posted 17th July 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
பொறுத்திருங்கள் – உங்கள் வாழ்க்கையின் பிரகாசம் வராமல் எங்கு போகும்?
இது வரைக்குமான வாரிசு தமிழ் சீரியலானது, பிரபுவை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், இதுவரைக்குமான கட்டங்களில் பிரபு தனது குள்ளத்தனத்தினால் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றான். ஆனால், இப்போது மிகவும் தமிழின் பிடிக்குள் நெருங்கி விட்டான். எந்த நிமிஷத்திலும் பிரபு கையும் களவுமாக பிடிபடலாம். தனது மகள் வர்ஷினியின் கல்யாணத்திற்காக, தமிழையே நம்பாமல் உதாசீனம் செய்த பிரகாஷ். நொந்து நொருங்கினாள் தமிழ். ஆதரவாக அணைத்துக் கொண்டான் தமிழை, சிபீ. சிபீயின் உள்ளுணர்வு உயிர்த்தது.
Varisu - வாரிசு - 13.07.2026
பிரபு கட்சிதமாக காயை நகர்த்துகின்றான். அதனைத் தெரிந்தும் தமிழ் தொடர்ந்தும் கவலையீனமாக தான் நினைத்ததைச் சாதிக்கத் தவறுகின்றாள் என்று பல இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும் புலனாகின்றது. பிரபுவின் குள்ளத்தனத்தினை ஒரு முயற்சியில் தவறவிட்ட தமிழ், அடுத்த முயற்சியில் கொஞ்சம் வேறு மாதிரியாக முயற்சி செய்திருக்க வேண்டும். இதுவரைக்கும் தமிழின் முயற்சிகளானது ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. அதனால், தமிழைத் தோற்கடிப்பதற்கு பிரபுவிற்கு இலகுவாகவே அமைகின்றது.
அது மட்டுமல்லாமல், பிரபுவைப் பிடிக்க வேண்டும் என்று திட சங்கர்பம் பூண்டால் மட்டுமோ, ஜனாம்மாவிலும், சிபீயிலும் சத்தியம் பண்ணினால் மட்டும் போதாது. எப்பவும் தமிழ் அந்த நினைவுடனேதான் இருக்க வேண்டும். ஆனால், அதனை மற்றவர்களுக்குக் காண்பிக்கக் கூடாது.
துப்புப் பார்க்கப் போன பொலிஸ் அதிகாரி மித்திரனைக் காணவில்லை. அதைப் பற்றி தமிழ் சிபீயிடம் கதைத்தாலும், என்ன நடந்து விட்டது மித்திரனுக்கு என்பதில், ஒருவிதமான அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மி்த்திரனின் பாதுகாப்பும் தனக்கு முக்கியம் என்று தமிழ் மித்திரனிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்ததால் அதற்கேற்றவாறு தமிழின் வேகம் குறைவாக இருப்பது என்பது புலனாகின்றது.
அப்பா நிற்கின்றார் என்றால், பிரச்சினைகள் தமிழைச் சூழ்ந்திருக்கையிலே, அது யாரிடம் இருந்து அந்தக் கோள் வந்தது என்று கூட தீர விசாரிக்காமல், தமிழ் சிபீயுடன் குடோனுக்குப் போனது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில், எல்லாவிதத்திலும், எல்லா கோணத்திலும் ஆராய்ந்து அறியாமல் கால் வைத்தது மிகவும் கவலையீனமாகத் தமிழ் இருப்பதாகத் தோன்றுகின்றது.
அதுமட்டுமல்லாமல், சிபீயும் வருவான் தமிழுடன் என்றும், தமிழிலே கோபமாக உள்ள பிரபு ஏன் தீயினை உண்டாக்க வேண்டும்? தீயினால், அதிலிருந்து எழும் புகையானது சிபீக்கு ஒத்து வராதது என்று பிரபு நன்கு அறிந்து வைத்திருக்கையிலே, தமிழ் இதனைத் தவற விட்டதானது வர்ஷினியின் வாழ்க்கைக்கு வரவுள்ள ஆபத்தாகத்தினைத் தடுப்பதற்கு chances கம்மி என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
மகனா? மருமகளா? என்று இருவரையும் ஒத்துப் பார்த்தால், மீனாவின் வீட்டில் சிபீயின் மேலுள்ள கருசனையானது மிகவும் உயர்ந்திருக்கும். அதுதான் இப்போது இங்கு நடைபெறுகின்றது. இதனையும் தமிழ் நினைவில் கூர வேண்டிய நிலையில் உள்ளாள்.
ஆனால், ஜனாம்மா கடவுளுக்கு அடுத்ததாகத் தமிழைத்தான் மிகவும் நம்புகின்றா, அவளால்தான் வர்ஷியின் கல்யாணம் நிறுத்தப்படும் என்று. ஆனால், தமிழின் போக்கானது மிகவும் பெலவீனமாக இருக்கின்றதே!
