
posted 22nd August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- உரிமையுடன் ஜனாம்மாவின் வீட்டினுள்ளே பாட்டியின் வீடு என்று கால் வைத்த தமிழினை ஆராத்தி எடுத்து வீட்டினுள்ளே அழைத்துச் சென்ற ஜனாம்மா. தனக்குள்ள உரிமைகளை அனைத்தையும் தமிழுக்குக் கொடுத்து நான் என்றால் தமிழ் என்று அறிமுகப்படுத்தினா.
- தமிழோ வீட்டின் மகாறானி – ஏனென்றால், தமிழின் அம்மா ஜெயாதான் அந்த வீட்டின் மகாறானியாக இருந்ததனால்தான். ஜனாம்மாவின் குணத்தினை எல்லாவற்றிலும் ஒத்துள்ளவ தமிழ் என்று புகழானம் சூட்டினா முத்தம்மா.
- சிபீயும் நல்லவர்தான், ஜனாம்மா மாதிரி றொம்ப பிடிவாதம் பிடித்தவர் என்று ஒரு certificate ரினை தமிழிடம் ஒப்புவித்தா, முத்தம்மா.
- சேது, கணேஷனின் மகன் இங்கு entry ஆகின்றான். இவன் தகப்பனுக்கு just oppositeஆக இருக்கின்றான், குணத்திலும் சரி, பழக்க வழக்கத்திலும் சரி – இதனால் இவனின் வரவை கணேஷன் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இதன் விபரம் ஏன் என்று பின்புதான் தெரியும்.
- ஷியாம் ஒழுக்கமற்ற வார்த்தைகள் தமிழுக்குப் பேசியதினால், கோபத்தில் ஷியாமை அடித்து விட்டாள் தமிழ். இதுதான் ஆரம்பம் என்று இறுக்கிச் சொன்னாள் தமிழ்.
- கணேஷனின் கடிவாளம் இப்போது தமிழின் கையில். பெட்டிப் பாம்பாக அடங்கினார், கணேஷன். மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத நிலை. இதேபோலத்தான், சிபீயுக்கும் நடக்க வாய்ப்புகள் உண்டு. இனி அவர்தான் அடுத்தது.
- ஷியாம் அடங்காவிட்டால், அடிபட்டு திரத்தப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 21 & 22.08.2025
உரிமையினைக் கையிலெடுத்தாள் தமிழ். காலைச் சாப்பாடு இத்தனை மணிக்குச் சாப்பிட்டு விட்டு அரை மணி நேரத்தில் அவரவர் வேலைக்குப் போய் விட வேண்டும் என்பதுதான் ஒழுங்கு. இல்லை என்றால் சாப்பாடு இனி இல்லை என்று தமிழ் சொல்லாமல், சாப்பிட்டே ஆக வேண்டும் அதுவும் எல்லாரும் ஒன்றாக இருந்த சாப்பிட வேண்டும் என்பதுதான் இனி ஒழுங்கு என்றாள் தமிழ்.
வர்ஷினியின் அறையினை share பண்ணப் போன தமிழினை எதிர்த்து நின்றாள். தமிழ்தான் வர்ஷினியினை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்டவள். அவளும் தனது மாமா, கணேஷனை வைத்து தமிழினை வெளியேற்ற வேண்டும் என்று sense இல்லாமல் கூட்டிக் கொண்டு போகின்றா. அப்போதுதான் தமிழ் கணேஷனுக்குக் கடிவாளத்தினை மாட்டி விட்டா. இனி தமிழின் அடுத்த சொல்லுக்கு எதிர் சொல்லு சொல்ல முடியாமல் தொண்டைக்குள்ளே முள்ளு பொறுத்தது போன்று இனி கணேஷன் இருப்பான்.
