posted 11th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நம்புவது ஒருபுறம், விம்முவது மறுபுறம் – பிரபுவை நம்பினார்கள், ஆனால், தமிழின் பார்வையோ இப்போது சிபீயின் கணிப்புடன் ஒத்துப் போகின்றதே!
- எப்படியெல்லாம் சிந்திக்கும் கணேஷனின் குணம்
- பிள்ளைகளின் விருப்பம் என்று பெருந்தன்மையுடன் ஆதரி்க்கும் வீட்டிலுள்ள பெரியவர்கள். வர்ஷினியின் முதல் கணிப்பு பிழையாக இருக்கையிலே, இப்போது கண்மூடித்தனமாக நீண்ட கயிற்றினில் விடப்பட்டிருக்கும் வர்ஷினியின் வாழ்க்கை
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 09.06.2026
தமிழிடம் அகப்பட்டது பிரபாவின் பேர்ஸ். இது தமிழிடம் அகப்பட்ட இரண்டாவது சான்று. முதலாவது, பிரபாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண். அவளுடன் மிகவும் கோபத்துடன் கதைத்துக் கொண்டிருந்தான் பிரபா. அதனை உற்று நோக்கினாள் தமிழ். பிரபா கதைத்தது நாட்டின் local ஆங்கிலம் அல்ல. அவன் பேசிக் கொண்டிருந்தது சரளமாகப் பேசப்பட்ட அமெரிக்கன் ஆங்கில உச்சரிப்பு.
பிரபுவின் தாய் கூறியது, அன்று ஜனாம்மாவும், தமிழும் கல்யாணம் பேசப் போன போது, பிரபாவைத் தான் இங்கு local பாடசாலையில்தான் படிப்பித்தனான் என்று. ஆனால், இங்கு கேட்பது வேறாகவல்லவா இருக்கின்றது.
தமிழுக்கு, பிரபாவுடன் கதைத்துக் கொண்டிருந்தவள், பிரபுவிடம் ஏதோ கேட்டு அழுது கொண்டிருந்ததைக் கண்ட தமிழ், பிரபு சொன்ன வேலை கேட்டு வந்தாள் என்று கூறினது பொய் என்று உணர்ந்தவளாய், அடுத்த கட்டத்தினை நோக்கிப் போகையிலே, இன்று பிரபா மிகவும் ஆக்றோஷமாக போனில் கதைத்துக் கொண்டிந்ததை வைத்து, பிரபா ஒரு வில்லங்கமானவன் என்று ஊகித்துக் கொண்டதுமல்லாமல், சேதுவின் உதவியையும் தமிழ் நாடினாள்.
சேதுவின் உதவி மிகவும் பெரிது. அதாவது, சேதுவின் நண்பன் ஒரு Private detective ஆக வேலை செய்வதனால், அவரிடம் பிரபாவின் caseஇனைப் பொறுப்புக் கொடுத்துள்ளான் சேது.
இப்படியாக இருக்கையிலே, தமிழது வீட்டினிலே தமிழுக்கு ஒரு லொட்டறி அடித்தது. அதாவது, பிரபுவின் பேர்ஸ்தான் அது. அந்தப் பேர்ஸினை ஜனாம்மாவின் வீட்டின் கதவருகே கிடந்தெடுத்தாள் தமிழ். அதிலிருந்து ஒரு அடையாள அட்டையானது திடீரெனக் கீழே விழுந்ததினைக் கண்டு வியந்து போனாள் தமிழ். அந்த அடையாள அட்டையானது பிரபுவினுடையதுதான். அதனை உன்னிப்பாகப் பார்க்கையிலே அது பிரபுவின் அமெரிக்க சாரதி லைசன்ஸாகும்.
இதனையும் எடுத்துக் கொண்டு அந்த இரவே தமிழ், சேதுவையும் கூட்டிக் கொண்டு அந்த private detectiveவைச் சந்திக்க இருவரும் சென்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், Private Detectiveவைச் சந்திக்க முடியாததினால், சேதுவும், தமிழும் வீடு திரும்புகையில், அந்த இரவினிலே பிரபுவும் அவனது மோட்டார் சைக்கிளிலே போய்க் கொண்டிருந்ததனைக் கண்டார்கள்.
