posted 10th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஷாமை வெறுக்கத் தொடங்கும் ஜேடி.
- பணத்திற்காக சிபீக்கு பின்னால் அலையும் ஷாமினை கண்டு பிடிப்பானா,சிபீ.
- சிபீக்கு cool drinks இனுள் அல்ககோலைக் கலந்து ஷாம் கொடுத்தது ஏன்? சிபீயைப் பழிவாங்கவா? அல்லது தமிழைப் பழிவாங்கவா? அல்லது, Jana Foods க்கு அவப் பெயரினை உண்டாக்கவா? அல்லது ஷாமை யாரும் hire பண்ணி விட்டாங்களா?
- சிபீ தனது கட்டுப்பாட்டினை மீறி live ஆகப் போகும் programmeமில் இப்படிக் கதைப்பானா, தமிழ் சிபீயைக் கட்டுப்படுத்திய போதும்.
- குளம்பிப் போனா ஜனாம்மா – நேராகவே அந்தப் programmeற்கு வந்துவிட்டா.
- சிபீயினால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போக, தமிழின் முயற்சியால் Jana Foods வெற்றிவாகை சூடுமா?
- சிபீயின் வாயில் துர்நாற்றம் வர அதைக் கண்டுபிடித்து விட்டாளா தமிழ்?
- காலம் நெருங்கி விட்டது, ஷாமுக்கு, வெளியில் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 09.08.2025
விளம்பரத்திற்கு வந்த சிபீ, தேவையற்ற கொமேன்றினால், போட்டியில் குதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட Jana Foods.
தானாகவே தமிழ் உள்ளிட்டாள் சமையல் போட்டியில் சிபீயுடன் கலந்து கொள்வதற்காக. தான் அந்தப் போட்டியில் சிபீயுடன் சேர்ந்து கலந்து கொள்ள ஷாம் விரும்பியும் சிபீயினால் தட்டிவிட்டப்பட்டாள்.
இது அவளுக்கு ஒரு அவமானமாகப் போய்விட்டது. அனால், தானாகவே போட்டிக்கு சிபீயுடன் சேர்ந்து போக வந்த தமிழினை ஒன்றும் சொல்லாமல் சிபீ கூட்டிச் சென்றதற்குப் பழிவாங்கத் தொடங்கினாள், ஷாம்.
குளிர்பானத்தினுள் அல்ககோலைக் கலந்து சிபீக்குக் கொடுத்தாள், ஷாம். அவளுக்கு ஒருவிதமான குற்ற உணர்வெண்றுமில்லாமல் இந்தக் கொடுமையினைச் செய்தாள், ஷாம். தமிழுக்கு வாழ்த்துச் சொன்ன ஜேடீயின் கையைத் தட்டிவிட்ட ஷாமின் உள்மனதில் என்ன ஜோசிக்கின்றாள் என்றுகூட இதிலிருந்து தெரியவில்லையா?
விளம்பரத்திற்கு வந்தால் அந்த வேலையினை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு, ஏன் இந்தப் போட்டிக் கெல்லாம் போக வேண்டும் என்பது ஜனாம்மாவின் கேள்வி. தானும், தமிழும் இனி கொம்பனியினை எந்த நிலைமைக்குக் கொண்டு வருவோம், நீ வீட்டில் இரு என்று ஜானுவுக்குச் சொன்ன சிபீயை நினைத்து எவ்வளவோ பெருமிதம் கொண்ட ஜனாம்மா.
24 மணித்தியாலத்தினுள்ளே அந்த வாக்கினை காற்றினிலே பறக்க விட்டான் சிபீ. சிபீயின் மேலிருந்த நம்பிக்கையானது உடைந்து சுக்கு நூறாக்கப்பட்டது. சிபீயினைப் பேசாதீங்கள் அத்தை என்று மீனா சொன்னதிலிருந்து தெரிகின்றதுதானே, மீனா எந்தளவு அறிவுடன் இதனைச் சொல்கின்றா என்று.
துர்நாற்றத்தினை சிபீயின் வாயிலிருந்து தமிழ் முகர்ந்து கொண்டாள். உங்களுக்கெல்லாம் உழுத்தங்களி கிட்டத்தான் இலாயக்கு, அதைச் செய்யுங்கள் என்று நாசூக்காகப் பேசினாள், தமிழ். அதுகூட சிபீயுக்கு விளங்கவில்லை. அது எனக்குச் செய்யத் தெரியாதே என்று சிபீ சொன்னதினை நினைத்துக் கவலை கொண்டாள், தமிழ். யாரும், போட்டியிலே உழுத்தங்களி கிண்டுவாங்களா என்று கூட சிபீக்குத் தெரியவில்லை என்பதுதான்.
வீட்டிலே கொஞ்ச நேரம் ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம் என்றால், சிபீ இப்படிச் செய்து விட்டானே என்று கோபம் கொண்ட ஜனாம்மா, மனேஜரைக் கூப்பிட்டு இந்த ஒளிபரப்பினை நிற்பாட்டும்படி கேட்டுக் கொண்டா. ஆனால், நிற்பாட்ட முடியாது என்று மீடியா சொல்லிவிட்டது. ஏனேன்றால், அது live telecast ஆகப் போய்க் கொண்டிருந்தது. அதைத்தான் தமிழும் சொன்னாள் சிபீயுக்கு. ஆனால், சிபீ கேட்டபாடாக இல்லை. Open challenge சினை உலகத்தின் நம்பர் 1 chef என்ற நினைப்பினிலேயே போட்டியினில் குதித்தான், சிபீ.
