posted 15th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கிராமத்திலே இரு குடும்பங்களும் கிட்டத்தட்ட சந்தித்துக் கொண்ட மாதிரி. கிட்ட வந்தவர்கள் தள்ளிப் போய்விட்டார்கள்.
- இந்தப் பொங்கல் எல்லா மருமகள்களும்தான் வைக்க வேண்டும். ஆனால், கேடீ சொன்னது, அம்மனின் வாக்கா என்று கூட இங்கு சிந்திக்கத் தோன்றுகின்றது. கேடீ சொன்னதாவது, யாருடைய பொங்கல் முதலில் பொங்குகின்றதோ அவங்களைத்தான் சிபீ கல்யாணம் பண்ணிக் கொள்ளுவார் என்பதுதான். இந்த செய்தியினைத் தமிழ் கேட்கையிலே, தமிழின் முகம் ஒருவாறாக மாறியதனைக் காணக்கூடியதாக இருந்தது. அப்போ தமிழின் மனதில் சிபீயினைப் பற்றிய ஒரு idea இருந்ததோ! பார்ப்போம்.
- நீயம்மா போன பின்னால ஜனாம்மாவிடம் சிரிப்பையே நான் இதுவரையும் காணவில்லை என்று முத்தம்மா, தமிழின் அம்மாவிடம் சொன்னா – அதைத் தமிழும் கேட்டுவிட்டா.
- முதலாவதாக மீனாவே பொங்கல் வைத்தா. அவதான் மூத்த மருமகள். இரண்டாவதாக, வெண்பா வைத்தா. மூன்றாவதாக, ஷியாம் வைத்தா பொங்கலினை. ஷியாமுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. ஆனால், பொங்கல் வைக்க விடப்பட்டா. இந்த மூவரும் தாங்களாகவே கேட்டு பொங்கலினை வைத்தனர். ஆனால், தமிழுக்கோ அது தானானகவே அமைந்தது.
- நீ இந்த வீட்டிற்குள்ளே வரும்போதே என்னுடைய மனதிலே பட்டது, உனக்கும் – இந்தக் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கின்றது என்று முத்தம்மா சொன்னதை ஜனாம்மா கேட்டுவிட்டா.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 14.08.2025
கேடீ சொன்னது தமிழின் மனதினில் ஒரு கீறலினை உண்டாக்கியதாலோ என்னவோ தமிழின் முகத்திலே ஒரு கவலை தோய்ந்திருப்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது. பொங்கல் பொங்குவதற்குக் கூட தனக்கு இடமில்லாமல் போய் விட்டது என்று மனதினில் யோசிக்கையிலே, ஜனாம்மா தமிழினை பொங்கும்படி சொல்லுகையில் தமிழ் வேறொரு காரணம் சொல்லி, ஜனாம்மாவின் குடும்பக் காரியமல்லவா என்று தட்டிக் கழித்து விட்டா.
தமிழ் இதனைத் தட்டிக்கழித்தாலும், இவை மனிதரின் நினைப்புகளும், முடிவுகளும் மட்டும்தான். ஆனால், அம்மனின் திட்டத்தினையும், முடிவினையும் இந்த மனிதப் படைப்பினாலோ அல்லது எந்த ஜீவராசிகளாலோ அறிந்திடவோ, விளங்கிக் கொள்ளவோ அல்லது சிந்தித்துப் பார்க்கவோ முடியவே முடியாது.
மீனாவும், ஷியாமும், வெண்பாவும் தாங்களாகவே இந்தப் பொங்கலினை வைக்க முன் வந்தார்கள். ஆனால், தமிழுக்குச் சந்தர்ப்பம் தானாகவே வந்தது. அதை மனமில்லாதமாதிரித் தட்டிக் கழித்தாள்.
ஆனால் நடந்ததுதான் என்ன? மீனாவுக்கு கண்ணுக்குள் தூசி போய் விட்டது. தன்னால் பொங்கல் வைக்க முடியவில்லை என்று மீனாவே எழும்பிவிட்டா. வெண்பாவும், ஷியாமும் அவர்களுகுள்ளேயே ஒருவருக்கொருவர் சண்டையினைப் பிடித்து அவரவர் தலைமேலே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
இது, கோவில் விவகாரம். ஆன்மாவுடன் சம்பந்தப்பட்டது. இதனை, அமைதியாகவும், ஆன்ம ரீதியாகவும், பக்தியுடனும் செய்ய வேண்டியது. அதுமட்டுமா, இதில் சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்று அந்த அம்மனுக்கே நன்றி சொல்லி விட்டு, அந்த அம்மனை மனதினுள் இறக்கிக் கொண்டு இதனைச் செய்வதனை விட்டு, வஞ்சகமும், வன்மமும், கொடூர மனத்துடனும் இந்தக் கோயில் காரியங்களைச் செய்கின்றனர்.
