான்.
தமிழினை, இந்தப் பெண் யாரு என்ற கேள்விக்கு இது என் பேத்தி என்று ஊரறிய உறுதியுடன் அறிவித்த ஜனாம்மா.
அதற்கு ஆதரவாக அதுமட்டுமல்லாமல் அதுதான் உண்மை என்பதனை நிரூபிப்பதாக தமிழில் இறங்கிய அம்மன் சொன்ன வாக்கு. இதை இனி யாராலே தாண்டமுடியும்? தாண்ட நினைத்துப் பாருங்களன், பார்ப்போம்.
தாயினைக் கண்டு ஒழிந்து ஒழிந்து நின்று கொண்டிருக்கும் தமிழின் அம்மா, அம்மு. கயிறிழுத்தலில் தோற்றுப் போகும் நிலைமையிலே கை கொடுத்து இழுத்தெறிந்து எதிரிகளை மண் கவ்வ வைத்தா அம்மு. இதைத்தான் இரத்த உறவு என்பது. இது எங்க எல்லா உறவுகளுக்கும் விளக்கப் போகின்றது? விளங்கிற்றாலும்.
தங்களுக்கு, தேவையான நேரம் ஒட்டிக் கொண்டு நின்று, பின்பு, தாங்கள் எதைப் பிடித்து ஏறினார்களோ, அதே ஏணியினை காலால் எட்டி உதைத்து விட்டுப் போய்க் கொண்டிருக்கும் உறவுகளைத்தான் இப்போதைய கால கட்டத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஜனாகாம்பாள் முதுமை அடைந்து விட்டாவே என்று அடக்கியாளத் திட்டத்தின் மேல் திட்டம் போட்டு அவவைக் கூண்டோடு அழிப்பதற்காக ஒட்டியிருக்கும் உறவுகள் ஒருபக்கம், இதனை விட, அவவுடன் கூடவிருந்து அவவுக்கு உரமிட்டு, பலத்தினைக் கூட்டி தாங்கி நிற்கும் உறவுகள் மறுபக்கம். இதில், முதலான group பினைச் சேர்ந்தவர்கள்தான், கணேஷனின் குடும்பம். இரண்டாவதாக உள்ளவர்கள்தான், சிபீயினதும், தமிழினதும் குடும்பங்கள்.
மகளின் துரோகத்தினால், கிராமத்தினை விட்டு நகரினை நாடிச் சென்றவதான் ஜனாம்மா. இத்தனை வருடங்கள் தாண்டியும் தனது கிராமத்திலே காலடி பதிக்காத ஜனாம்மா, கோவில் பூசாரி சொன்ன கனவினை நம்பியும், கிராமத்திலிருந்து வருகை தந்த பெரியவர்களின் ஆழைப்பினை நம்பியும், மீனாவின் வார்த்தைகளான இது தெய்வ காரியம் அத்தை, இதனை உதாசீனம் செய்யக்கூடாது என்று சொன்னதினாலும், அதைவிட இது அம்மனின் அழைப்பு என்று நம்பி அந்தக் கிராமத்திலே காலைப் பதித்தா ஜனாம்மா. இதற்குப் பின்னால் கணேஷனின் சூழ்ச்சி இருக்கின்றதென்று தெரியாத ஜனாம்மா, அந்தத் தெய்வம் அம்மாளாச்சியினை முழுதாக நம்பித்தான் அங்கு வந்தா.
ஆனால், அநேகமான கிராமத்தவர்கள் ஜனாம்மாவை வரவேற்றாலும், ஒரு சிலர் மகளின் கதையினைச் சொல்லிச் சொல்லி அவவின் மனதினைச் சுக்கு நூறாக்கின்றனர். இது, எங்கள் சமுதாயத்திலே, அதாவது, எங்களோடே ஒட்டிப் பிறந்தது. அதாவது, எங்களுடைய நிறமூர்த்தத்திலேயே ஒரு ஜீனாக இருக்குமோ தெரியாது. எந்த நல்ல விஷயங்களை ஒரு நாளும் சொல்லாத அல்லது சொல்ல விரும்பாத நாம், எங்கே ஒருவரின் குறை இருக்கின்றதோ அதனேயே குறியாக வைத்து எங்கங்கே சொல்ல முடியுமோ அங்கேயெல்லாம் சொல்லி ஒன்றில்லை என்று செய்துவிடுவோமல்லவா? அதுதான் இது. இதுதான் அது.
இனி என்ன நடக்கும் என்பனவற்றினைப் பார்ப்போம்.
- ஜனாம்மா, தமிழை தன் பேத்தியென்று சொன்னதும் ஏங்கிப் போய் நின்றனர் உறவுகள் அனைவரும். அதனாலோ என்னவோ பேத்தி மாதிரி என்றும் சொன்னா. இதனை உறுதிப்படுத்தியது, தமிழில் இறங்கிய அம்மாளாச்சி. இதனால், இனி ஊரினிலே என்னென்ன பிரச்சனைகள் வருமோ தெரியாது.
- ஷியாம் தனது முயற்சியான, சிபீயினை மணம் முடித்து அவனுடைய சொத்தினை ஆட்டையப் போட்டுவிட வேண்டுமென்றதில் றொம்ப நிதானமாக இருக்கின்றாள். இதனை என்னென்று சிபீ face பண்ணப் போகின்றானோ தெரியவில்லை. ஆனால், இதனை வெகு சுலபமாகச் செய்து முடிப்பாள் தமிழ். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது மிகவும் கஷ்டமான வாழ்க்கையின் பிரச்சனைகளாக அமையும் தமிழுக்கு.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!