Varisu - வாரிசு - 04.06.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;

  • மீனாவின் மனம் ஊசலாடுகின்றது என்றும் தெரிந்தும் ஜனாம்மா மீனாவைக் குறித்து வைத்திருக்கும் கணிப்பினை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ்
  • தேனுவைக் கேவலமாகவும், தமிழின் குடும்பத்தினை கீழ்த்தரமாகக் கூறிக் கொண்டிருக்கும் அமுதா, வரும் போது, அதாவது, கணேஷனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வரும் போது என்னத்தினைக் கொண்டு வந்தா என்று நினைத்துப் பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
  • பிரபுவின் அந்தரங்க குணாதிசயங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகின்றன

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Varisu - வாரிசு - 04.06.2026

தமிழின் தங்கை, தேனுவின் கல்யாணம் வர்ஷியுடன் அதே மேடையில் நடக்கக் கூடாது என்று அமுதா ஒரு காரணத்தினை மீனாவிடம் சொல்லி மீனாவை தமிழுக்கு எதிராகத் திருப்ப முயலுகின்றா. ஆனால், மீனாவிற்கு விளங்குவதாக இல்லை. அமுதா தன்னைக் குளப்புகின்றா என்று மட்டும் மீனாவிற்கு விளங்குகின்றது. ஆனால், அமுதா சொன்னதில் தனது மகளின் வாழ்க்கை அடங்கலாக உள்ளதினால், தாயின் உள்ளம் கலங்காதா என்ன? எனவே, இதனை ஜனாம்மாவிற்கு மீனா எடுத்துச் சொல்லியும், ஜனாம்மா சொன்ன வார்த்தையினை ஏற்றுக் கொண்டா மீனா.

ஆனால், மீனாவுக்கு தமிழின் மேலே நல்ல அபிப்பிராயம் உயர்ந்து கொண்டு போகையிலே, அதனை கணேஷன் குடும்பம் குளப்புவதற்கு வீனாடிக்கு வினாடி முயற்சி செய்து கொண்டு இருப்பதனை, மீனா இன்னமும் விளங்குவதாக இல்லை. அதுமட்டுமல்லாமல், மீனாவின் பெருந்தன்மையினை கணேஷனும், அமுதாவும் பிழையாகப் பயன் படுத்துகின்றார்கள். மீனாவிற்கு இவர்களின் உள் நோக்கங்கள் விளங்கினாலும், அண்ணன் மேல் வைத்துள்ள பாசமானது மீனாவைத் தடுக்கின்றது. சகோதர வர்க்கத்தில் மீனா எங்கே, கணேஷன் எங்கே?

பிரபு புகைப்பதனைக் காண்கின்றாள் தமிழ். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தவிதமான கெட்ட பழக்கங்கள் பிரபுவிடம் இல்லை என்பது பிரபுவின் அம்மா கூறியது தமிழுக்குத் தெரியும். ஆனால், இப்போது கண்ணால் காண்பதுதான் என்ன? நேராகவே தமிழ் வர்ஷியிடம் கேட்கின்றாள். வர்ஷியோ அடித்துச் சொல்கின்றாள் பிரபுவிற்கு புகை என்றாலே allergy என்று சொல்லி முடிக்கின்றாள்.

இதைத்தான் எதிர் பார்த்தோம். வர்ஷயின் கல்யாணம் நடக்குமா? இவ்வளவு நேர்மையாக வாழ்க்கையினைக் கொண்டோடும் ஜனாம்மாவின் சொத்ததிற்கும், பெயருக்கும் பங்கம் வருமா? இதுதான் நேர்மையாக வாழ்ந்த வாழ்க்கைக்கு இயற்கையின் பரிசா? இப்படியாக பல வினாக்கள் கேள்விக்கு மேல் கேள்வியாக மனதில் எழுந்து கொண்டிருக்கின்றன.

பிரபுவும், அவனின் அம்மாவும் சேர்ந்து ஜனாம்மாவைப் பழி வாங்குவதற்காகத்தான் வர்ஷனியை காதலிப்பது போன்று பிரபு நடித்து இந்த நாடகத்தினை அரங்கேற்றுகின்றார்கள். பிரபுவினதும், அவனது அம்மாவினதும் கறைபடிந்த மனத்தினை ஜனாம்மா தங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் இருக்கையிலே, அந்த சாமி இவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் என்று எதிர் பார்த்தோம். அது நடக்கவில்லை. ஆனால், இப்போது நடக்கத் தொடங்கியுள்ளது.

இதில், தாய் மாமன் என்ற றீதியில், கணேஷன் மீனாவிடம் சீர்வரிசையினை வர்ஷிக்குச் செய்ய வேண்டும் என்று மேலதிகமாக ஒரு வெற்றுக் காசோலையினை வாங்கினானே! ஆனால், கணேஷன் ஒருவிதமான கடமையும் இதுவரைக்கும் செய்யாமல், மீனாவின் குடும்பத்திற்கு கேடு விளைவிப்பதே அவனதும், அவன் மனைவி அமுதாவினதும் முழு நேர வேலையாகவல்லவா இருக்கின்றது.

சிகறட் பிடிப்பதனைக் கண்ட தமிழ் இனி, இதை விட என்னென்ன கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கின்றன பிரபுவிற்கு என்று இனி ஆராய்வதே அவள் வேலையாக இருக்கும். இதற்கு ஒரு ஏர்ஜன்ட் வைத்திருப்பாள், பிரபுவை முழு நேரமாகக் கண்காணிப்பதற்கு. ஜனாம்மாவும், தமிழும் வீடு தேடிவந்து பிரபுவைக் கல்யாணம் கேட்டுவிட்டுப் போன பின்பு, பிரபு தாயின் முன்னாலேயே தாங்கள் நினைத்த பழிவாங்கும் வேலையானது செவ்வனே போகின்றது என்று குடிவகையினைக் குடித்ததையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.

தேனுவை எல்லார் முன்னிலையிலும் வைத்து அமுதா நய்யாண்டி பண்ணுகையில், ஒருவரும், மாமி மீனா உட்பட ஒன்றும் கதைக்காமல் இருக்கையிலே தேனு எவ்வளவிற்கு மனதினால் நொறுங்கிப் போயிருப்பாள். ஆனால், அக்காவாக, தமிழ்தான் அமுதாவை இடைமறித்து அடக்கினாள். ஆனால், இங்கு மீனா கதைத்திருக்க வேண்டும். ஒரு கொஞ்சத்திற்கு முன்னாடிதான் தமிழ் மீனாவின் அக்கா முறைகொண்டாடிக் கொண்டு வந்த உறவை, தனது அத்தையின் குடும்பத்தினை கேவலமாகப் பேசியதற்காக வீட்டை விட்டுத் துரத்தி விட்டா.

இப்படியாக தேனுவைக் கேவலமாக அமுதா பேசியிருக்கையிலே, தேனு இந்தக் கல்யாணத்தினை, ஜனாம்மா குறித்து வைத்த தேதியில் செய்வாவா?

அத்துடன், தனக்கு இந்தக் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்பதற்கான காரணத்துடன் அமுதா சொன்ன காரணத்தினையும் சேர்த்துக் கொள்ளுவாவா?

எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)