பிரகாஷ் தனது தாய் மாமன் என்று மட்டுமல்ல, ஒருவர் யாராக இருந்தாலும் உதவுவது என்பது தமிழின் இரத்தத்தில் ஊறியுள்ளது. அப்போ, பிரகாஷிற்கு எவ்வளவு உணர்வுடன் அவரது 20 வருடகால கோமா நிலையிலிருந்து தமிழ் மீட்டெடுத்திருப்பாள். அந்த நன்றியில் 1 வீதமாகக் கூட பிரகாஷிற்கு இருக்கவில்லையே!
தனது மகள் வர்ஷினியின் கல்யாண விஷயத்தில் எவரின் அபிப்பராயமும் தனக்குத் தேவையில்லை என்று பிரகாஷ் என்னென்று கூறலாம். பிரகாஷ் தான் எவரினதும் சொல்லினைக் கேட்க மாட்டேன், கல்யாணத்தினை நிறுத்தவும் மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக குடும்பத்தின் முன்னால், மறைமுகமாகத் தமிழைச் சுட்டிச் சொன்னது, தமிழை உதாசீனம் செய்தது, தமிழை நம்பாமல் விட்டது, தமிழுக்கு மிகவும் வேதனையினை உருவாக்கி விட்டது.
அறையினுள் அழுது தீர்த்தாள் தமிழ். அவளுக்கு ஆதரவாக தனது புருஷன் கூட பக்கத்தில் இல்லை என்ற வேதனை அவளுக்கு மறுபுறம். ஆனால், தமிழ் எதிர் பார்க்காத நேரத்தில் சிபீ அறையினுள் வந்தான், தமிழைத் தட்டிக் கொடுத்தான், கட்டி அணைத்தான். அது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அப்படியே சிபீயின் மடியினிலே அயர்ந்து விட்டாள்.
மனச்சாட்சியானது ஒருவருக்கு அவரின் வாழ்க்கையில் வேலை செய்தே ஆகும். அப்படியாகத்தான் இன்று சிபீக்கு வேலை செய்யத் தொடங்கியது. தமிழின் அன்பினைப் பற்றி ஒரு விதத்திலும் கணக்கில் இடாமல் அசட்டை செய்து கொண்டிருந்தவன்தான் சிபீ. இன்று அவனின் மனச்சாட்சியானது உறுத்தியது. அவன் தமிழுக்குச் செய்த பிழையினை சுட்டிக் காட்டியது. உணர வைத்தது.
மனிதன் பிரிக்க நினைக்கின்றான். சிபீக்கும், தமிழுக்குமான முடிச்சு கடவுளால் போடப்பட்டது. தமிழைக் கல்யாணம் பண்ணுகின்றேன் என்று மணமேடைக்குத் தமிழைக் கொண்டு வந்த பிறேம், அங்கேயே அம்போ என்று கைவிட்டு, அவளது கையினை உதறி விட்டுப் போனான் என்ற கொடுமையினைத் தாங்காதவளாயும், அன்றே தனது தகப்பன் இல்லாமல் போய் விட்டார் என்ற கவலையினை பொறுக்க முடியாமலும் தமிழ் துவண்டு போய் இருக்கையிலே, தகப்பன் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையினில் றோட்டிற்கு வந்தாள் தமிழ். ஒன்றும் இல்லாமல் போனாள் ஒரு இரவினிலே. தனியாக அவள் தனது குடும்பத்தினைச் சுமப்பதற்கு தயாரானாள்.
இதெல்லாம், மனிதர் போட்ட கணக்கு. ஆனால், கடவுளின் கணக்கு எப்படி இருந்தது என்பது இப்போது அனைவருக்கும் விளங்கி இருக்கும்.
செல்லப் பிள்ளையாக இருந்தவளின் வாழ்க்கையானது பிரளயமானது. பலவிதமான இன்னல்களை அமைதியாக அனுபவித்தாள், வெற்றியுடன் கடந்தும் வந்தாள். இப்படி எத்தனை பேருடைய வாழ்க்கையானது அவர்களுக்கு சவாலாக இருந்திருக்கும், ஏன் இப்பவும் இருந்து கொண்டே இருக்கும்.
இன்று தமிழின் வாழ்க்கைக்கு விளக்கு எரியத் தொடங்கவில்லையா? அதே போல் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பிரகாசமாகும் என்று சொல்லுகின்றது இந்த குறுந்திரைச் சித்திரம்.
அனைவரும், இந்தச் சித்திரத்தினை சுவாரசியமாகப் பார்ப்பதுமல்லாமல், அதில் வரும் வெளிச்சத்தினைப் பாருங்கள், அது சொல்லும் செய்தியினைக் கேளுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!