Varisu - வாரிசு - 13.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • கிராமத்திற்குக் கிளம்பிய இரு குடும்பங்களும். ஏன் இவர்கள் ஒரே கிராமத்திற்குப் போகின்றனர்? ஆச்சரியமாக இருக்கின்றது. நான் நேற்றுக் குறிப்பிட்டது போல, இந்த குல தெய்வக் கோயில் அழைப்பானது தெய்வத்தின் ஆட்டம். அது இங்கு சரியாக உள்ளது. தமிழுக்கும் – ஜானம்மாவுக்கும் உள்ள இணக்கப்பாடு வெளிக்கின்றது. அல்லது தமிழுக்கும் சிபீக்குமான இணக்கப்பாடு அதுவும் வெளிக்கின்றது. அடுத்தது, கணேஷனின் கள்ளத் திட்டமாக இருக்கும் அந்தக் காணியினை அபகரிப்பதற்கு. இது அந்தத் தெய்வத்தின் ஆட்டம் – அதுவும் கணேஷனைக் கருவியாக வைத்து.
  • கணேஷனுக்குக் கோள் வந்தது – கிரமத்தார்களும், பூசாரியும் வந்தது – இந்நிகழ்வு கணேஷனின் குள்ளத்தனமான திட்டமானதாக இருந்தாலும், அதை ஆட வைப்பது அந்த தெய்வம், அம்மன்தான்.
  • கிராமத்தின் வாசனையினை நுகரும் தமிழும், ஜனாம்மாவும். இவ்வாறிக்கையில் தமிழுக்குள்ள ஒரு கேள்வி இது எங்கள் தாத்தாவின் ஊர், ஆனால், ஜனாம்மாவும் சொல்கின்றா இங்கதான் தான் பிறந்து வளர்ந்தது என்று. அப்படியானால், ஜனாம்மா யாரு?

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 13.08.2025

கணேஷனின் குள்ளத்தனம் எந்தளவுக்கு ஓடப் போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், சிபீயின் அப்பா, ஜனாம்மாவின் மகன், மீனாவின் புருஷன், பிரகாஷ், உடைய இந்த நிலைமைக்கும், கணேஷனுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்று ஒரு சந்தேகம் இங்கு உருவாகின்றது. அதாவது, பிரகாஷின் விபத்தினை உண்டாக்கியதே கணேஷனாக இருக்குமோ என்ற சந்தேகம் இப்போ வருகின்றது.

அதே மாதிரியான ஒரு நிகழ்வினை இப்போது ஜனாம்மாவிற்கு நிகழ்த்துவற்காக கணேஷன் ஏற்பாடு செய்திருக்கின்றானோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.

இதைவிட, தமிழின் அம்மா இடைக்கிடை, தனக்கு ஜனாம்மாவைத் தெரிந்தவ போன்று ஒரு சில கதைகளைத் தன்னை அறியாமலே சொல்லியிருப்பதனையும் இந்தப் பயணத்திலே நினைவு கூர்ந்தாள் தமிழ்.

இன்றைக்கு அம்மாவும் தாத்தாவின் கிராமத்துக்குத்தானே வருகின்றா. அப்போ எங்கள் தாத்தாவுக்கும், எங்களுக்கும், ஜனாமாவிற்கும் என்ன தொடர்பு? என்பதனை தமிழின் மூளையின் ஒரு பகுதியில் ஓடத் தொடங்கியது. இவ்வாறு யோசிக்கையில் தமிழ் இடைக்கிடை ஏதோ யோசனையில் இருப்பதை, ஜனாம்மா குறுக்கிட்டுக் குளப்பினா.

எனக்கு விளங்கியது, ஜனாம்மாவுக்கு எங்கள் தாத்தா அப்பா என்பதுவும், எங்கள் அம்மா ஜனாம்மாவின் மகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தது தமிழுக்கு. ஜனாம்மாவிற்கு துரோகம் செய்து கல்யாணம் பண்ணியது எனது அம்மாவா? அப்போது, ஜனாம்மா, எனக்கு? பாட்டியா? ஐயோ ஒரே குளப்பமாக இருக்கின்றதே? அப்போது சிபீ சார், எனக்கு, மாமாவா. முறை மாமாவா?

என்ன தமிழ் இடைக்கிடை எங்கேயோ யோசனையில் போய்க் கொண்டிருக்கின்றாய் என்று ஜனாம்மா கேட்கையிலே, தமிழின் கண்களில் அந்த உறவின் பாசம் வெளிவருவதனை ஜனாம்மா உணர்ந்தா. என்ன தமிழ்? என்றா ஜனாம்மா. உங்கட தோளிலில சாய்ந்து கொள்ளவா என்று கேட்டாள் தமிழ். இதற்கு ஏன் யோசிக்கின்றாய்? ஏன் கேட்கின்றாய்? சாய்ந்து கொள்ளு என்று ஜனாம்மாவே தமிழைத் தன் தோளிலிலே சாய்த்துக் கொண்டா.

அதுமட்டுமல்லாமல், தமிழின் அம்மாவும், தேனுவும், இசையும், தமிழின் வீட்டு அன்ரி அங்கு வருவார்கள் என்று தமிழுக்கு ஏற்கனவே தெரியும். தமிழின் மடம், ஜனாம்மா தனது தாய் என்று ஏற்கனவே தமிழின் அம்மா ஜன்னலுக்குள்ளால பார்த்தவதானே. அப்போ ஜனாம்மா வருகின்றா என்று தமிழின் அம்மாவிற்குத் தெரியும்தானே!

தேனுவின் சுற்றுவட்டாரத்தினை இப்போது பார்க்கலாம்தானே! தேனு collegeக்குப் போகின்றாவா என்ற சந்தேகம் இப்போது தோன்றுகின்றது. அது மட்டுமா, தேனுவின் lover தான் எல்லா friendsக்கும் பரிசுகள் வாங்கிக் கொடுக்கிறனான் என்று அவனே சொல்லுகையில், தேனுவுக்கு விளங்கவில்லையா? தேனுவுக்கு விளங்காது. ஏனென்றால் அவதான் அவனுடைய மயக்கத்தில் இருக்கின்றாவே! தேனுக்கு கடைசிக் கட்டத்தில்தான் அவனுடைய வசனங்கள் விளங்கும் – அது மட்டும் தேனு அவனுடைய மோகத்தில்தான் இருப்பாள். உனக்கு எரிச்சல் என்றும், நான் collegeக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் நான் வீட்டிலே இருக்கின்றேன். அல்லது, படிப்பினை நிற்பாட்டி விட்டு ஏதாவது கடைகளில வேலை செய்யச் சொல்கின்றியா என்று தனது அக்கா என்று கூட ஒரு மதிப்பும் கணிப்பும் இல்லாமல் வாகூசாமல் தேனு சொல்வது எல்லாம் அவவுக்குக் கெதியில் நடக்கும்.
இதெல்லாம் பார்க்கத்தானே போகின்றோம்.

இனி என்ன நடக்கும் என்பனவற்றினை நான் மேலே ஏற்கனவே சொல்லி விட்டேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!