
posted 3rd September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழ் மாதிரியா? அல்லது தமிழா? தெளிவாகச் சொல்லனும் சிபீ. அப்போ சிபீயின் பதில் என்னவாக இருக்கும்?
- வர்ஷினாயை வட்டமிடும் சேது. கிடைப்பாளா வரிஷு?
- சீபி சார் நீங்கள் நீங்களாக இருங்க. நீங்கள் திருந்துங்க, திருந்தினா சந்தோஷம்தான்.
- தமிழுக்கு, சிபீயின் motive விளங்கியதா? விளங்கவில்லையா?
- இனித்தான் ஜனாம்மா தனிப்பட உழைத்து சம்பாதித்துச் சேர்த்த சொத்து, கூட்டுக் குடும்பத்தினால் பரவலாக்கப் படலாம் என்றதை ஜனாம்மா தெரியாமலா இருப்பா?
- சிக்கலின் ஆரம்பம் – சொத்திலே தொடங்கும் – வி்ல்லங்களாக திரிபுபடும் சொந்தங்கள்.
- முறைப் பையன் முறுகுகின்றான் – கொஞ்சம் adjust பண்ணு தமிழு என்று முத்தமாவின் முன்மொழிவு. இப்போதுதன்னும் தமிழுக்கு விளங்கவில்லை என்றா நினைக்கிறீங்கள்?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 02.09.2025
ஜனாம்மாவின் கேள்விக்கு சிபீ, தமிழைப் போல ஒரு பொண்ணு இருந்தால் பாருங்கள் – கல்யாணம் பண்ணிக்கிறன். அதைப் போல இது. இதைப் போல அது என்றில்லாமல், exactஆகச் சொல்லு, சிபீ. சரி சொல்கிறேன் என்று சிபீ நேராகவே சொல்லுவான், தமிழைத்தான் என்ற சொல்லுவான்.
வீட்டில் ஆரம்பமாகும் பூகம்பம். கணேஷும், அமுதாவும் தொடங்குவார்கள் – சின்னனிலிருந்து சிபீ, வெண்பாவுக்குத்தான் என்று சொல்லி சொல்லி வளர்த்தோமே! இப்ப இவன் என்ன இப்படிக் கதைக்கின்றான் என்று சிபீயின் மேலே தங்கள் எரிவினைக் கொட்டுவார்கள். இந்த எரிவானது, உண்மையாகவே தங்கள் மகள் சந்தோஷமாக வாழ வைக்க வேண்டுமென்றா? இல்லை, ஜனாம்மாவின் சொத்து தங்களுக்கு வரும் என்பதால் மட்டும்தான். இத்தனைக்கும், அவர்களது மகள் வெண்பா வாழ்ந்தால்தான் என்ன? வாழாட்டித்தான் என்ன? என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. அவர்கள் மகள் வெண்பா சொத்து சேர்க்கும் ஒரு ஜடம், அதுமட்டும்தான்.
சிபீ, தமிழுக்கு sketch ஒன்றைப் போட்டான், ஆனால், தமிழ் அந்த sketchனைத் தகடுபொடியாக்கினாள். இப்போ, சிபீ கூறுவது, உண்மையாக சிபீயின் உள்ளத்தில் இருந்து வருவது. ஏனென்றால், தமிழுடன் சேர்ந்து ஒன்றாக சிபீ மதிய உணவு சாப்பிடுகையில், தமிழ் சொன்ன அந்த வார்த்தைதான் சிபீயை மனம் மாற வைத்தது. ஒருவனுடைய தவறினை அவனுடன் சண்டை பிடித்துச் சொல்லக் கூடாது. சொல்லும் விதத்தில் சொல்ல வேண்டும். அதுதான் தமிழ் சொன்ன மாதிரி. நச்சென்று நெஞ்சினில் ஏறி இருக்குமல்லவா?, சிபீயுக்கு.
