posted 8th August 2025
07ஆம் திகதியின் Review & Analysis
- காடையரிடமிருந்து வர்ஷினி மீட்கப்பட்டாள்.
- நல்ல உணவு, கெட்ட உணவுக் கேள்விகளின் விடை தெரிகின்றதா?
- வர்ஷினாயைக் கண்டித்து வளர்க்காத மீனா கண்டிக்கப் பட்டாள். ஒன்றுமே தெரியாதவாறும், > மனதினிலே ஒரு உறுத்தலும் இல்லாதவாறும், நழுவிய அமுதாவும், வெண்பாவும்.
- உண்ணும் வீட்டிற்கு ஒரு துளி கண்ணீர் போலியாகத்தன்னும் விடாதபடி அவர்களுக்கு பணத்தாசை தடுக்கின்றது. ஆனால், தமிழ் துடித்தாள், ஆனால், இவர்கள்?
- பணத்தைக் கொடுத்துப் பாருங்கள் இவர்களின் கண்கள் அதற்காகக் கலங்கியே தீரும். அதுமட்டுமா, கூலிக்கு மாரடிக்க எத்தனையோ பேர் இருக்கின்றனர் – இப்படியானவர்களை நமது வாழ்க்கையிலே காணுகின்றோம்தானே!
- கணேஷனிடம் வர்ஷினியைக் காணவில்லை அண்ணன் என்று சொல்லியும் அதைப் பற்றி கணக்கெடுக்காத கணேஷன்.
- தமிழின் துணிச்சலான வார்த்தைகள் துயின்று கொண்டிருந்த சிபீயின் நினைவுகளைத் தட்டித் தூக்கின. இப்போதாவது, சிபீயுக்கு தமிழின் கேள்விக்கு பதில் தெரியுதா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 07 & 08.08.2025
பப்பினை விட்டு வெளியே போன வர்ஷினியினை அதிஷ்ட வசமாக தமிழ் கண்டாள். காரினை நிற்பாட்டச் சொல்லி வர்ஷியினைக் கடத்திச் சென்றவர்களைப் பிடித்து தனது முழுப் பலத்தையும் சேர்த்து உதைத்தாள், தமிழ். பின்தொடர்ந்த சிபீ தமிழுக்கு உதவியாய் கடத்தியவர்களைப் பதம்பார்த்தான்.
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள், வர்ஷினி. வர்ஷினிக்கு குடிப் பழக்கம் முன்பிருந்து இருப்பதாக சாம் அந்தக் குடிபோதையிலும், நிறை வெறியிலும், தன்னில் ஒருவித பிழை இல்லையென்று விவாதித்தாள். இந்தக் கூட்டிற்குத்தான் ஒருநாள் வர்ஷினியைக் கண்டித்த தமிழை, ஒரு கைபார்த்தனர், வர்ஷினியும், சாமும்.
துணிச்சலுடன், தன்னை என்ன சொன்னாலும், திட்டினாலும் பரவாயில்லை என்று தமிழ், சிபீயை left to right வாங்கி விட்டாள். ஆனால், ஒன்றுமே கதைக்காமல் சிபீ அமைதியாக தமிழ் சொன்னது முழுவதனையும் வேத வாக்காக ஏற்று மனதினுள் இறக்கினான். தன் அறையினுள் தனிமையில் இருந்து இரைமீட்டான் தமிழ் சொன்னவற்றினை. அவனுக்கோ அனைத்தும் சரியெனப்பட்டது.
ஒரு நாளும் சாமைத் திட்டாத சிபீ அன்றிரவு சாமைத் திட்டிவிட்டான்.
காலை விடிந்தது. என்ன நடந்தது முதல் நாள் இரவு என்பது வர்ஷினிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. கட்டி அணைத்துச் சென்ற தமிழின் அன்பையும், அவளின் உண்மையான பாசத்தையும், தாயிடம் கிடைக்காததனை முழு உணர்வுகளுடனும் உள்வாங்கினாள் வர்ஷினி. தூக்கி எறிந்தாள் சாமை. வெட்கம் இருந்தால்தானே சாமுக்கு, அதிலே புழுங்கி்ப் போவதற்கு.
