posted 12th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஷியாம், குளிர் பானத்தினுள் விஸ்கியினை ஊற்றினேன்தான் என்று ஒத்துக் கொண்டதனால் கோபம் கொண்டு அறையினை விட்டு திரத்தப்பட்டாள்.
- சிபீ தோற்க வேண்டும் என்று நண்பியாய் இருந்த ஷியாம் நினைக்கையிலே, எதிரியாக நினைக்கப்படும் தமிழ் மதுவின் வீரியத்தினைக் குறைத்து போட்டியில் வெற்றிவாகை சூட்ட வைத்தாள்.
- கணேஷன் ஜனாவிற்குத் தெரியாமல் ஊரிலே காணி ஒன்றினைத் தனதாக்கிக் கொள்வதற்கு திட்டங்கள் தீட்டுகின்றான். இந்தக் கள்ளத்தனம் தமிழினால் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படும்.
- தமிழையும், ஜானு குலதெய்வக் கோவிலுக்கு கூட்டிச் செல்கின்றா. அத்துடன், சிபீயை வாழ்த்துவது போன்ற ஒரு நிகழ்வு – இது தமிழுக்கும் – சிபீக்கும் இடையிலான ஒரு இணக்கப்பாடாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடு சந்தோஷமும் இங்கு வருகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 12.08.2025
Jana Foodsஇற்கு மிகவும் சந்தோஷமான செய்தியினை பெற்றுக் கொடுத்தார்கள் சிபீயும், தமிழும். இல்லை இல்லை, இதற்குக் காரணம் தமிழ் மட்டும்தான் என்று எல்லார் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினான். இதைச் சொன்னதும் சிபீயின் குடும்பமோ தமிழைத் திட்டித் தீர்த்து விட்டது.
குலதெய்வக் கோவிலுக்கு வரவைத்தது தெய்வத்தின் விளையாட்டாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் தொக்கு நிற்கின்றது. இந்த சந்தேகத்தைத்தான், ஜேடீயும் சொல்லப் போனான். ஆனால், சிபீ அதனைச் சொல்ல விடாமல் தடுத்து விட்டான்.
இதைவிட, குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோட வரவைப்பது கணேஷனின் தந்திரமான திட்டமோ என்ற சந்தேகமும் இருக்கின்றது. ஏனென்றால், கணேஷனுக்குக் கோள் வந்ததும், பூசாரி கனவு கண்டதாக ஊராக்கள் வருவது என்பது சந்தேகத்தினைக் கூட்டுகின்றது.
தமிழ் இந்தக் குடும்பத்துடன் சம்பந்தம் இல்லாதவள். ஆனால், குலதெய்வக் கோவிலிலே வைத்து, கன வருடங்களாக உங்களைக் காணவில்லை ஜனாம்மா. இந்தப் பிள்ளை யாரு என்று கோயில் மூப்பனார் கேட்டதுமல்லாமல், இவ உங்கள் மகளா என்றும் கேட்பதற்கு இடமுண்டு. ஜனாம்மா, சொக்கிப் போனா. இந்தக் கேள்வியினை ஜனாம்மா எதிர்பார்க்கவுமில்லை. அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல், மெதுவாக ஆமா என்று அவர்களுக்கு விளங்கும்படி தலையை அசைத்தா. இதுதானே உண்மை என்று நான் எப்பவோ சொன்னேன் தானே. இதனைத்தான் தெய்வம் இங்கு வெளிப்படுத்துகின்றதுபோலும். இதெல்லாம் என்னவென்று பார்க்கத்தானே போகின்றோம்.
Office Staff அனைத்தையும் வரவைத்தது, தமிழ்தான் என்று சிபீயின் கேள்விக்குப் பதில் சொன்ன ஜேடீ, நீ ஏன் தமிழைப் பிழையாகவே விளங்கிக் கொள்கின்றாய் சிபீ என்று ஜேடீ கேட்டதற்கு, சிபீ தனது பழைய புராணத்தினை பாடத்தொடங்கி விட்டான்.
