posted 20th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அறையினுள் கட்டி வைக்கப்பட்ட சிபீ கயிறினைக் களற்றிக் கொண்டு காப்போரை அடித்துத் தள்ளியவனாய், மிரட்டலினால் றாஜாங்கத்தின் அடியாளை இழுத்துக் கொணர்ந்தான் சிபீ.
- சிபீ சொன்னதை ஏற்றுக் கொண்டாலும் சிவதானு ஐயாவிற்கு தனது தம்பியின் மேலான பழியினை நம்புவதா? நம்பாமல் விடுவதா? என்று குளப்பத்தில் அமைதியாக இருந்தார்.
- சிபீயின் குற்றச்சாட்டால் குளம்பியவனாயும், குளறிக் கொண்டும் நின்ற றாஜாங்கத்தை அதட்டினார் சிவதானு ஐயா. இதனால் அவரின் தம்பியின் மேலுள்ள சந்தேகம் உறுதிக்குக் கிட்டே அணுகியது.
- பாண்டியனும் கத்தினான், சிபீயின் கையடக்கத் தொலைபேசி தன்னிடம் உள்ளதனாலே! ஆனால், iPadடினைத் தமிழிடம் சொல்லி சபைக்குக் கொணர வைத்து அனைவருக்கும் வீடியோவைக் காட்டினான்.
- தாமரைக்கும், சிவாவிற்குமான கல்யாணம் இனிதே நடைபெற்றது.
- றாஜாங்கத்தினதும், பாண்டியனினதும் கச்சேரி ஆரம்பமானது. இருவரையும் கிராமத்தை விட்டு விலக்கி வைத்தார் சிவதானு ஐயா. கிராமத்தவர்களால் அடித்து விரட்டப்பட்டார்கள்.
- பொங்கலுக்கு ஜனாம்மாவின் வீட்டார் அனைவரும் சிவதானு ஐயாவின் கிராமத்திற்கு ஜனாம்மாவால் வரவளைக்கப்பட்டார்கள். ஜனாம்மாவின் கை, ராசி இல்லாதது என்று கணேஷன் வாய் கூசாமல் சொன்னான். கணேஷனின் துரோகத்தினைச் சகிக்கும் ஜனாம்மாவும், தமிழும். எப்போது ஜனாம்மா சவுக்குக்கு சரிசமானானதைத் தூக்குவாவோ?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 17.01.2026
கட்டிய கட்டினை அவிழ்த்துக் கொண்டு சிபீ அடித்துத் தூக்கினான் றாஜாங்கத்தின் முக்கியமான அடியாளை. அனைவர் முன்னிலையிலும் ஆஜர் படுத்தினான். றாஜாங்கம் பதறியடித்தான், தான் சொல்வதெல்லாம் உண்மையென்று. சிவதானு ஐயா அவன் பதற்றத்தினைக் கண்டு மேலும் சந்தேகம் கொண்டார். சிபீ, றாஜாங்கத்தைப் பற்றியும், பாண்டியனைப் பற்றிய கேவலமான நினைவுகளிலே மனம் நொந்து நின்றார் சிவதானு ஐயா.
ஆதாரம் இல்லாமல் சிபீ இருக்கின்றான் என்று பாண்டியன் சிபீயின் கையடக்கத் தொலைபேசியினைப் பறித்து தன்னகத்தே வைத்திருந்தனை வைத்துக் கொண்டு குரலை உயர்த்தினான். தாங்கள்தான் சுத்தமானவர்கள், இவர்கள்தான் கூடாதவர்கள் அடித்து விரட்டும்படி றாஜாங்கமும், பாண்டியனும் சிவதானு ஐயாவிடம் உத்தரவிட்டார்கள். ஆனால், நடந்தது என்ன? சிபீ தமிழிடம் தனது iPadடினைக் கொண்டுவரும் படி சொன்னான். பாண்டியனையும், றாஜாங்கத்தையும் திக்கித் தடுமாறும்படிச் செய்தான் சிபீ. இந்த நவீன காலத்தில் இதெல்லாம் தெரியாததினால்தான் நீ இங்கு இருக்கின்றாய் என்று நையப்புடைத்தான் பாண்டியனை சிபீ.
என்ன நடந்தது என்பதனைத் தெட்டத் தெளிவாக iPadடில் காட்டினான் சிபீ. அது மட்டுமா, றாஜாங்கத்தின் அடியாளை சிவதானு ஐயாவிடம் ஒப்படைத்தான். அவனையே சொல்லும்படி சிவதானு ஐயா விளங்கியதிலே றாஜாங்கத்தினைப் பற்றியும், பாண்டியனைப் பற்றிய எல்லா உண்மைகளும் வெளியே வந்தன.
அத்துடன் தனது iPadடில் உள்ள பதிவினையும் எல்லாரிடமும் காட்டினான். அப்பவும் வெட்கப்படவில்லை அவர்கள். வீறாப்புடன் கதைத்தார்கள் கடைசி வரைக்கும், தாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிப்பதற்காக. நடக்கவில்லை. சிவதானு ஐயாவின் படிப்பும், வாழ்க்கையில் அவர் பெற்ற அனுபவமும்தான் அவரை நல்ல முடிவெடுக்க வைத்தது.
ஆனால், சிபீ சொன்னது, பயிர்களிலே உள்ள அனுபவமானது மனிதரைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். ஏனென்றால், மனதினையும், நினைவுகளையும் எங்கும் படிக்க முடியாது. அதற்குரிய பிறிப்பான படிப்பானது வாழ்க்கையால் பெற வேண்டும்.
சிவதானு ஐயா மிகவும் நன்றி உணர்வுடன் தாமரையினதும், சிவாவினதும் கல்யாணத்தினை பெரியவர்கள் முன்னாலே நடத்தி வைத்தார். ஆனால், றாஜாங்கத்திற்கும், பாண்டியனுக்கும் நல்ல பாடத்தினைக் கற்பித்துக் கொடுத்தார். சிவதானு ஐயா மாதிரித்தான் பலர் இருக்கின்றார்கள், உறவினை unconditional ஆக நம்புவது. ஆனால், பிறரிலும், யார் யார் நல்லவர்கள், நியாயத்தர்கள் இருக்கின்றார்கள் என்பதனைக் கண்டறிய வேண்டும். அது ஒரு கலை என்று கூடச் சொல்லலாம். மீண்டும் கூறுகின்றேன் இதெற்கென ஒரு படிப்பில்லை. ஆனால், ஞானத்தினால் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவோ பேருக்கு தாலித் தானம் செய்து வாழ வைத்த கையினை ராசி இல்லாதது என்று சொல்கையிலே, அந்தக் கையுடாயாளுக்கு எவ்வளவு வலித்திருக்கும். பிழையாகப் பொங்கிய பொங்கலைச் சாப்பிடாமல் காகத்திற்கா தூக்கி எறிந்தான் இப்படிச் சொல்லும் கணேஷன். சாப்பிட்டான்தானே. கணேஷனைப் போல இருப்பவர்கள் இருக்குமட்டும், பொங்கல் கோணலாகத்தான் பொங்கும். நேராக்குவதற்குத்தானே வந்துள்ளாள் மகாராசி தமிழரசி.
பிரகாஷின் முழிப்பு இனி ஒவ்வொருவராகக் களையெடுக்க வைக்கும். அதன் முடிவினில் ஒரு பொங்கல் வரும். அது அன்று கிழக்கை நோக்கிப் பொங்கும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!