அப்போது அங்கு நுளைந்த ஜேடி, வர்ஷினியின் மாற்றத்தினைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அத்துடன், சைகையையும் தமிழுக்குக் காட்டானான். அப்போது, ஜேடிக்கான ஒரு கேள்வி தமிழிடம் இருந்தது, இதனை எனது representative தமிழ் கேட்பா. ஜேடீ, நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? நல்லவன்தான் என்ற ஜேடீ சொன்னான். அப்போது தமிழ் கேட்டாள், யார் சொன்னது? அப்போது ஜேடீ, சொறி, இல்லையில்லை, நான் கெட்டவன் என்றான். அப்போது, யார் சொன்னது என்று தமிழ் கேட்டாள்? என்ன தமிழ் இப்படியெல்லாமா கேட்பாய் என்னிடம். பதிலைச் சொல்லு ஜேடீ என்றாள் தமிழ். இதற்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
இந்த முழு நிலைகளிலும், தமிழ், சிபீயைச் சமாளித்தாள், நிலைமையின் seriousness இனை விளங்கப்படுத்தினாள், கோபத்தால் வெகுண்டெழுந்த ஜனாமாவை cooled down பண்ணி, அவவின் உடல் நலத்தினைக் காப்பாற்றினாள், வர்ஷினியை கவனமாகவும், ஆதரவாகவும் அணைத்துச் சென்றாள். இது இவ்வளவினையும் தனி ஆளாக தமிழ் செய்தாள். இது இலேசான விடயம் அல்ல.
ஆனால், இவ்வளவும் செய்த தமிழுக்கு, அதுவும், தன் மகளினைப் பாதுகாப்பாக, எதுவிதமான சேதாரமும் இல்லாமல் வீட்டிற்கு கூட்டி வந்தவளுக்கு பல மாதங்களாக காணாமல் போய்க் கொண்டிருக்கும் 30,000 ரூபா பணத்தைப் பற்றிக் கேட்டதும், அமுதாவின் பக்கம் சார்ந்து தரக் குறைவாகப் பேசியது, நெஞ்சுக்குப் பொறுக்கவில்லை.
ஒரே இரவில் எல்லாச் சொத்துக்களையும் இழந்தது தமிழின் குடும்பம். ஒருசில கிழமைகளின் முன்பு தமிழின் நிலைமை உங்களுக்குத் தெரியும்தானே! எவ்வளவோ பணத்தில் மிதந்தவர்கள்தான், தமிழின் குடும்பம். அவ்வளவுக்கு அவர்கள் பெரிய செல்வந்தர்தான்.
இப்போது அவளுக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள். பூமாதேவி போன்று பொறுத்துக் கொண்டாள், தமிழ்.
எல்லாவற்றினையும் பொறுத்துக் கொள்ளுங்கள், பூமி ஒருநாள் உங்கள் கைவசம்.
ஜனாவின் மனதிலே உள்ளதனை ஜனா தமிழிடம் சொல்லி விட்டா. தமிழ் நீ இங்கு வந்த பின்பு எவ்வளவோ ஆறுதலாக இருக்கின்றது. நீ என்னுடன் இருந்தால் எவ்வளவோ நல்லாக இருக்கும். இல்லை ஜனாம்மா, எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறதல்லவா, என்றாள் தமிழ். இதுதான், இறுதியில் நடக்கும். தமிழ் இந்த வீட்டு மகாராசி என்பது கெதியில் தெரியவரும். இதெல்லாம், ஒரு பக்கம் பார்த்தால் தமிழ் ஜனாவின் மனதினுள் அவவுக்கே தெரியாமல் எப்பவோ நுழைந்து விட்டாள்.
ஜனா foods இன் பங்கு தாரர்கள் தங்கள் சொந்த புத்தியினைப் பாவிக்காமல், நான் நினைக்கின்றேன், கணேஷனின் தூண்டுதலினால், ஜனாவின் குடும்ப விவகாரத்தில் தலைப்போட்ட எல்லாருடைய பங்குகள், ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்துச் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வினோத்திடம் கட்டளை இட்டா ஜனாம்மா.