சிபீயின் மனதினிலே ஷியாம் செய்தது எவ்வளவு பச்சைத் துரோகம் என்று திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது. துரோகியாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தனக்கு எல்லாம் நன்மைகளைத்தான் செய்கின்றா, இதனையும் உறைக்கும் விதமாகச் சொன்னான் ஜேடீ, தனக்கு ஒரு தீமையினையும் அவள் செய்யவில்லையே! ஆனால், இவ்வளவுக்கு, இத்தனை வருடங்களாக நண்பியாக இருக்கும் ஷியாம் தான் வெற்றி பெறக்கூடாதென்று நினைத்தது, தன்னை மட்டுமல்ல, ஜானுவுடைய இவ்வளவு காலமும் சேகரித்து வைத்த பெயர், புகழ் எல்லாமே நாசமாக்கவா நீ நினைத்தாய். இதை ஷியாமிடம் எதிர்பார்க்காத சிபீ, மிகவும் ஏமாற்றமடைந்தான் அத்துடன் கோபமுமடைந்தான்.
கணேஷனின் சொத்துக் கொள்ளை அடிப்பதில் ஒரு கட்டமாக கிராமத்திலுள்ள ஜானம்மாவின் காணியொன்றினில் கண் வைத்து விட்டான். இது அவன் செய்யும் துரோகங்களில் ஒன்றாக உள்ளது.
இப்போது சிபீ சொல்லட்டும், கெட்டுப்போன உணவு, நல்லதா? அல்லது கூடாததா? இப்போது கொஞ்சம் விடை தெரியுமென்று நினைக்கின்றேன். ஆனால், இன்னமும் வாயினை வி்ட்டு வெளிவராமல் இருக்கின்றது.
தேனு வைத்திருந்த விலை கூடிய earbuds இனை அவவுடைய நண்பன் ஒருவர் பரிசாகக் கொடுத்ததாகத் தமிழுக்குச் சொன்னதினை விட, அவள் தமிழின் மேலே கோபப்பட்டாளே, அப்போது ஒரு சந்தேகம் இருந்தது, இவளுக்கு ஒரு காதல் தொடர்பு இருக்கும் என்று. இன்று அது வெட்டைக்கு வந்து விட்டது. பஸ்ஸிலே போகப் போகின்றேன் என்று தமிழினை தவிர்த்து விட்டுப் போகையிலே அப்போது இருந்த சந்தேகம் உறுதியாகி விட்டது.
இப்படி தேனு செய்யும் துரோகமானது அக்குடும்பத்தினையே வீதி சிரிக்க வைத்து விடும். Collegeக்குக் காசு கட்ட வேண்டுமென்று தமிழிடம், தேனு கேட்ட விதம் இருக்குதே, அதெல்லாம் எவ்வளவுக்கு தமிழினை வாட்டி இருக்கும். இதெல்லாம் இந்த வயசில விளங்காது. தமிழுக்கு மட்டும் என்ன தேனை விட 3 அல்லது 4 வயது கூடவாகத்தானே இருக்கும். தமிழுக்கு மட்டும் ஆசாபாசம் இருக்காதா? ஆனால் ஒன்று, தேனுவின் தாய் ஒன்றும் சொல்வதாக இல்லை. தாய் கேட்பதாகவும் இல்லை. தேனுடைய பாதை றொம்பத் தப்பாக இருக்கின்றது. கெதியில் தேனு கண்ணைக் கசக்கிக் கொண்டு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
இனி என்ன நடக்கும்?
- ஷியாமுடைய வெளியேற்றம்தான் – அது தானாகவே நடக்கும்.
- கோவிலில் ஒரு மாற்றம் நிகழும் – அது, ஜனாம்மாவுக்கும், தமிழுக்கும் இடையிலான உறவினைப் பற்றி அல்லது தமிழுக்கும், சிபீக்குமான உறவினைப்பற்றி.
- தேனு கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தால், நீங்கள் என்ன செய்வீங்கள்?
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!