posted 6th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!
ஜூலை மாதக் கடைசியில் நடந்த சீரியலில், வெளிநாட்டு வர்த்தகர்களால் பெரியதொரு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
இவ்வாறு பெரியதொரு இலாபத்தினை ஈட்டிக் கொடுத்த தமிழுக்கு என்ன நடந்தது? சித்துவின் அம்மா மீனாவின் நெக்லஸினை தமிழ் களவெடுத்து விட்டா என்று பழிக்குமேல் பழி போட்டு கலைக்கப்பட்டாள் தமிழ்.
கையும் மெய்யுமாகத் தமிழினை ஸ்கெச் போட்டு அமர்த்தினார்கள் சித்துவின் மாமனார். குறுக்கு வழி தெரியாதவர்கள், தமிழும், சித்துவும்.
இந்த சுத்துமாத்து வாழ்க்கையினையும் வாழந்து அனுபவித்து வாழ்க்கையின் சுளிவு, நெளிவுகளை அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும் என்று தமிழையும், சித்துவையும் காலம் பழக்கின்றது போலும்.
மாமன் கணேஷனால் வாசலடியிலிருந்து தள்ளி விடப்பட்டாள் தமிழ். தமிழ் வீழாதபடி தாங்கிக் கொண்டான் சிபீ.
தமிழின் தற்காலிக வீழ்ச்சியினையே தாங்கிக் கொள்ளாத சிபீ, அவளை அவளின் வாழ்க்கையிலே வீழ விட்டுவிடுவானா? இது ஒரு நல்ல சகுனமாகத்தான் எனக்குப் படுகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 05.08.2025
தமிழின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து உணவுண்டு பெரிய வியாபார ஒப்பந்தத்தினை கையொப்பமிட்டு விட்டுப் போனார்கள், வெளிநாட்டு வர்த்தகர்கள். இதனால், பாரிய இலாபத்தினை ஈட்டக் கூடியதாக இருக்கின்றது, ஜானுவின் கம்பனிக்கு. இதற்கு ஒரு நன்றிக்கடன் கூட செலுத்தாத சித்துவின் குடும்பம், கை மாறாக என்ன செய்தது தமிழுக்கு?
சிபீயின் மாமனார் கணேஷன் தனது குள்ளப்புத்தியினால், தமிழுக்கு வேட்டு வைக்கத் தொடங்கினான். அவனுடன் கூட வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் ஒத்துப் போய்தான் இவை நடைபெறுகின்றன. இதில், வீட்டிலுள்ள சமையல் காரிக்கு உள்ள நன்றியும், மனித நேயமும் இவர்களுக்கு இல்லையே!
சிபீ restaurantயில் புது வேலையாக ஒரு சர்வராகத் தொடங்கினான். சிபீ கஷ்டப்படுவதனை ஜானுவுக்குப் பொறுக்க முடியவில்லை. ஆனால், தமிழுக்கு என்ன வந்தது. சிபீ கஷ்டப்பட்டு வேலை செய்ததன் காரணமாக காளைத்து வேர்த்துப் போய் இருக்கையிலே, தமிழ் சிபீயில் இரக்கப்பட்டு pedestal fan ஒன்றினை கொடுக்கும்படி அங்கு வேலை செய்தவனிடம் சொல்லிச் செய்வித்தா. இதை அறிந்து கொண்ட சிபீ fan கொண்டு வந்தவனைத் திட்டி அதனைக் கொண்டு போகும்படி சொல்லி விட்டான். அப்போது சிபீயுடன் இருந்த கேடீ சொன்னான் அந்தப் பிள்ளை சரியாகத்தானே செய்யுது என்று. அவ்வாறு நல்லவிதமாகத்தான் கேடீ சொன்னதையும் சிபீ ஏற்றுக் கொள்ளவில்லை.
சிபீ படும் கஷ்டங்கள் எல்லாவற்றினையும் பார்த்த சிபீயின் அம்மாவும், மாமனாரும் போட்ட தி்ட்டத்தில் சிக்கினாள், தமிழ்.
சீபியின் அம்மா மீனாவினட் நடிப்பில் எல்லாரும் கலங்கிப் போன நேரம் அது. வீட்டில் தனது தொலைந்து போன நெக்லஸினை, வீட்டிலே ஒரு இடமும் இல்லாத பட்சத்தில், அங்கு வேலை செய்பவர்களின் கை பையினையும் சோதனை செய்ய வேண்டும் என்பது வீட்டாரின் வேண்டு கோள்.