அந்த வசனம்தான், அதுவும் சிபீயுக்குத் தெரியாது, தமிழ் யாரென்று. ஆனால், தமிழுக்குத் தெரியும், சிபீ தனது முறை மாமன் என்று. அப்படி இருந்தும் தமிழுக்கு தொக்கு நிற்பது, தனது அம்மாவையும், அப்பாவையும் ஜனாம்மா ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் அவர்களின் பக்கம் தவறு ஒன்றும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அதற்கு தமிழ் எவ்வளவோ முயற்சி செய்ய வேண்டும். அதுவும் தனியாக. சிபீயிடமோ அல்லது வேறு யாரிடமோ உதவும்படி கேட்க முடியாத சிக்கல். இதில், அசைவாட்டமில்லாமல் இருக்கும் பிரகாஷ் மாமா, வில்லனாக கணேஷன், அதையும் தாண்டி வேறு யாரெல்லாம் இருக்கின்றார்களோ தெரியவில்லை. ஒரு பொய்யினை சாட்சிகளுடன் நிரூபிப்பதற்கு எவ்வளவு ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். அதைத் துல்லியமாக நிரூபித்து வெல்ல வேண்டும். இதெல்லாம், இலேசான விஷயமாக இருக்குமென்றா நினைக்கிறீங்கள்?
தமிழுக்கோ தனது குடும்பத்தினை கரை சேர்க்க வேண்டும் என்றிருக்கையிலே, இப்போது சிபீயின் கல்யாண அத்தியாயம் தொடங்கியுள்ளது.
அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது தமிழின் தகப்பனின் மேல் பொய்யாகச் சுமத்தப் பட்டுள்ள கொலை குற்றச் சாட்டு. இதற்கு தமிழ் யாரைச் சந்திக்க வேண்டும்? யார், அன்று பொலிஸில் தமிழின் தகப்பன், செல்வரத்தினத்தின் மேலே பழியைப் போட்டானோ அவனை. அவனைச் சந்திப்பது என்றால், முதலில் இத்தனை வருஷங்களின் முன்பு நடந்தேறிய இந்த விஷயம், இதுவரை காலமும் அவன் இன்னமும் உயிரோடு இருக்கின்றானா என்பது சந்தேகம்தான். இவன் யார் என்று அப்போதையிலிருந்து தெரிந்தவள் முத்தம்மாதான். அவள்தான் தமிழுக்கு அவனை அடையாளம் காட்ட வேண்டும். அப்படி அடையாளம் காட்டி, அவன் பொலிஸிடம் வந்து உண்மையினை சாட்சியாகச் சொல்லுவானாக இருந்தது கணேஷனுக்கு மட்டும் தெரிந்தது என்றால் கணேஷனே தன் கையாலே அவனைக் கொன்று விடுவான்.
அல்லது, அவனது குடும்பத்தினைப் பணயம் வைத்துக் கொண்டு விரட்டுவான், கணேஷன். அதையும் தாண்டி, தமிழ் அந்த றைவரிடம் வாக்குமூலம் எடுத்து வீடீயோ பண்ணி அதனைப் பொலிஸிடம் ஆதாரமாகக் கொடுத்தாள் என்றால், கணேஷன் றைவரின் குடும்பத்தினை பணயம் வைத்துக் கொண்டு, இது தமிழ் தன்னை வெறுட்டிப் பணயம் வைத்து எடுத்த வீடியோ என்று சொல்ல வைப்பான் கணேஷன்.
ஆகவே, ஒரு புது methodடைத்தான் தமிழ் பாவிக்க வேண்டும். ஜனாம்மாவுக்கு தமிழின் தகப்பனையும், தாயையும் தெரியாதல்லவா. எனவே, வேறொருவரைத் தனது தகப்பன் என்று, ஆதாவது, வீட்டுக் காறியைத் தனது அம்மா என்று அடையாளம் காட்டியது போலக் காட்டி கேசினை நகர்த்த வேண்டும்.
சமூகத்திலே பெரிய அந்தஸ்தினிலே இருக்கும் ஜனாம்மாவின் சொல்லு இங்கு தமிழுக்குப் பலமாக இருக்கும். அதனை வைத்துக் கொண்டு அந்த றைவரை நேராக நீதிபதியிடம் கொண்டு சென்று வாக்கு மூலத்தினைக் கொடுக்கும்படி செய்தால், கணேஷனினால் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. மூச்சுத் திணறி இருக்கம் ஜடம் போல இருக்க வேண்டியதுதான். ஆனால், ஒன்று, இவன் கணேஷன் பிறவியிலே ஒரு criminal எனபதனால், அவனோ பிரகாஷ் மாதிரி சய நினைவு இல்லாத மாதிரி நடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உண்டு.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனைப் பார்ப்போம்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!