ஷியாம் தேவையற்ற, அதுவும் அசிங்கமான வார்த்தையினைத் தமிழுக்கு எதிராக பேசியதனால், தமிழ் அவளுக்கு ஒரு அறைவிட்டு அடக்கினாள். அத்துடன் ஆடிய வால்களும் அடங்கிப் போயின. இனி, வாயினை சாப்பிட மட்டும்தான் திறக்க வேண்டும் என்பதுதான் சொல்லாமல் சொன்ன order. இதையிட்டு சிபீ தனது மடத்தனத்தினை தமிழிடம் காட்டப் போய் ஜனாம்மாவால் அடக்கி வைக்கப்பட்டான். சூடு ஏன் ஒருமுறை பட்டால் சிபீயுக்கு உணர்வு வருகுதே இல்லை. தமிழின் suitcaseஇனை வெளியே தூக்கி எறிந்த சிபீ திருப்பி அதனை உள்ளே எடுத்துவரும் படி கட்டளையிடப்பட்டான், ஜனாம்மாவால். இந்தச் சூடு காணாதா சிபீயுக்கு.
தமிழை ஏன் இவனுக்குப் பிடிக்குது இல்லை. என்னாதான் பிரச்சனை என்று மண்டையினைக் குளப்பிக் கொண்டிருந்தான் சேது. இந்தப் போக்கு காதலில் முடியாமல் கல்யாணத்திலல்லவா முடியப் போகின்றது என்பது சேதுவின் ஊகத்தினை விட எனது ஊகம்தான் கூட.
பிரகாஷின் இந்த நிலைக்கு கணேஷன்தான் காரணம் என்று எப்பவோ சொல்லி விட்டேன். அது இப்போ வெளிச்சத்திற்கு வந்து விட்டதே!
கணேஷனுக்குப் போட்ட கடிவாளம் காணும் அமுதாவுக்கென்று பிறிம்பாகப் போட வேண்டுமென்றில்லை. அதை கணேஷனே போட்டு விடுவான்.
அப்போ, தமிழ் வந்த ஒரு நாளிலே இருவரின் அடக்கமும் தமிழின் கையிலேயே இப்போது.
அதற்காக வேண்டி வெகு சீக்கிரமாக தமிழ் பிரகாஷின் கொலை முயற்சியில் கணேஷனைப் போட்டுக் கொடுத்து விடுவாளா? அதுதான் இல்லை. தமிழின் வேலை குடும்பத்தினைப் பிரிக்கிறதல்ல. மாறக, ஒவ்வொருவரையும் திருத்தி ஒற்றுமையான குடும்பமாக்குவதுதான். அதுதான் ஜனாம்மாவின் விருப்பமும் கூட. ஆனால், கணேஷன் திருந்துவான் என்று நினைக்கிறீங்களா? கொமென்றிலே உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க பார்ப்போம்.
இது எனது குடும்பம் என்று அறுத்துறுத்துச் சொன்னது ஏன் என்று விளங்கும் அளவிற்கு அங்கு அப்போது நின்ற வர்ஷினிக்கோ, வெண்பாவுக்கோ அல்லது ஷியாமுக்கோ விளங்கவில்லே. ஏன் அவர்களுடைய காதுதக்குக் கேட்கவேயில்லை? எப்படியாவது தமிழை வீட்டை விட்டு திரத்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களின் இப்போதைக்கு முழு நேர திட்டமாக உள்ளது.
தமிழுக்குப் பேயைக் கண்டால்தான் பயம் என்று வர்ஷினியையும், வெண்பாவையும் கண்டவுடன்தான் தமிழ் அப்படிச் சொன்னா. தமிழைப் பார்க்க பேய்க்கு பயப்பிடும் ஒருத்தி போலவா இருக்கின்றது? இப்படிப் பயமுறுத்தலாலே சிலசமயம் தமிழ் சிபீயினைப் பயத்தில் கட்டிப் பிடிக்க வாய்ப்பினை இவர்கள் ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
கேடீதான் இங்கு உள்ளதால் தமிழைப்பற்றி சேது கேடீயிடம் அறிய வாய்ப்புகள் உண்டு. கேடீ உண்மையாகவே நல்ல ஒரு ஆத்துமம் ஆதலால், தமிழைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லுவான். இதனால், சேதுவுக்குத் தமிழை நன்கு பிடிக்கும். தமிழை சகோதரியாக நினைத்துப் பழகுகின்றான், சேது. அது கூடிய சீக்கிரம் உண்மையாக அமையும் என்பதும் என ஊகம்.
என்னவெல்லாம் நடக்கப் போகின்றதென்று பார்க்கத்தானே போகின்றோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!