இ்ப்படியாக சோதனை செய்கையிலே, நெக்லஸானது, தமிழின் கை பையினுள் அதுவும், அவவுடைய மதிய உணவுப் பெட்டியினுள் இருந்ததைக் கண்டெடுத்தார்கள். தமிழ் கையும், மெய்யுமாகப் பிடிபட்டாள். இதைக் கண்ணால் கண்டு எதுவும் சொல்லாமல், ஜானு மேல் வீட்டிற்குச் செல்ல, தமிழ் வீட்டிலிருந்த கொடுமைக் காரரினால் வீட்டைவிட்டு கள்ள செய்தவள் என்ற பெயருடன் கலைக்கப் பட்டாள்.
அந்தக் கணத்திலிருந்து ஜானு ஆகாரம் ஒன்றும் எடுக்கவும் இல்லை, மாத்திரைகள் பாவிக்கவுமில்லை. இதனைக் கண்டறிந்த சமையல் காறி இரங்கினாள் – பின்பு அதனை அறிந்த சிபீயும் இரங்கினான்.
ஜானு எனக்குப் பசிக்கவில்லை என்று சிபீக்குச் சொன்னது – அவனுக்கு ஏதோ ஒன்று தமிழின் விஷயத்தில் தப்பாக இருக்கின்றது என்று ஊகித்தான்.
விடையினைத் தேடி அலைந்தான்.
வெண்பா சிக்கினாள். கோபமடைந்த சிபீ, உடனே தன்னை மாற்றிக் கொண்டு அவளைக் காதலிப்பதாக நடித்து, உண்மையினை கறந்தெடுத்தான்.
தமிழை அழைத்தான், ஜானு இன்னமும் சாப்பிடவில்லை – ஒரு மாதிரியாக இருக்கின்றா என்று, ஜானு என்ன தந்திரத்தைப் பாவித்து தன்னை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரவழைத்தாவோ, அதே யுக்தியைப் பாவித்தான், தமிழை இங்கு கூப்பிடுவதற்கு. தமிழோ ஓடியும் வந்தாள்.
வீட்டினுள் ஏறி, ஜானுவைப் பார்க்க வந்த தமிழை கணேஷன் வெளியே தள்ளி விட்டான். தமிழை தொடர்ந்து வந்த சிபீ, இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து பின் தொடர்ந்ததால், கீழே விழப்போன தமிழைத் தாங்கிப் பிடித்ததுமல்லாமல், தமிழ் நீ உள்ளே போ என்று சொன்னான். தமிழும் உள்ளே போனாள்.
தமிழைக் கண்ட ஜானு பூரிப்படைந்தா.
வீட்டினுள்ளே அடங்கிக் கிடந்த ஜானுவுக்கு உணவும், மருந்தும் எவையென துல்லியமாக ஊகித்தறிந்தான் சிபீ. இவனுக்கா மூளை இல்லை.
இவ்வாறான வேறுபட்ட வாழ்க்கை நிலைகளைச் சித்தரிக்கின்றது எமது Healthy Life Hacks Channel ஆகும். நீங்கள் description னில் உள்ள இந்த லிங்கினைக் https://www.youtube.com/@Healthylifehacks-b7z கிளிக் செய்து அதில் உள்ள உண்மை கலந்த கதைகளினை கேட்பதுமட்டுமல்லாமல், இவற்றினால் எவ்வாறு ஒருவரின் மனமும், உடலும் பாதிக்கப் படுகின்றது என்பதனையும், இவ்வாறான வாழ்க்கை நிலைகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதனையும், இதனால், சுக வாழ்க்கையினை நாங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
இனி;
- சிபீக்கும், தமிழுக்கும் இடையில் ஏற்படவுள்ள ஒரு mutual understanding. இது நல்ல அறிகுறியாக இருப்பதாக பட்சி சொல்லுது. உங்களுக்குக் கேட்டதா?
- கணேஷன் கலைக்கப்படும் காலம் நெருங்கிவிட்டது. தமிழின் ஆதிக்கம் அகோரமாகப் போகப் போகின்றது. கொஞ்சம் சூட்டைக் காட்டிய தமிழ், இனி சூளைக்குள்ளே போட்டு பொசுக்குவாள்.
- ஆடுவதையும், பாடுவதனையும் தாரக மந்திரமாகப் பாவிக்கும் காலம் இதுதான்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!