posted 15th July 2026
இன்றைய வரைக்குமான வாரிசு தமிழ் சீரியலானது, எப்படியாவது பிரபுவின் கள்ளத்தனத்தினை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற தமிழின் முயற்சிகள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் பறந்து போய்விட்டன. கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்ட பிரபுவின் காதலி, லிடீயாவையும் கை நழுவ விட்ட தமிழ். பிரபுவின் நண்பன் ஒருவனைக் கண்டுபிடித்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிபீ, தமிழுக்கு மறை முகமாக உதவிக் கொண்டிருக்கின்றான் என்பது தெரிகின்றது. சிபீ்க்கு எப்படி ஆரம்பத்திலே அனைவரும் பிரபுவைப் பற்றி விசாரிக்கும் போது ஒரேமாதிரியாக கூறியது போன்று இப்போது ஆட்கள் கூறுவதும் ஒன்றாகவே இருக்கின்றது என்று தமிழின் மூளையிலே தட்டியது.
லிடீயா கிறுதியினால் வீட்டின் முன்னால் பிரபுவின் உதாசீனத்தின் அதிர்ச்சியால் விழுந்தது உண்மை. தமிழிடம் லிடீயா மறுநாள் வருவதாக உத்தரவாதம் கொடுத்ததும் உண்மை. லிடீயாவை பிரபு வெருட்டியதும் உண்மை. ஆனால், இவற்றையெல்லாம் தமிழ் சுதாகரிக்காததுதான் உண்மையில்லை.
Varisu - வாரிசு - 01.07.2026
பிரபுவின் மேலே உண்மையான காதல் இருந்தது லிடீயாவிற்கு நிஜம்தான். பிரபுவின் மேலே வர்ஷினி காதல் கொண்டதும் உண்மைதான். வேண்டுமென்றே பிரபுவின் குடும்பம் ஜனாம்மாவை ஏமாற்றுவதும் உண்மைதான். பிரபுதான் குறிஞ்சியின் மகன் என்ற உண்மை தெரிந்ததும் ஜனாம்மாவின் வீட்டாருக்கு பிரபு சொன்னானே பாருங்க அதுதான் உண்மையில்லை.
உண்மையெல்லாவற்றையும் பொய்யாக்கிக் கொண்டிருப்பதையே தொழிலாகக் கொண்டவன்தான் பிரபு. ஜனாம்மாவை ஒழித்துக் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவன்தான் குறிஞ்சி. அவனின் மகனும், தாயும் குறிஞ்சிக்காக ஜனாம்மாவைப் பழிவாங்கத் திரிவதும், ஜனாம்மாவையும், வர்ஷியையும் ஏமாற்றிக் கொண்டு தனது காலத்தினை கணேஷன் போல ஓட்டிக் கொண்டிருக்கும் பிரபுவின் உண்மையான சுயரூபமானது வெளியில் கெதியில் வரும் என்பது வெகு தூரத்தில் இல்லை. உண்மையானது வெகு காலத்திற்கு அடங்கி இருக்காது.
பிரபுவின் வலையமைப்பானது மிகவும் துல்லியமானது. சாதாரணமாக ஒருவராலேயும் அறுக்க முடியாது. பிரபுவோ அதிலே ஊறிய ஒரு கில்லாடியாச்சே! அவனுக்கு தமிழ் போன்றோரெல்லாம் ஒரு தூசிக்குச் சமமே.
அவனுக்கு எதிரான சாட்சி என்று கொண்டு வரும் எல்லாவற்றையும் சிம்பிளாக உடைத்தெறிவான். எறிந்து கொண்டுதான் இருக்கின்றான். லிடீயாவை தமிழ் அணுகுவாள் என்று எதிர் வரவுள்ள நிகழ்வுகளையெல்லாம் நுணுக்கமாகக் கணித்து காயினை நகர்த்துகின்றான் பிரபு. அவன் எல்லாவற்றினையும், தன்னுடன் சம்பந்தமான எல்லாரையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
ஜனாம்மாவின் காப்பி மேசையிலே sofaவிலே இருந்து கொண்டு தமிழ் மேல் வீட்டினிலே தன்னை அவதானித்துக் கொண்டிருக்கின்றாள் என்று தெரிந்ததும், அதனை மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும் பார்ப்பதற்காக அந்த மேசையினை பிரபு சுத்தம் செய்கின்றான். இதனால், அவனுக்கு பிரகாஷின் அபிப்பராயம் அதிகரிக்க வைத்தான். மீனா விபரமானவவாக இருந்தாலும் அவவையும் நம்பும்படி பிரபு செய்ததனை வைத்து பிரகாஷ் விளங்கப்படுத்தினார்.
ஜனாம்மாவின் கூற்றுப்படி பிரபுவின் கள்ளங்களைப் பிடிக்க வேண்டுமென்றால், இராவணணாகத்தான் மாறவேண்டும் என்பதற்கிணங்க, தமிழின் மாற்றம் என்னவாக இருக்கும்?
சிபீ, தகப்பனுடன் ஒற்றுமையாக நிற்பதானது உண்மையாக இருக்கும் என்றில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. ஏனென்றால், தனது தங்கையின் வாழ்க்கையினைக் காப்பாற்றுவதற்காகவே சிபீ நடிப்பதாகத் தெரிகின்றது!
தமிழால் பிரபுவின் பெலவீனத்தினை கண்டு பிடிக்க வேண்டும். அப்போதுதான் பிரபுவை வீழ்த்த முடியும். எல்லாவற்றினையும் கண்டு பிடிக்கத் தெரிந்த தமிழுக்கு இதெல்லாம் மிகவும் இலகுவாகவே இருக்கும் எனவும் கூறிக் கொள்ள இடமுண்டு.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!