posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இவ்வளவு பெரிய தப்பாகக் கருதப்பட்டது ஜனாம்மாவின் recipe அடங்கிய டயறியினைக் களவெடுத்தது. அதுமட்டுமல்லாமல் அதிலுள்ள அடக்கங்களை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டது. அதற்காகத் தமிழை, தன் மனைவியை, திட்டித் தள்ளிய சிபீ, இதனை சம்யூத்தாதான் செய்தவள் என்று தமிழ் ஆதாரத்தினைக் காட்டியும் சிபீ ஒன்றும் சொல்லாமல் மன்னித்து விடுவதற்கான காரணம்தான் என்ன?
- பத்திரிகையாளர்களைக் கூட்டிய தமிழ் உண்மைகளைச் சொன்னா. ஆனால், ஜனாம்மாவின் பொக்கிஷமாக இருக்கும் Recipe இரகசியம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கூட்டம்.
- உறவுகளை ஒண்றிணைப்பதில் ஆர்வமாக உள்ள தமிழ். பிரித்து தான் ஆளக் கற்பனை செய்து கொண்டிருக்கும் கணேஷ்.
- சம்யூத்தாவை சிபீ அறிந்து கொள்ளுகின்றானா? அல்லது கூட வைத்து ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்க முனைகின்றானா?
- தனது தாய் மாமனாரிடம் தனது வாழ்கையின் update களைச் சொல்லும் தமிழ். இதனால் அவரின் சுகாதாரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகளை நோக்கி தமிழின் முயற்சி.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 06.12.2025
சம்யூத்தாவைக் கையும், மெய்யுமாகப் பிடித்து ஆதாரத்துடன் சிபீக்கு நிரூபித்தாள் தமிழ். ஆனால், சம்யூத்தா சிபீக்கு அவ்வளவிற்கு soft corner ஆக இருப்பதற்குக் காரணம்தான் என்ன?
தமிழ் காட்டிய வீடியோவில் உள்ளது தானில்லை என்று அப்பட்டமான பொய்யினைச் சம்யூத்தா சொன்னதையும், பிறகு உனக்காகத்தான் சிபீ இதனைச் செய்தனான் என்று அடுத்த பொய்யினைச் சொன்னதையும் சிந்திக்க முடியாதா சிபீயினால். இதுதான் உனக்குக் கடைசிச் சந்தர்ப்பம் என்று எத்தனை கடைசி சந்தர்ப்பங்களை சம்யூத்தாவிற்குக் கொடுப்பான் சிபீ. கடைசியின் அர்த்தம் என்ன என்று கூட சிபீக்குத் தெரியவில்லையே.
தமிழ், சிபீயிடம் சொன்னது போல நீங்கள் திருத்துங்கள், இல்லாவிட்டால் நான் திருத்த வேண்டிவரும், okay என்று சொன்ன விதத்தில் பெரிய அர்த்தங்கள் உள்ளன. அத்துடன், இப்படியெல்லாம் நான் கதைத்துக் கொண்டிருக்க மாட்டேன், நான் deal பண்ணும் விதமே வேறு மாதிரியாக இருக்கும் என்று இறுதியாகச் சொன்னாள் தமிழ்.
பிரகாஷிற்கு மருந்து ஏற்றுவது இன்னமும் ஒருவருக்கும் தெரியாது. அதனால்தான் பிரகாஷ் இப்ப வரைக்கும் அதே நிலைமையில் இருக்கின்றார். இதற்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு நாளைக்கு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். அதாவது, எப்போவாவது, ஒரு நாளைக்கு, இரத்தப் பரிசோதனையினைச் செய்ய வேண்டி வரலாம். அப்போது இது தெரிய வேண்டி வர வாய்ப்புகள் உண்டு.
மீனாவோ, தமிழுடன் கொஞ்சம் இசைந்தது போலத் தெரிகின்றது. ஆனால், சித்தப்பா முறையான கணேஷனுக்கோ தமிழ் கூப்பிட்டது முறைப்பாக இருந்தது. சித்தி அமுதாவும் விறைத்தா, தமிழ் சித்தி என்று கூப்பிடுகையிலே. மீனாவோ தமிழுடன் இசைந்ததை கணேஷனும், அமுதாவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கணேஷனுக்கு ஆப்பு வைப்பதற்கு தமிழிடம் கன விஷயங்கள் உள்ளன. கணேஷனும் தொடர்ந்து விறைப்பாக இருந்தால், தமிழ் அவற்றினை கணேஷனுக்கு முன் வைக்க வேண்டிவரலாம். இதனால், கணேஷனும் தமிழுடன் வலுக்கட்டாயமாக கூட்டுச் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதையும் தமிழ் செய்வாள்.
ஆனால், பிரகாஷின் இந்த நிலைமையினை மிகவும் அவதானமாகவும், கெட்டித்தனமாகவும் கையாள வேண்டிய நிலையில் தமிழ் இருக்கின்றாள். இரத்தச் சோதனை தமிழ் தன் மாமனாருக்குச் செய்யப் போகின்றாள் என்றாலே, பிரகாஷிற்கு உயிர் ஆபத்து கணேஷன் மூலம் நிச்சயமாக வந்தே தீரும்.
பத்திரிகையாளர்களைக் கூட்டினாள் தமிழ், சிபீ எதிர்த்து நின்றும். ஏன் என்று தமிழிடம் கேட்காமல், எதற்காக என்று நிதானமாகக் கலந்தாலோசிக்காமலும் தடுத்தான் தமிழை. தமிழும் முன் வைத்த காலை பின் வைக்காமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்தாள். உண்மையினை அவர்களுக்கு விளங்கப்படுத்தினாள். எமது கொம்பனியின் recipe யின் இரகசியத்தினை எப்பவும் எழுதி வைத்ததேயில்லை. எல்லாம் எங்களுடைய, அதுவும், மூளைக்குள்ளேயே இருக்கின்றதொழிய வேறெங்கும் இல்லை. எம்மிடம் இருந்து களவாடப்பட்டதே அந்த டயறீயானது எங்களுடைதல்ல. அதனை நாங்கள் சட்டம் மூலம் நிரூபிப்போம் என்று தெட்டத் தெளிவாகச் சொன்னாள் தமிழ்.
வெட்கத்தில் தலை குனிந்த சிபீ. வாயடைத்துப் போய் நின்றான் எல்லார் முன்னிலையிலும். ஆனால், தமிழோ சிபீயை எதுவும் சொல்லவில்லை. இதுதான், ஒரு குடும்பப் பெண்ணிற்கு அழகு என்பார்கள். ஆனால், சிபீ அப்படியல்ல. அவனுக்குக் கோபம் வந்தால், தான் எங்கே நிற்கின்றேன், அந்த இடத்தில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்றெல்லாம் பார்க்காமல் சத்தம் போட்டு பெயரைக் கெடுப்பதிலே கெட்டிக்காரனாக இருப்பான். இப்போது வாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகளை மீண்டும் புறக்கிடலாமா? இந்த வடுவானது மாறிடுமா? மாற்றிடத்தான் முடியுமா?
நான் எனது நான் எனது ‘சிந்தனைச் சிற்றருவி’களிலே எழுதியது போல உறவுகள் ஒட்டிக் கொண்டிருப்பதோ சொத்திற்காக மட்டும்தான். அந்த உறவானது, Pay as you go போல என்று. தீனி போட்டால்தான் உறவு, இல்லையென்றால் பகைதான்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!