இப்படியான போட்டியிலே இறங்குவதற்கு தில்லுடன் போக வேண்டுமென்றால் சிபீ எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? ஷாம் என்ன கொடுக்கின்றாள் என்று கூட கொஞ்சமும் சிந்திக்காமல் வாங்கி முழுவதையும், ஒன்றையும் காணதவன் போல குடித்து விட்டான், சிபீ. இதில் ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று ஜேடீக்குத் தெரிவதில் நியாயம் இல்லை. ஆனால், ஒரு வில்லங்கம் நடக்கப் போகின்றது என்று இப்போ ஊகிக்காத ஜேடீ, பிரச்சனை வந்ததின் பின்புதான் அவனுக்கு மூளையிலே விறைக்கும். அப்போது அதனை சிபீயிடம் ஜேடீ சொல்லுவான்.
ஷாம் ஏன் தங்கள் குடும்பத்தினுள் இருக்கின்றாள் என்று கூட சிந்திக்க முடியாத, அதைப்பற்றி விளங்கிக் கொள்ள முடியாத சிபீ என்னென்று இந்தப் பெரிய கொம்பனியினைக் கட்டி ஆள மூடியும்? சிபீயின் ஒரேயொரு நோக்கம், தமிழைத் தோற்கடித்து, இவள் தனக்கு நிகரானவள் இல்லை என்று ஜானுவுக்கு நிரூபித்து தான் தமிழை வீட்டை விட்டு கலைத்துவிட வேண்டும், அதாவது, அதிகாரபூர்வமாகக் கலைக்க வேண்டும் என்பதுதான் சிபீயின் ஒரேயொரு குறிக்கோளாக இருக்கின்றது. இப்படியான, குறிக்கோளினை உடையவர்களின் மனமோ நாற்றங்களைக் கொண்டிருக்கும் ஒரு துர்நாற்றக்கிடங்குக்கு ஒப்பாகும்.
அதுமட்டுமல்லாமல், தமிழ், ஜானுவுக்கு, தங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ நன்மைகளினைச் செய்கிறாள் என்று கூட சிந்திக்கத் தெரியாதவன்தான் சிபீ. ஆனால், தமிழ் நல்லவள் என்று எப்பவோ ஜேடீக்கு விளங்கிவிட்டது.
தேனு college க்குப் போய் ஒரு கிழமை ஆகவில்லை, அதற்கிடையில் அவளுக்கு விலை உயர்ந்த பரிசினை யாரோ நண்பர் பரிசாகக் கொடுக்கின்றார் என்றால் அதெல்லாம் ஏனென்று விளங்காதவளாக இருப்பது மட்டுமல்லாமல், தமிழைப் பார்த்து தன்மேல் எரிச்சல் படுகின்றாள் என்று தேனு சொல்வாளாக இருந்தால், அப்போது, தமிழ் வேலையினை இழந்து றோட்டிலே வேலை தேடி அலையும் போது, தேனு, கோள் பண்ணி அக்கா வேலை கிடைத்ததா என்று கேட்டது, அவள் தமிழின் மேலே வைத்த அக்கறையிலா, கவலையிலா, தன் படிப்பு எங்க இடையில் நிற்கப் போகின்றது என்ற சுயநலத்திலா – அன்று நான் குறிப்பிட்டிருந்தேன், தேனு தனது சுயநலம் காரணமாகத்தான் கோள் தமிழுக்குப் பண்ணினாள் என்று. இப்போது சரியா எனது எதிர்வு கூறல்.
படித்துக் கொண்டிருந்த தமிழின் தலையில் ஒரே இரவில் குடும்பப் பொறுப்பு காணாமல் போன தமிழின் தகப்பனாரால் சுமத்தப்பட்டது. அப்படியான ஒரு பெண் சகோதரத்தினைப் பார்த்து இளம் சகோதரம் சொல்லுமென்றால், அந்த இளம் சகோதரத்திற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறான, சகோதரங்களை உங்கள் வாழ்க்கையிலே கண்டிருக்கின்றீர்களா? நான் கண்டேன், நீ்ங்கள்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
இனி என்ன நடக்கும்?
- சிபீ போட்டியில் தோற்க இருக்கையிலே தமிழ் அப்போட்டியிலே வென்று காட்டி Jana Foods இன் பெயரினைக் காப்பாற்றுவாள். இதனால், சிபீ பதவி இறக்கம் செய்யப் படுவானா? இல்லை என்று நினைக்கின்றேன். அதற்குத் தமிழ் பதவியிறக்க விடமாட்டாள்.
- இதற்குப் பிறகும், சிபீ தமிழை விளங்கிக் கொள்வானா? நான் இல்லை என்றுதான் நினைக்கின்றேன். இப்போ சொல்லுங்கள் – கெட்டுப் போன சாப்பாடு கெட்டதா? அல்லது நல்லதா? சிபீயினைப் பொறுத்தமட்டில், கெட்டுப்போன சாப்பாடு நல்லதுதான். ஏனென்று விளங்குகின்றதா?
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!