posted 29th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழுக்கு நடந்தது கல்யாணமா? சிபீக்கும் விருப்பமில்லை. தமிழுக்கும் விருப்பமில்லை. ஆனால், சிபீயும் தமிழை விரும்புகின்றான். தமிழும் சிபீயை விரும்புகின்றாள். ஆனால், இவர்களுக்கிடையில் உள்ள பிரச்சினைதான் என்ன?
- உங்களுக்கு தேவைப்படாத உயிர் என் உடம்பில் இருக்கத் தேவையில்லையே என்று தன்னைத் தியாகம் செய்யத் துணிந்தவள் தமிழ்.
- சிபீக்கு வரவுள்ள உயிராபத்திலிருந்து பரிகாரங்களைச் செய்து காப்பாற்றி உயிரோடு நின்று நாடி, நாளங்கள் வெடிக்கும் அளவிற்கு கத்த வைத்தற்கான தமிழை, சிபீ, இப்போ தமிழை இவ்வளவிற்கு துன்பப்படுத்துவதற்கு என்ன காரணம் உண்டு சிபீயிடம்?
- ஆனால், இன்னொருத்தியை விரும்பியவரை கல்யாணம் பண்ணுவதற்கு நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமானவள் இல்லை. காரணம், உங்களைக் கல்யாணம் பண்ண ஒரு எப்பனும் எனக்கு விருப்பமில்லை என்றாள் தமிழ்.
- தமிழ் தன் மேல் விருப்பமில்லை என்று சிபீயிடம் சொல்லவும்தான் சிபீ கூடுதலாகக் கத்தி சத்தம் போடுகின்றான். அப்போ, சிபீ தமிழை விரும்புவதனால் இப்படி செய்கின்றானோ என்றும் சிந்திக்கவும் தோன்றுகின்றது.
- ஏதோ ஒரு திட்டத்தினை சிபீ தனது கல்யாணத்தில் வைத்திருக்கின்றான். அந்தத் திட்டமானது பிறேம் தமிழைக் கடத்தியதால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதுதான் அவனுக்குள்ளே உள்ள பிரச்சினை என்றும் தோன்றுகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 20.11.2025
அறைக்குள் வரவழைத்த தமிழை கன்னா பின்னா என்று பேசினான் சிபீ. இது தமிழிடம் அவன் ஏதோ ஒன்றினை எதிர் பார்த்து ஏமாந்ததினாலா? அப்போது தமிழ், இன்னொருத்தியை விரும்புகிறவரையெல்லாம் நான் கல்யாணம் பண்ணுகிற அளவிற்கு கீழ்த்தரமானவள் அல்ல. அதுதான் எனக்கு எப்பனும் சிபீயில் விருப்பமில்லை என்று நேராகவே சிபீயிடம் கூறிவிட்டாள் தமிழ்.
இவ்வளவுக்கும் சிபீ எவ்வளவுதான் கத்தினாலும் தமிழை எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அத்துடன், தமிழைத் தான் கல்யாணம் பண்ணினால் வீட்டிலுள்ள ஒருதருக்கும் பிடிக்காது என்று தெரியும். அத்துடன் அப்படி அவர்கள் கல்யாணத்தின் பின்னான நடைமுறைக்களைச் செய்யவிட்டால் ஒருதரும் நல்ல மனதுடன் செய்ய மாட்டார்கள் என்று சிபீக்குத் நன்கு தெரியும். ஆகவே, தானே அனைத்தையும் செய்தான். அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றினையும் ஒழுங்காகவும் செய்தான்.
என்னை ஏமாற்றி விட்டு சம்யூத்தா போவதற்கு சிபீ தான் ஒரு மடையனும் இல்லை என்று ஆணித்தரமாக தமிழிடம் சொன்னான். ஆனால், சம்யூத்தாவை மண மேடையில் ஏற்றினான். கல்யாணம் பண்ணவதற்கு ஆயத்தமானான். அந்த கடைசி வினாடிதான் சிபீயின் திட்டமே இருந்திருக்கின்றது. இத்தனைக்கும், மணமேடையில் இருந்து கொண்டு சிபீ, தமிழைத்தான் தேடினான். எங்கேயும் தமிழ் இல்லை. அதற்கிடையில் தான் நினைத்ததை தமிழ் செய்து விட்டாள். அதுவும்தான் சிபீ்க்குக் கோபம் வந்தது.
அதுமட்டுமில்லாமல், சிபீயும் கல்யாணத்தில் மணமேடையில் வைத்து தமிழைத் திட்டித் தொலைத்தான். அதற்காக தமிழ் சொல்வது பொய் என்று சொல்லவே இல்லை. இதன் அர்த்தம், இன்று அவனது அறையினுள் சிபீ சொன்னது, ஜனாம்மாவிற்கு அடுத்தது தான் முழுமையாக நம்பியது தமிழைத்தான், தமிழை மட்டும்தான் என்றான். எனவே, இங்கு, ஏதோ ஒரு விஷயம் இருக்கின்றது.
அத்துடன், தான் தமிழைத் திட்டுவதனால், தன்னை விட எல்லாப் பொறுப்புகளையும் ஜானு, தமிழிடம் ஒப்படைக்க வைக்க வேண்டும் என்ற ஒரு திட்டமாகவும் சிபீயிடம் இருக்கலாம். தமிழை, சிபீ ஜானுவுக்கு அடுத்ததாகப் பார்க்கின்றான். அதாவது, தமிழ்தான் அடுத்தது வாரிசு என்று சொல்லாமல் சொல்கின்றான் போலும்.
ஆரம்பத்திலிருந்து எல்லாவற்றினையும் ஒவ்வொன்றாக follow பண்ணிக் கொண்டு வாருகின்றான் சிபீ. தமிழை விரும்புகின்றேன் என்று மொட்டை மாடியினைச் சோடித்து, தமிழை அங்கு அவளது பிறந்த நாள் என்று வர வைத்து வைர நெக்லஸினைப் பரிசாகக் கொடுக்கின்றான். ஆனால், தமிழ் அதனை உதாசீனப் படுத்தினாள். ஆனால், சம்யூத்தா அதை வாங்கித் தா, இதை வாங்கித் தா என்று செலவு வைத்துக் கொண்டே இருந்தாள். அத்துடன் மது அருந்துவதிலும் சம்யூத்தா எந்த ஒரு ஆட்சேபனையும் சொல்லவில்லை. மாறக, தமிழ் தனக்கு இது பிடிக்கவில்லை என்று சிபீயின் முகத்திற்கு நேராகவே சொன்னாள். இதனை, மாறன் சொன்ன வார்த்தைகளை வேத வாக்காக நினைத்தான் சிபீ.
எல்லா விஷயங்களிலும் தமிழ் தன்னை விடுத்து தங்கள் குடும்பத்திற்காவே நின்றாள்.
குறிஞ்சி கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து பிரச்சினை கிழப்ப முன்பு அவனை துரத்தி விட்டாள்.
இப்படி, எல்லா விஷயங்களையும் சிபீ ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். அதனால்தான், தமிழைத்தான் ஜனாம்மாவிற்கு அடுத்தாக நம்பினேன் என்ற வார்த்தையானது அவனது உள்ளத்திலிருந்து வந்தது.
தமிழை ஒரு நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவளாக இருந்ததாலும் அவளிடம் உள்ள நல்ல குணைதிசங்களை அறிந்து கொண்டான் சிபீ.
இப்படியென்றால், சிபீயின் மனதினில் என்னதான் ஓடுகின்றது?
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!