Varisu - வாரிசு - 06.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!

  • வர்ஷினியினை இரவாகியும் காணவில்லை என்று தாய் மீனாவும், ஜானுவும் துடிக்கையிலே, என்ன நடந்தால்தான் என்ன என்று அமுதா, தமிழை திட்டித் தள்ளினதை அடக்கும் ஜானு.
  • ஜானு, தமிழிடம் தனது சிபீ மீதான ஆதங்கத்தினை மனம் திறந்து கதைக்கும் போது, அதனை ஒட்டுக் கேட்ட கணேஷனும், அமுதாவும் – இது பிழையாகப் போகின்றதே என்றும், தங்கள் திட்டங்கள் பிழைக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டும் கணேஷன்.
  • வர்ஷினியைக் கூட்டிக் கொண்டு போன சாம் தனக்குத் தெரியாது என்று கை விரித்தாள்.
  • தமிழின் உதவியுடன் வர்ஷினி மீட்கப்பட்டாள்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 06.08.2025

தமிழின் உண்மையான வாழ்க்கையினைத் தெரியாதவர்கள்தான் அமுதா, மீனா, கணேஷன் ஆகியோர். இப்போது தமிழ் ஒன்றுக்கும் வழியி்ல்லாத ஒரு அன்னக்காவடி என்பதுதான் அனைவரின் மனதில் உள்ளது.

தமிழ் தன் வீட்டிற்குப் போகுமுன்பு, ஜனாமாவைச் சந்தித்துப் போவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு இன்றும் சந்திக்கையில், ஜனாமா, தமிழுடன் தன் மனம் விட்டு கதைத்தா. இதனை ஒட்டுக் கேட்டனர் அமுதாவும், கணேஷனும்.

இதில், சிபீ பொறுப்புணர்ந்து வேலை செய்வதாக தமிழ், ஜானுவிடம் சொல்வதனைக் கேட்ட கணேஷன் இது பிழையாகவல்லவா இருக்கின்றது. சிபீ திருந்தினால் நமக்குத்தான் ஆபத்து என்று அமுதாவிடம் சொன்னதும், இதுதான் இவர்களின் அடி மனதினில் உள்ளது இப்போது எங்களுக்கும் தெரிந்தது விட்டதே! இதுதான், உலகம். இதுதான் உறவுகளின் உள்ளுணர்வுகளும், நடவடிக்கைகளும்.
வேலைத்தளத்தில் சிபீயை supervisor திட்டினதைக் கண்டித்தாள், தமிழ். இதனைப் பிழையாக விளங்கிய சிபீ, தமிழைத் திட்டினான். இவனுக்கெல்லாம் நான் உதவி செய்தேன் பாரு. எனக்கு நானே பழம் செருப்பால் அடித்துக் கொள்ளனும். இவனைத் திருத்தவே முடியாது மெதுவாகப் புறுபறுத்துக் கொண்டு தமிழ் போனாலும், தமிழுக்கு உள் மனதினுள் சிபீயைப் பற்றின நல்ல அபிப்பராயம் இருக்கின்றது.

சிபீயின் தங்கை இரவு போயும் வீடு திரும்பாது அனைவருக்கும் கவலையையும், பீதியினையும் கொடுக்கத் தொடங்கிற்று. ஆனால், அமுதாவுக்கல்ல. ஏனென்றால், இந்தக் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், தாங்களே சொத்துக்கள் அனைத்தையும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்று வேணவா அவர்களுக்கு.

பொலிஸூக்குப் போக வேண்டாம் ஜனாம்மா. இது பெண்பிள்ளையின் விடயமாயிற்று. நான் இருக்கின்றேன், நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று உறுதிமொழி கூறியதுமல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தாள், தமிழ். சிபீயுடனும், ஜேடியுடனும் வெளிக்கிட்டாள் தமிழ்.
சாம் வழமையாகப் போகும் பப்பிற்குச் சென்றனர். வர்ஷினி பப்பை விட்டு வெளியே போய்விட்டாள் என்பதனை CCTV மூலம் அறிந்து கொண்டனர். இதுவும் தமிழ் சொன்னதுதான். தேடி அலைந்து இறுதியாக வர்ஷினாயைக் காப்பாற்றினர். வர்ஷினிதான், தமிழ் தன்னுடைய நகைகளையும் களவெடுத்தவ என்று எல்லார் முன்னிலையிலும் சாட்சி பகின்றவ. இப்போ அதே தமிழ்தான் இவளைக் காப்பாற்றினாள், இவளைக் காப்பற்றியது இவள் அண்ணன், சிபீயா?

இதில், நான் ஒரு பரீட்சை ஒன்றினை சிபீயுக்கும், ஜேடிக்கும் வைக்கப் போகின்றேன். இதனை உங்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால், இதனை தமிழ்தான் வைக்கப் போகின்றா, சிபீயுக்கும், ஜேடிக்கும்.

தமிழ், சிபீயைக் கூப்பிட்டு, சார் இங்க வாங்க என்றாள். சிபீயும் வந்தான், என்ன சொல்லு. சார், இங்க இரண்டு சாப்பாடுகள் இருக்கின்றன. இதில் முதலாவது, கெட்டுப் போனது, இரண்டாவது, நல்லது.
நீங்கள் சொல்லுங்க, முதலாவது கெட்டுப் போன சாப்பாடு, நல்லதா? கெட்டதா? இரண்டாவது சாப்பாட்டினைக் காட்டி, இந்த நல்ல சாப்பாடு, நல்லதா? கெட்டதா?

என்ன லூசு மாதிரி கேட்கின்றாய் என்று, கெட்ட உணவினைக் காட்டி, கெட்டது என்றும், நல்லதைக் காட்டி நல்லது என்றும் கூறினான் சிபீ. அப்படியா என்று விட்டு, சரி சேர் நீங்கள் போகலாம் என்றாள். இப்ப இதைக் கேட்கவா கூப்பிட்டாய் என்று தமிழைத் திட்டி விட்டு சிபீ வெளியே போனான். ஆனால், இவள் ஏன் இதைக் கேட்டாள் என்று மனதினுள் யோசித்துக் கொண்டு சிபீ போனான்.
இப்போ நீங்கள் சொல்லுங்கள், தமிழ் ஏன் இந்தக் கேள்வியினை சிபீயிடம் கேட்டாள்?
யோசியுங்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!