அடுத்தபக்கம், கணேஷன், தனது கள்ளக்கோஷ்டியுடன் கூடி ஜனாம்மாவின் சொத்தினை அபகரிக்க, அதே கோவில் வளவுக்குளே கூடிக் கதைக்கின்றான். உண்ட வீட்டிற்கு ஒருவிதமான மனக் கூச்சமும் இல்லாமல் இவன் செய்வது தெய்வத்திற்கே அடுக்குமா?
தமிழின் பொங்கலோ வடக்கு திசை நோக்கிப் பொங்கியது – ஜனாம்மாவின் கருத்து இனி தமிழ் உனக்கு நடக்கப் போவதெல்லாம் வெற்றியாகத்தான் அமையும். இதுவும் ஒரு தெய்வத்தின் வாக்கோ?
இப்போது தமிழ் யாரென்று ஒரளவுக்கு தமிழுக்குத் தெரிந்து விட்டது. அதன் வேர் தனது அம்மாவிடம் இருக்கின்றது என்றும், அதனை விட, வீட்டில் வேலைக்கு இருக்கும் முத்தம்மாவுக்கு எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும் என்பது இப்போது தமிழுக்குத் தெரிந்து விட்டது.
ஜனாம்மாவிற்குத் தெரிந்தது நுனி மட்டும், ஆனால், தமிழுக்குத் தெரிந்து விட்டது, தனது அம்மாதான் ஜனாம்மாவின் மகள் என்பது. ஆனால், இது எப்படி ஜனாம்மாவிற்கு முளுக்கவும் தெரியப் போகின்றது? இதனை யார் சொல்லுவார்?
இப்போது தமிழுக்குத் தெரிந்து விட்டது – ஜனாம்மாவிற்கும், தனக்கும், சிபீக்கும் என்ன உறவு என்பது.
இவ்வளவினைத் தெரிய வைத்த அந்த அம்மனுக்கு மிச்சத்தினைத் தெரிய வைக்க எவ்வளவு நேரம் செல்லும்?
ஆனால், இங்கே ஒரு பெரிய சிக்கலே இருக்கின்றதே! இப்போ, ஜனாம்மாவிற்கு தமிழ் யார் என்று, அதாவது, தனது மகளின் பிள்ளை என்று தெரிவது முன்னிற்கு அவவின் மனதில் தோன்றுமா? அல்லது, இது தங்கள் வீட்டிலே வேலை செய்த றைவரின் மகள் என்று அவவின் மனதினில் முன்வந்து கோபத்தினைகை கூட்டுமா? அல்லது இவர்கள் இருவரும் செய்த துரோகம் எல்லாமே முன்வந்து கொழுந்துவிட்டு எரியுமா? இப்படி ஏதாவது, ஒன்று வந்தாலே காணும் ஜனாம்மாவிற்குத் தமிழினை வெறுப்பதற்கு.
ஆனால், தமிழ் என்ன பாவம் செய்தாள் தனக்கு என்று ஜனாம்மாவின் மனதினில் ஒரு ஓரமாக அரும்பும் நிலைமையும் வரலாம். ஏனென்றால், தமிழை ஜனாம்மா தனது பேத்தியாக தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லையே! தான் றோட்டினிலே மயங்கி விழுகையில் தன்னை ஏந்திப் பிடித்தவள், தனக்கு உணவினை ஊட்டி விட்டவள், தன் மனதினில் ஏற்பட்ட கவலையினைப் போக்கியவள் என்று எத்தனையோ விஷயங்கள் தமிழ் தான் யாரென்று தெரியாமலே ஜனாம்மாவிற்குச் செய்தவள். அத்துடன், முக்கியமானது, ஒன்றுமே ஜனாம்மாவிடம் இருந்து அவள் எதிர்பார்க்காமலே எல்லாம் செய்தாள்.
ஆனால், கணேஷனைப் பாருங்கள், என்ன துரோகம் எல்லாம் செய்கின்றான் என்று.
இனி என்ன நடக்கும் என்பனவற்றினைப் பார்ப்போம்.
- ஜனாம்மா, முத்தம்மாவிடம் ஆராய வெளிக்கிடுவா. ஆராய்ந்து உண்மையினைக் கண்டறிவா, தமிழுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று.
- தமிழ் தனது பேத்தி என்று தெரிந்ததம் – இது ஒரு பாவச் சோதனையாக யோசிப்பாவா? இல்லை – தமிழினைக் கட்டியணைப்பா. உடனே தமிழின் வீட்டிற்குப் போக வெளிக்கிடுவா, ஜனாம்மா.
- இன்னமும் மகளின் மீதான கோபத்தில் இருப்பாவா, ஜனாம்மா? – கோபம் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக்க கம்மியாகத்தான் இருக்கும்.
- கோவிலை விட்டுப் போகும் முன்பு ஏதாவது அந்நியோன்யம் சிபீக்கும், தமிழுக்கும் வருமா – வாய்ப்புகள் உண்டு – ஆனால், அவ்வளவு முழுவதுமாக அல்ல.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!