பேரன்பு - Peranbu - 09.08.2023 -  கார்த்திக்கையே கலைக்கும் ஷென்மதி

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஒருவித குளூவும் இல்லாமல் ஷென்மதி சொன்ன கோவிலுக்கு வந்திறங்கிய கார்த்திக்கு ஆச்சரித்துக்கு மேல் ஆச்சரியங்கள் கொட்டத் தொடங்கிற்று.

என்னடா ஷென்மதியையும் இன்னமும் காணோம். ஷென்மதியுடைய தகப்பன் என்னடா என்றால் நேற்று என்மேல ஏறிவிழுந்தார் - அருண் என்னடா என்றால் நல்ல மரியாதையோட கதைக்கிறான் - என்ன நடக்குது என்று புரியாமல் கார்த்திக் கூப்பிட்ட பக்கத்துக்கு போக வேண்டியதாயிற்று.

அங்கே போனால் ஒரு கொண்டாட்டத்திற்கு ஆயத்தங்கள் என்று மட்டும் கார்த்திக்கு விளங்கிற்றுது. ஆனால், என்ன கொண்டாட்டம் என்று யாராவது சொல்லுவாங்க என்று கார்த்திக் சுற்றிலும் பார்த்தா பெத்தவ முழிஞ்சு கொண்டு நிற்கிறாங்க.

என்னையும், அம்மாவையும் தவிர மற்ற எல்லாரும் ரொம்பச் சந்தோஷமாக நிற்கிறதைப் பார்த்தா ஒன்றும் அசம்பாவிதம் நடக்காது என்று ஒரு பட்சி கார்த்திக்குடைய உள் மனசுக்குள்ள இருந்த சொல்வது கேட்டுது.

ஷென்மதி சும்மா இந்தக் கோவிலுக்கு வா கார்த்திக் என்று சொன்னதும் ஏதோ அலுவலாக நின்ற கார்த்திக் அப்படியே வந்திருக்க ஷென்மதியுடைய வீட்டார் எல்லாம் நல்ல விஷேஷத்திற்கு வந்தால்போல தடல்புடலாக நின்றதைப் பார்த்த கார்த்திக் என்னவாக இருக்கும் என்று யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

நம்ம கலாச்சாரத்தில யாரையும் நம்பாட்டியும் சாத்திரத்தையும், சாதகத்தையும் நம்பாமல் இருக்க முடியாது.

சாதகத்தைத் துளாவிப் பார்த்த சாத்திரியார் ஷென்மதிக்கு பத்து நாட்களுக்குள்ள கல்யாணம் நடக்கணும். இல்லையென்றால், ஷென்மதியுடைய கல்யாணப் பேச்சை விடவேண்டியதுதான் என்றதை ஆழமாக நம்பி மகளுடைய வாழ்க்கையில் றிஸ்க் எடுக்க இயலாது என்று திடுதிப்பென தொடங்கியதுதான் இந்த அவசரமான ஒழுங்குகள்.

எங்கள் எல்லாருக்கும் உன் விருப்பத்தில சந்தோஷம் என்று ஷென்மதியின் தகப்பன் றெஸ்ரோறன்றில கூறியது ஷென்மதிக்கோ நம்ப முடியாத சந்தோஷம். உன்ர கல்யாண விஷயத்தைதான் சொல்கிறேன் என்று முக மலர்வோட அப்பா சொன்னது - இதுதான் என்ர அப்பா என்று, அப்பா! என்று கட்டி அணைத்தவள் அப்பா தன்விருப்பத்திற்கு ஆடர் செய்த உணவுகளை சாப்பிடத் தொடங்கினாள். ஷென்மதி, கார்த்திக்கிடம் சொல்லிரு என்று அப்பா சொன்னது - அவவுக்கு இருந்த பசியையும் கலைசிற்றுது.

றாஜேஸ்வரியுடைய குடும்பம் சந்தோஷமாக இருந்தால் இந்த வெட்கையில யாருக்கும் வேர்க்காட்டிலும் அமுதாவுக்கும், ஆர்த்திக்கும் வேர்த்திரும். அழைக்காமலே ஆஜராகினாங்க அமுதாவும், ஆர்த்தியும் கோவிலுக்கு.

அதுதானே பார்த்தன் - இந்தக் கொண்டாட்டம் சுமூதாகப் போகுதுஎன்று. இனி என்ன என்னதான் நடக்கப் போகுதோ - முருகா! என்று கும்பிடத்தான் எங்கலால முடியும்.

