Varisu - வாரிசு - 05.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • பெண்களில் கை வைத்தவர்களுக்கு என்ன நடக்கும்? அதை இனித்தான் பார்க்கப் போகின்றோம். மகன் ஊதாரி, தகப்பன் பஞ்சாயத்து வைக்கும் ஒரு கடைஞ்செடுத்தவன்.
  • றஞ்சித்தின் தகப்பனின் வட்டித் தொழிலின் அஸ்தமனம்.
  • வைத்தியசாலை கட்டிலில் கிடந்த சிபீ இதுதான் தருணம் என்று தமிழினிடம் தன் காதலையும், உன்னுடன் வாழப் போவதையும் சொன்னது உண்மையாகுமா? இங்கு கேடீ வெளியில் நின்று கொண்டு தமிழை மாப்பிள்ளை விழுத்தி விட்டான் போல என்று சொன்னதும், சிபீயின் கருத்துக்களும் சந்தேகத்தினை வருவிக்கின்றன.
  • ஜனாம்மா, தமிழைக் கூட்டிக் கொண்டு சிபீயின் வீட்டிற்குப் போகின்றா. ஏன் போகின்றா?
  • சிபீ வீட்டிற்கு வந்ததும் எல்லாம் முடிந்து விட்டது என்றில்லை. ஜனாம்மாவின் ஆட்டம் இனித்தான் தொடங்கும் – றஞ்சித்தையும், அவன் தகப்பனின் ஆட்டங்கள் அடக்கப்படும்.
  • தமிழ் வணங்கும் அந்த அம்மனே தமிழுக்கு ஒரு சைக்கையினைக் காட்டி, சிபீ உண்மையாகத் தமிழைக் காதலிக்கின்றானா? அல்லது தமிழைப் பழி வாங்கப் போட்ட நாடகமா? என்பதனை.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 05.09.2025

தமிழினதும், தன் பேரன் சிபீயினதும் நடவடிக்கைகள், சிபீ தமிழை உண்மையாக விரும்புகின்றான் என்று ஜனாம்மா கணித்து விட்டா. ஜனாம்மாவின் கணிப்பு இதுவரை தப்பியதில்லை. இந்த விஷயத்தில் ஜனாம்மாவின் முடிவு தப்பாகி விடுமா? இது சிபீயினது, தமிழை வீட்டை விட்டு கலைக்கும் நாடகத்தின் அரங்கேற்றமா?

அதுமட்டுமல்லாமல், வைர நெக்லஸினை, தமிழின் பிறந்த நாளுக்கு பரிசாகக் கொடுக்க சிபீ வந்தது – உண்மையாக இருக்குமோ அல்லது தமிழை ஒரு திருடி என்று பழியினைச் சுமத்தி, அவவாகவே வீட்டை விட்டு கலைப்பேன் என்று சிபீ கூறியதும் இங்கு கூற்றாக என் மூளையிலே பதிவாகியுள்ளது.
இதில், சிபீ, இருவரின் நம்பிக்கையில் கை வைக்கின்றான். ஒன்று, ஜனாம்மா, இரண்டாவது, தமி்ழ். இருவரும், வாழ்க்கையில் மிகவும் உரத்தவர்கள். ஒருவரையே தாக்குப் பிடிக்க முடியாத சிபீக்கு காதல் விவகாரத்தில் சிபீ விளையாடினான் என்று தெரிய வந்திது, சிபீயின் ஆட்டம் close.

சிபீ மாடிக்கு அவன் அறைக்குப் போகும் போது, இயலாமையினால், விழப்போகும் நேரத்தில், பக்கத்தில் நின்ற தமிழ்தான் சிபீயைத் தாங்கிப் பிடித்தாள். அந்த நேரம் இருவரின் முகபாவனை, இருவருக்கும் இடையில் காதல் அரும்பத் தொடங்குகின்றது என்பதனை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. இதை ஜனாம்மா உறுதியாக நம்புகின்றா.

ஆனால், சிபீயின் அம்மா, மீனா, ஜனாம்மா என்ன சொன்னாவோ தெரியவில்லை, மீனா, தமிழை இனி வீட்டினை விட்டு கலைத்து விடலாம் என்ற சந்தோஷத்திலே மிதக்கையிலே, ஜனாம்மா தமிழையும் கூட்டிக் கொண்டு, தமிழின் வீட்டிற்குப் போகின்றா. தமிழைத் தன் வீட்டை விட்டுக் கலைப்பதற்கு மீனா சொன்ன ideaவின் அடிப்படையில். ஆனால், மீனா சொன்ன மாதிரி தனது வீட்டை விட்டுக் கலைப்பதற்காக இருக்காது. இதனை ஜனாம்மா ஒரு நாளும் செய்ய மாட்டா.