பேர்சினில் எல்லாவிதமாக ஆவணங்களும் இருக்கின்றன. அதாவது, பிரபுவின் வாழ்க்கையே அந்தப் பேசினில்தான் அடங்கிக் கிடக்கின்றது. தன்னை நம்பி வந்தவள் வர்ஷினி. ஆனால், அவனை ஏற்கனவே நம்பியுள்ளவளையே ஏமாற்றியவனுக்கு வர்ஷி எந்த மாத்திரம். இப்படியாக முன்னையவளைத் தூக்கிப் போட்டு விட்டு, இப்போது வந்துள்ள கோடீஸ்வரப் பெண்ணை வளைத்துப் போடுவதற்குத் திட்டம் போட்டுள்ளார்கள், பிரபுவும், அவனின் அம்மாவும்.
இப்படியாக எத்தனை பேர்தான் கிளம்பி உள்ளார்கள் ஜனாம்மாவின் வீட்டினை நோக்கி. இந்த partyக்கும், சம்யூத்தாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்பதில் சந்தேகம் இருக்கின்றது. ஏனென்றால், சிபீயைக் கையினுள் போடுவதற்காக சம்யூத்தா அமெரிக்காவிற்கு கடன் பட்டு அவளது அண்ணனினால் அனுப்பி வைக்கப்பட்டவளாச்சே. அங்கு நல்ல பெரிய பணக்காரனைப் வளைத்துப் போடும் படியாக திட்டம் போடப்பட்டு அனுப்பட்டாள். இப்படியாகச் செய்தால்தான், தாங்கள் இலகுவாகச் சொத்தினைச் சேர்க்கலாம் என்பதுதான் இவர்களின் நோக்காக இருந்தது.
இப்படியான கும்பல்களில், நமக்குத் தெரிந்தளவில், சம்யூத்தா குடும்பத்தினால் ஏமாற்றபட்ட முதற் குடும்பம் தமிழின் குடும்பமாகும். இப்போது ஜனாம்மாவின் வீட்டினிலே மீண்டும் கை வைத்துள்ளார்கள் என்றால் இது ஒரே patternஆக அல்லவா இருக்கின்றது. எனது சந்தேகம் மிகவும் சம்யூத்தாவின் குடும்பத்தின் மேலே strongஆக இருக்கின்றது. அவர்கள்தான் பிரபுவைத் திட்டம் போட்டு பங்கு பிரித்தல் அடிப்படையில் இங்கு அனுப்பியுள்ளார்கள். ஏனென்றால், ஜனாம்மாவைப் பழிவாங்குவதற்கு, முன்னிப்பாக இருப்பவர்கள் சம்யூத்தாவின் குடும்பமே.
குறிஞ்சியையும் இந்த இடத்தில் நினைக்க வேண்டி உள்ளது. ஆனால், குறிஞ்சிக்கு பண விஷயத்தில் தேவை இல்லை என்பதால் குறிஞ்சி இதில் சம்பந்தப் படவில்லை என்று தோன்றுகின்றது.
அந்த இரவினில், பிரபுவோ எங்கேயோ போய்க் கொண்டிருந்தான். இதனை கண்ட சேது, தாங்களும் அவனைப் பின் தொடர்வோம் என்று தமிழிடம் சுட்டிக் காட்டி பிரபுவைப் பின் தொடர்ந்தார்கள்.
பிரபுவும், ஒரு குடிசை வீட்டின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளினை நிற்பாட்டி விட்டவனாய், அங்கு, உள்ளே இருந்து வந்த ஒரு வயோதிபரைச் சந்தித்து பெருமளவினாலான பணக் கட்டுகளைக் கொடுத்தான். பிரபுவின் இந்த நடவடிக்கையினை சேது வீடியோ எடுத்துக் கொண்டான்.
பிரபா சந்தித்தது பிரபாவின் அப்பாவா?
இவர்களின் குடும்பத்தின் பின்னணி மிகவும் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பமா? அதற்காகத்தான் இவர்கள் மகனை முதலாக வைத்து பணக்கார்களைக் குறி வைத்து பணம்பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா?
பிரவுவின் இந்த கெட்ட மனத்தினால், சேதுவுக்கும், வர்ஷினிக்கும்தான் கல்யாணம் நடக்குமா?
பிரபுவைக் கொல்லுவதற்காக கணேஷன் குறிஞ்சியுடன் போட்டுக் கொண்டிருக்கும் திட்டமானது நிறைவேற முன்பு தமிழினதும், சேதுவினதும் கையில் பிரபு மாட்டுவானா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!