இந்த நேரம் ஷென்மதி அழகாக உடுத்தி தேவதை போல வந்ததை - றாஜீயம்மாவுக்கும், கார்த்திக்குக்கும் அவர்கள் வாழ்க்கையில் வானதிக்கு நடந்த விளாஷ்பாக்குகள் வந்து போயின.

எப்படியாவது உண்மையைச் சொல்லனும் என்ற நினைக்கையிலே இங்க ஏதோவெல்லாம் நடக்கிறதே என்ற விசனம் றாஜீயம்மாவிற்கு.

இது இப்படி இருக்க, மணப்பெண்ணான ஷென்மதி - கார்த்திக்கை ஒரு கை பார்ப்போம் என்று கல்யாணம் பண்ணிடலாமா என்று கேட்டது - இவள் இன்னமும் என்னைச் சுத்திறாளா என்று கார்த்திக்கு ஒரு பக்கம் உள் மனசில ஓடிக்கொண்டிருக்க, தனது வாழ்க்கையில் நடந்ததை சொல்லாமல் விட்டதை நினைத்து மனம் நொருங்கினான் கார்த்திக்.

கார்த்திக்குக்கோ ஷென்மதி விரும்புகிறதைச் சொன்னதும் - தகப்பனின் பிரச்சினை, வேலை இல்லாமல் போனது, அடுத்த நாள் திடீரென கோவிலுக்கு ஷென்மதி அழைத்தது - இன்றைக்கே வெற்றிலை பாக்கு மாத்தி கார்த்திக்குக்கும் - ஷென்மதிக்கும் நிட்சம் பண்ண ஆயத்தமானது - இப்படி ஒன்று மாதிரி ஒன்று நடக்கையிலே கார்த்திக்குக் கதைக்க எங்க நேரம் இருந்தது.

இப்படி நடந்தால், என்றாலும் அமுதாவும், ஆர்த்தியும் தாங்களாகவே ஆஜராகி றாஜேஸ்வரி - கார்த்திக்குடைய குடும்ப விஷயத்தை புட்டுப் புட்டாக வைக்கையிலே - றாஜேஸ்வரியும் - கார்த்திக்கும் என்ன செய்வதென்று திகைக்கையில் - அமுதாவும், ஆர்த்தியும் வழமையாக உதிர்க்கும் புன்னகை அவர்கள் அடிமனதிலிருந்த வந்தது. இப்படியான திடீர்ச் சம்பவங்கள் உண்மையாக ரெம்பறிதான் - அட உண்மையாகத்தான் சொல்லுறன். பார்க்கத்தானே போறோம்.

கார்த்திக் பக்கம் உள்ள உண்மைகள் ஒன்றும் தெரியாமல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிச்சயதார்த்தம் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியவில்லை.

ஆனால், ஷென்மதி உயிருக்குயிராக கார்த்திக்கையும், கார்த்திக் ஷென்மதியையும் விரும்பியிருக்கையில் இந்தக் கல்யாணத்தில் பிரச்சினைகள் வராது என்று நினைக்கின்றேன். ஆனால், ஐயப்பாவை நினைக்கத்தான் ரொம்ப யோசனையாக இருக்கு.

அன்று, ஐயப்பா தன்னுடைய நண்பனின் மகளின் நிச்சயதார்த்தைக் நிற்பாட்டியதற்குக் காரணம் இருக்கு. அதாவது, மணப்பெண்ணுக்கு அந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அவவுடைய தகப்பனின் விருப்பத்தில்தான் அவ உடன்பட்டா.

இங்கு அப்படியில்லை. ஷென்மதி விரிம்பித்தான் நிச்சயதார்த்தமே நடக்கிறதே!
எதற்கும் பார்ப்போம்.

ஒன்று சொல்லுறன், இந்த அன்பு இருக்குபாருங்க, அது உண்மையாக உள்ளத்தில் உருவானால் எந்த நொட்ட நொடிசலையும் பார்க்காது. ஏனென்றால், அது நெஞ்சத்தால் உருவானது. அது ஒரு உள்ளுணர்வு. உருவாகிவிட்டபின்பு எரிமலைப் பிளம்புகாளால் தானும் அதை உருக்க முடியாது. அவ்வளவு உரமானது. எதிர்த்து நின்றுதான் பாருங்களன்.


Image Credit - Photo by sk on Unsplash
Image Credit - Photo by Jeremy Wong Weddings on Unsplashh)