கணேஷனும் தனது ஆட்டத்தினை ஆடிக் கொண்டுதான் இருக்கின்றான். பங்குதாரர்களை ஜனாவின் பக்கம் திருப்பி பிரச்சனைகளை புதுசு புதுசாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றான். இதனையும் சிபீ கண்டு பிடித்து விட்டான் என்று கணேஷன் இன்னமும் உணரவில்லை. கணேஷனின் மனதினுள் இவ்வுணர்வு வந்திருந்தால் மேலும் மேலும் பிரச்சனைகளை அவன் உருவாக்கிக் கொண்டிருப்பான்.
மீனா, அண்ண வர்ஷினியைக் காணவில்லை என்று சொல்லியும், நான் இங்கு ஒரு அலுவலாக வந்திருக்கிறேன் என்று கணேஷன் சொன்னது, இந்த பங்கு தாரர்களை நாளைய கூட்டத்திற்கு ஜனாமாவிற்கு எதிராக ஆயத்தப்படுத்தற்குத்தான்.
ஜனாம்மாவின் ஆத்திரத்தில் இந்த முடிவு வேண்டாம் என்று தமிழ் கூறியதற்குக் கட்டுப்பட்டா ஜனாம்மா. தமிழ் ஒரு சின்னப் பிள்ளை ஜனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையிலே, ஏன் ஜனாம்மா தமிழுக்கு மட்டும் கட்டுப்படுகின்றா? அதுதான் இனம் தெரிந்த உள்ளுணர்வின் உறவு என்பது. தமிழின் வேண்டு கோளுக்கிணங்க தனது திடீர் முடிவினை மாற்றிக் கொண்டா ஜனாம்மா.
இதனால், சிபீயுக்கு உயர் பதவியினை வாங்கிக் கொடுத்தாள், தமிழ். ஆனால், தமிழுக்குக் கீழேதான் சிபீ வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவவுடைய நிபந்தனை. இதற்கு சிபீயும் விருப்பம் தெரிவித்தான்.
அத்துடன் ஒரு condition, சிபீயிடம் ஜனாம்மா சொன்னா இனி நீ தமிழுடன் சண்டை பிடிக்காதே என்றதும் அதனையும் சிபீ ஏற்றுக் கொண்டான்.
இனி தமிழும், தானும் சேர்ந்து கொம்பனியைப் பார்த்துக் கொள்ளுவோம், நீங்கள் வீட்டிலிருந்து ஓய்வு எடுங்கள் என்று தமிழும், சிபீயும் கேட்டுக் கொண்டார்கள். அதனையும் ஏற்றுக் கொண்டா.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
இனி என்ன நடக்கும்?
- பங்கு தாரர்கள், இல்லை மடம், இனி அப்படி செய்ய மாட்டோம், கேட்கவும் மாட்டோம், Extremely sorry. என்றார்கள். ஒன்றையும் ரத்துச் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார்கள். ஜனாம்மா, ரத்துச் செய்வாவா? அவர்களை மன்னித்து, இதுதான், முதலும், கடைசியுமாக இருக்கட்டும் என்று மன்னிப்பாவா? நான் நினைக்கின்றேன், ஜனாம்மா மன்னிக்க மாட்டா. எல்லாம் ரத்துச் செய்யப்படும்.
- சிபீ, தமிழிடம் நன்றி சொல்வானா, தன் தங்கச்சியை மீட்டெடுக்க உதவியமைக்கு. அப்போது தமிழின் reaction என்னவாக இருக்கும். Guess பண்ணுங்கள் பார்க்கலாம்.
- சிபீக்கு விளங்கியிருக்கும் இதெல்லாம் மாமாவின் குத்தல்தான் என்று. சிபீ மாமனாரிடம் கேட்பான். இப்படி, சிந்தித்துப் சிபீ பிடிப்பது மாமனாருக்குப் பிடிக்காதே?
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!