posted 10th December 2025
இன்றைய Serial Review & Analysisஆனது 08ஆம், 09ஆம் திகதிகள் அடங்கலாக உள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- Jana Food Festival லானது ஆரம்பமானது. ஆனால், மக்களோ மிகவும் குறைவாக இருந்தது. காரணம், சாப்பாடானது தங்களால் வாங்க முடியாமல், அதாவது, கட்டுப் படியாகாமல் இருக்கும் என்பது அனேகமானோரின் பிரச்சினையாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
- பலவிதமான உத்தேசங்களை முன் வைத்து analyse பண்ணிக் கொண்டிருந்தனர் தமிழின் குழாம். இறுதியாக, தமிழின் ஆலோசனையை try பண்ணிப் பார்ப்போம் என்பதில் வெற்றி கண்டனர்.
- இன்றுதான் முதன் முதலாக Jana Foods Festival
நடந்துகின்றார்களா? எனவே, எல்லா சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் எல்லாவற்றினையும் சிபீயும், தமிழும் செய்திருந்தார்கள். ஆனால், சிபீயின் பெலவீனத்தினைப் பாவித்தாள் வெண்பா.
- Permission Letterஐத் திருடினாள் வெண்பா. கணேஷன் அதை எரித்து விட்டான். குறிஞ்சிக்கு விஷயத்தினைச் சொன்னான் கணேஷன். Food Festival ஐ நடத்த விடாமல் அரச ஊழியர்கள் குறிஞ்சியிடம் இலஞ்சம் வாங்கித் தடுத்தார்கள்.
- Commissioner ஐயும், Mayor ஐயும் பார்த்து மிரண்ட அரச ஊழியர்கள். ஏன் இந்த car parkகினில் நடத்துகின்றீர்கள் என்ற commissioner ரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும்.
- கல்யாணத்தில் குளப்பத்தினை உண்டு பண்ண வந்த குறிஞ்சியை வெருட்டிக் கலைத்த தமிழை மறந்து விட்டானோ குறிஞ்சி. இப்ப ஞாபகத்திற்கு வரும் அவனுக்கு.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 08 & 09.12.2025
தமிழின் தகப்பனைக் கண்ட பிறேம். பின் தொடர்ந்தும் அவரைத் தவற விட்டுத் தவித்துக் கொண்டிருப்பதற்கு சம்யூத்தாவின் வழிமறிப்பே காரணமாகி விட்டது. எல்லாவற்றிற்கும் அவதிப்பட்டால் இப்படித்தான் இடைநடுவில் கோட்டை விட வேண்டிவரும். இப்படிக் கேவலமான புத்தியானது கோணலாகத்தான் போகும்.
Jana Food Festival நடத்துவதற்காக ஒழுங்குகளை மும்முரமாகச் செய்து Festivalலினை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டனர். வழமையாக ஜனாவின் இந்த கொண்டாட்டமானது மிகவும் பிரபல்யமானது. ஆனால், இந்த முறை பார்வையாளர்களின் வருகையானது மிகவும் குறைவாகவே இருந்தது. காரணங்களுக்கு பஞ்சமா ஜனாம்மாவிற்கு. எதிரிகளுக்குக் குறைச்சலா என்ன?
இந்த Festivalஆனது சிபீ-தமிழ் கல்யாணத்தின் பின்பு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் festivalலாகும். ஆனால், இன்றைய festivalலிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்களானது மிகவும் அரிதாகவே இருந்தது. காரணம் ஜனாம்மாவின் எதிரிகளாக இருக்குமோ என்பது இன்னமும் தமிழின் மூளைக்கு எட்டவில்லை.
வந்தவர்களினை எப்படி தக்க வைப்பது என்பதனை விட மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினை எப்படிக் கூட்டுவதென்றுதான் தமிழின் குழு ஆராயத் தொடங்கியது.
வழமையான நிகழ்வுகளாக உள்ளவற்றினை முன் மொழிந்தாலும், தமிழுக்கு அவற்றில் இஷ்ரமில்லை. ஏனென்றால், இது பசியினைப் போக்குவதற்கு செய்யும் charity சேவையல்ல. மாறாக, இது ஒரு business promotionனுடன் கூடிய புதுப்புது உணவு வகைகளின் அறிமுகம் என்றே சொல்லலாம். ஆனால், இந்த festivalலினை நடத்துபவர்கள், இலாபத்தினை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள் அல்லவே.
இதில் பொறுப்பானவர்கள், இந்த festivalக்குச் சொந்தக் காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டத்தினையும் பார்த்தவர்கள். பசி என்றால் என்ன என்று தெரிந்தவர்கள். பசித்தவர்களைக் காலின் கீழே போட்டு உழக்கி விட்டு பணத்தினை தலையணையாக வைத்துப் படுப்பவர்கள் அல்லர் இவர்கள். இவர்களால், பசியையும் தாங்க முடியும், பவுணினாலான தலையணையில் தூங்கவும் முடியும். எங்கட்டேவா?
நாணிக் கொண்டு குறிஞ்சியை நாடிச் சென்ற அரச அலுவலர்கள். இதெல்லாம் ஒரு பிளைப்பு இவர்களுக்கு! காசுக்காக இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்கள்தான் கெட்டவர்கள் என்றில்லை, ஆனால், அப்படியானவர்களின் உணர்வுகளைத் தூண்டி செய்ய வைக்கின்றவர்கள்தான், குறிஞ்சி, பிறேம் போன்றவர்கள்தான் கேடு கெட்டவர்கள்.
Commissionerஐயும், Mayorஐயும் கண்டவுடன் திகைத்துப் போன அரச ஊழியர்கள். இதனை அவர்கள் எதிர் பார்க்கவுமில்லை. குறிஞ்சி இதனைச் சொல்லி அனுப்பவுமில்லை. தமிழ் கொடுத்த சாப்பாட்டுப் பார்சலினை வாங்கிக் கொண்டு போயிருந்தால் இவர்களுக்கு சாப்பாடாவது மிஞ்சி இருக்கும். ஆனால், இப்போ இவர்கள் என்னென்று திரும்பி குறிஞ்சியின் முகத்தில் முளிப்பார்கள்? அவன் கொடுத்த பணத்திற்கு வட்டியும் சேர்த்தல்லவா கேட்கின்றான். தேவையில்லாத வேலையினைப் பார்க்கப் போய் அவரவர் சம்பளத்தில் வட்டியினை குறிஞ்சிக்குக் கொடுக்க வேண்டிய சங்கடத்தில் இப்போ இவர்கள்.
இது மட்டுமல்லாமல், இந்த அரச ஊழியர்கள் இப்போ commissionறினதும், Mayorறினதும் கைகளில் மாட்டிக் கொண்டனர். இவர்களை இந்த குறிஞ்சி காப்பாற்ற வருவானா? இந்த சந்தர்ப்பமானது, வழமையாக ஜனாம்மா மன்னித்து விடுவது போல அல்ல. இது இப்போது தமிழின் ஆட்டம். தமிழ் விடுவா என்றா நினைக்கத் தோன்றும்? அதற்குச் chanceசே இல்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!