இதற்கிடையில் மனதில் ஒன்று ஓடுகின்றது. அதாவது, ஜனாம்மா தனது குடும்பத்துப் பெண்ணிலே கையை வைத்தவன் மேலே கோபப்பட்டா. எனவே, பொலிஸில் IGக்குக் கோள் பண்ணும்படி மனேஜர் வினோத்திடம் உரத்துச் சொன்னா, ஜனாம்மா. அதனை இரண்டு தரமும் சிபீ தடுத்து விட்டான். இதற்கு இரண்டு விஷயங்களை இங்கு நாங்கள் காணக் கூடியதாக உள்ளது. சிபீ சொன்னது போன்று இது இளம் பிள்ளையுடன் சம்பந்தமானது. பொலிஸுக்குப் போவது தமிழின் தங்கைக்குக் கூடாது. அத்துடன், றஞ்சித்தின் தகப்பன் அரசியல் செல்வாக்கு உள்ளவன். ஆதலால், ஏதோ வழியினில் கேசினை உடைத்து வெளியில் இலேசாக வந்து விடுவான். இது ஒருவிதத்தினில் ஞாயமாக உள்ளது.

அடுத்தது, இது சிபீயின் ஒரு setup பாகவும் இருக்கலாம், தமிழினை பிளான் பண்ணி வீட்டினை விட்டுக் கலைப்பதற்காகவும் இருக்கலாம். அதாவது, தன்னை கத்தியாலே குத்து என்றும், அதுவும் மெதுவாகக் குத்து என்றும் செய்ய வைத்தது சிபீயாகக் கூட இருக்கலாம். தனக்காகவும் கத்திக் குத்திற்கு ஆளான சிபீயின் மேலே தமிழுக்கு காதலை வரவைக்கும் ஒரு தந்திரோபாயமாகக் கூட இருக்கலாம். அதனால், தமிழை தனது காதல் வலையினில் விழ வைப்பதற்கும், பின்பு அவளை ஏமாற்றி வீட்டினை விட்டுத் திரத்துவதாகவும் இருக்கலாம்.

இதற்கிடையில், சிபீயின் முகபாவனை உண்மையாகத் தமிழை விரும்புவதாகவும் தெரிகின்றது. இவ்வாறு உண்மையான காதல் என்று சிபீ நடிக்கலாம், தமிழைப் பழி வாங்குவதற்கான நாடக அரங்கேற்றமாகவும் இருக்கலாம். ஆனால், இதில், ஜனாம்மா உள்ளே இழுக்கப்பட்டிருப்பதனால், சிபீ உண்மையாகத் தமிழினைக் காதலிக்கிறான் போலும். ஏனென்றால், ஜனாம்மாவின் குணம் சிபீயுக்கு நன்கு தெரியும். தன்னைத் தொலைத்து விடுவா என்றும் சிபீயுக்குத் தெரியும். ஆனால் ஒன்று, தமிழைத் தவிர வேறு ஒருதருக்கும் தான் தமிழை விரும்புகிறேன் என்று சொல்லியது தெரியாது. வெண்பாவின் விஷயத்தில் என்ன சிபீ சொன்னானோ அதே மெதட்டினை இங்கு சிபீ பாவிக்கலாம்.

எனவே, சிபீ ஜனாம்மாவையும் ஏமாற்றலாம். ஆனால், இப்படி தமிழுக்கு நடக்கும் என்றால் , சேதாரம் சிபீயுக்கு எதிர் பார்க்காததை விட றொம்ப அதிகமாக இருக்கும்.
எல்லாம் நல்லாக நடந்தால் சரி – இல்லாவிட்டால், விபரீதங்கள் வில்லங்கமாகி விடும்.

உங்கள் நினைவுகளில் என்ன ஓடுகின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

இனி என்னதான் நடக்கலாம்?

  • பெண்களில் கை வைத்தவன்களுக்கு ஒரு முடிவென்றினை ஜனாம்மா வைத்திருக்கின்றா. அது, இப்போ, இங்கு றஞ்சித்தின் வீட்டில் நடக்கும். கதறக் கதற அழுவான் றஞ்சித். இழுத்தும் செல்லப்படுவான். பல பெண்களின் வாழ்க்கையிலே பூகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் றஞ்சித்தின் துடிப்பாட்டம் இனி அடங்கும்.
  • றஞ்சித்தின் தகப்பன் ஜனாம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். மன்னித்து விடுவதற்கு ஜனாம்மாவின் டயறியிலே ஒரு சொல்லே இல்லை. பிடிங்கி எறிந்து விடுவா, ஜனாம்மா. இது ஒரு எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம், கணேஷனுக்கு. இது கணேஷனுக்கு விளங்குமோ தெரியாது.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00