posted 10th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- Jana Food Festival லானது மிகவும் தடல்புடலாக இனிதே நிறைவேறியது.
- புதுமையான திருப்பமாக, இசை தனது தகப்பனைச் சந்தித்தாள். தகப்பனால் இசையை அடையாளம் காண முடியவில்லை. இசையால் அப்பா, அப்பா என்ற சொல்லைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
- பிறேமினதும், சம்யூத்தாவினதும் சதித் திட்டமானது தொடருகின்றது. நஞ்சினைக் கலந்தாள் பாயாசத்தினுள் சம்யூத்தா. இசையைக் காப்பாற்றிய நினைவினை இழந்த செல்வரட்டினம்.
- Commissioner றின் கட்டளைப்படி நன்காக நடைபெற வைக்கப்பட்ட Food Festival.
- ஜனாம்மாவிற்கு எதிராக உள்ளவர்கள் ஒரு புறமும், ஜனாம்மாவுடன் உள்ளவர்கள் ஜனாம்மாவின் பக்கமும் அரச உத்தியோகத்தர்கள் வந்த சமயம் நின்றது விளக்கமாகின்றது.
- சிபீக்கு இப்போது விஷம் கலந்தது சம்யூத்தாவாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது. ஆனால், அதனை அவன் உண்மையாக கண்டு அறிய முயலவில்லை.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 10.12.2025
நஞ்சு கலக்கப்பட்ட பாயாசத்தினை இசைக்கு கொடுக்கும் போதே அதனைத் தட்டி விட்ட தகப்பன். அதிஷ்ட வசமாக இசை உயிர் பிழைத்தாள். இதனால், அனைவரும் காப்பாற்றப் பட்டார்கள். ஜனாம்மாவின் பெயரும் காப்பாற்றப் பட்டது.
சிபீ சம்யூத்தாவை பாயாசத்தின் பக்கம் கண்ட போது சந்தேகப்படாமல் விட்டது மிகவும் கவலையீனமான தவறு. எப்பவும், ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்றால், அவர்களது, முகபாவனை, body language, கண்களினால் நேரடியான தொடர்பு இருக்கின்றதா என்ற பலவற்றினை அவதானிக்க வேண்டும். இதில், சிபீ உன்னிப்பாக எதனையும் கவனித்ததாக இல்லை. கண்ணை மூடிக் கொண்டு சம்யூத்தாவை நம்புகின்றான் சிபீ.
சிபீ சிறைக்குப் போனால் என்ன, அதனை அவர்கள் கையாளுவார்கள் என்று பிறேம் சம்யூத்தாவிற்குச் சொல்லி நஞ்சைக் கொடுக்கையில், அதனை சம்யூத்தாவும் ஏற்றுக் கொள்ளுகின்றாள்தானே. இவளின் குணம் மிகவும் ஆபத்தானது. இதில், கூடுதலான கவனம் இல்லாமல் சிபீயும் இருப்பது நல்ல விஷயமாக தோன்றவில்லை.
விழாவின் ஆரம்பத்திலேயே சிபீயின் bagகினுள் இருந்த பத்திரம் காணாமல் போனதே மிகவும் பெரிய விஷயம் இருக்கையிலே, அதனையும் மறந்து வெள்ளம் வரட்டும் தலைக்கு மேலாலே போகட்டும் என்று இருப்பது தான் சிபீயின் குணமாகத் தெரிகின்றது.
தமிழை Jana Foodsற்கு CEO என்று மேல் நாட்டு பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்திய சிபீ. கவலைக்குரிய விடயமாக இது இருந்தாலும், அதனைக் கணக்கெடுக்காத, ஆனால், கணக்கில் சேர்த்துள்ள தமிழ்.
நல்ல ருசியாக சமைக்கப்பட்ட உணவினை மீனா, தமையன் கணேஷுக்கும் எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கையில் கடுப்பேறிய கணேஷன். சாப்பாட்டினை தானே இரசித்து, ருசித்து உண்ட மீனா.
இசைக்கு உணவூட்டிய சிபீயின் சந்தோஷத்தினையும், அவனது உள மகிழ்ச்சியினையும் கண்டு பூரித்துப் போன தாய் மீனா.
Food Festivalலினைத் தடுத்து நிறுத்தி, ஜனாம்மாவின் குழுவினையே அவமானப் படுத்திய அரச உத்தியோகத்தர்களை silent ஆக commissioner ஐ வைத்து அடக்கி வைத்த தமிழ். இது அரச விழா என்றும் தெளிவுபடுத்திய commissioner.
சிபீ வைத்திருந்த அனுமதிப் பத்திரத்திற்கு என்ன நடந்தது என்று கண்டு பிடிக்காமலும், எப்படி பாயாசத்தினுள் விஷம் கலக்கப்பட்டது என்று சிபீ கண்டு கொள்ளாமல் இருந்தாலும், தமிழ் விடமாட்டாள் என்றுதான் ஊகிக்கத் தோன்றுகின்றது. இல்லாவிட்டால், நல்ல விதமாக எந்த வியாபாரத்தினையும் வெற்றிகரமாக கொண்டு நடத்த முடியாது. சிபீக்கோ நடந்த சம்பவங்கள் சுடலை ஞானம் கொடுக்கும் அனுபவமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
தகப்பனைக் கண்டு அப்பா என்றுதான் இசையால் கூப்பிடக் கூடியதாக இருந்ததே தவிர, தனது அப்பாவைக் கண்டேன் என்று சொல்லும் அளவிற்கு அவளுக்கு முடியவில்லை. காரணம், அவளின் குடும்பத்தின் கவலையீனம்தான் காரணம். இசை வழமையாக இப்படித்தான் அழுவாள் என்று ஒரு முத்திரை குத்தி வைத்துள்ளார்கள்.
இப்படியான பலவிதமான சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் கைக்கெட்டியிருக்கும். ஆனால், தவறவிடப்பட்டிருக்கும். காரணம் கவலையீனமேதான். முன்னைய அனுபவங்களின் எதிரொலியின் கண் மறைப்பாகவே இவை இருக்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!