posted 1st February 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஒருவாறாக தமிழ் வீ்ட்டிற்குக் கூட்டிவரப்பட்டாள். அது ஜனாம்மாவின் மீதான அளவிற்கதிமான பாசம்தான் காரணம்.
- சிபீ, ஜனாம்மாவின் முன்னால் தேவையில்லாதவற்றினைக் கதைத்து விடுவான் என்று தமிழ் சமிக்ஞை காட்டினாள்.
- தமிழுக்குப் புத்திமதி கூறும்படி சிபீ ஜனாம்மாவிற்கு சொன்னதினைக் கேட்டு, அறைக்குள்ளே வரத்தானே வேணும் சார் வாங்க அங்கே கவனிக்கின்றேன் என்று மனதினில் சொன்னவளாய் தமிழ்.
- தமிழை தான் இன்னமும் தனது மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று மீனா பொய் சொல்லுகிறா என்று ஜனாம்மாவிற்குத் தெரியாதா என்ன?
- எல்லாவற்றினையும் இழந்து தான் பெலவீனமாகி விடுவேனோ என்று ஜனாம்மா இன்றுதான் பயந்தா, அதுவும் தமிழ் இல்லைமல் போனபோது.
- கணேஷன் வாங்கிய லட்டு, முதலிலே அவனுக்கே நஷ்டமாகியது.
- பிரகாஷ் மாமாவை தனது outdoorsற்குக் கூட்டிச் சென்று தனது அம்மாவைக் காட்டிய தமிழ். ஆனந்தத்தில் மிதந்த அம்மு.
Varisu - வாரிசு - 29.01.2026
- இசைக்கு விருப்பமானதினை சிபீ கடையினில் வாங்குவது என்பது தமிழ் கேட்ட வளையல்களை வாங்கினால் தனது ego தொலைந்துவிடும் என்பதால், அவளை வெறுப்பேற்றுவதற்காக இசைக்கு விளையாட்டுப் பொருளினை சிபீ வாங்கினான்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
20 வருடங்கள் கடந்தன. பிரகாஷ் தனது தங்கை அம்முவைச் சந்திக்க வைத்த தமிழ். தமிழ் ஏன் வீ்ட்டினை விட்டுப் போனாள் என்று விளங்காததினால், பிரகாஷ் கோபப்பட்டது நியாயமாகத்தான் தோன்றுகின்றது. ஆனால், தமிழின் வார்த்தைகள் அவரை ஆறுதல் படுத்தியது. அதுமட்டுமா, நாங்கள் இருக்கின்றோம், நான் இருக்கின்றேன் என்று வாழ்க்கையில் உரிமையான உறவுகள் கூறுமா என்ற ஏக்கத்தில்தான் அனேகரின் வாழ்க்கை ஓடுகின்றது. ஆனால், பிரகாஷ் மாமா கூறிய வார்த்தைகள் தமிழுக்கோ மிகவும் உறுதியினைக் கொடுத்தது.
பிரகாஷிற்கு இப்போது கிடைத்த வாழ்க்கை தமிழ் போட்ட வாழ்க்கை. அவர் மீண்டும் பிறந்துள்ளார். வீட்டிலேயே பிரகாஷ் ஒருவரையும் இன்னமும் காணவில்லை. இயற்கையின் சுவாசத்தினை இன்னமும் சுவாசிக்கவில்லை.
இனி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக நிகழும் என்பது சுருக்கிச் சொன்னாலும், அதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் ஒன்றாக இல்லாமலாக்கி, சரிபடுத்து மட்டும் பிரகாஷ் அறையினுள் அடங்கித்தான் இருக்க வேண்டும். இது, உயிரா – இறப்பா என்ற வில்லங்கத்தினுள் அல்லாடுகின்றது பிரகாஷின் உயிர். காப்பாற்ற வேண்டியது தமிழ்.
அதற்காக மிகவும் திட்டமிட்டு காயினை நகர்த்த வேண்டும். எனவே, எல்லாவற்றினையும் ஆதாரங்களுடன் நிரூபித்து அவர்களை அடக்கி, பயமுறுத்தி வைத்துத்தான் இதனை சாதிக்கலாம். இதில், riskகுகள் அதிகம் எடுக்க வேண்டியுமுள்ளது.
தமிழ் இப்போதுதானே வளரும் பயிராக உள்ளாள். அவளுக்கோ ஜனாம்மா உயிருடன் ஊன்று கோலாக இருக்கின்றா. ஆனால், ஜனாம்மாவிற்கோ அவவினுடைய கணவன் தவறிய பின்பு அவ எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள் எல்லாம் அவவோ தனியாகவே சமாளித்து இ்ன்றைய நிலையினை அடைந்துள்ளா. எனவே, தமிழுக்கு, ஜனாம்மா ஒரு தூணாக இருந்து தாங்கிப் பிடிப்பா தமிழுடைய இன்ப, துன்ப நிகழ்வுகளிலெல்லாம். அவளும் கெதியில் அடித்து நொருக்குவாள். இனி தமிழின் ஆட்டம் உக்றோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஜனாம்மாதான் புத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றாதானே, இவர் ஏன் மூக்கை நுளைக்கின்றார் என்று சிபீயை பார்த்த பார்வை இருக்கே அதற்கு அர்த்தமோ வேறு. வரத்தானே வேண்டும் அறைக்கு, அப்ப வச்சுக் கொள்ளுகின்றேன் என்பது அர்த்தமாகத் தெரிகின்றது.
பிரகாஷிடம் சத்தியம் பண்ணிய தமிழ் மாமாவை கூட்டிக் கொண்டு outdoorsற்குப் போனாள். அம்மு என்று கூப்பிட்ட வார்த்தையானது எவ்வளவு உள்மனதினில் துடித்திருக்கும். 20 வருடங்களின் பின்பு கேட்ட அந்தக் குரல். உடலே அம்முவிற்கு நடுங்கியது. வாய் விட்டு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது அம்முவிற்கு. அம்முவை, பிரகாஷ் சந்திக்காவிட்டாலும், தமிழ் எல்லாவற்றினையும் பிரகாஷ் மாமாவிடம் சொல்லி விட்டாள்.
தமிழின் outdoorsஇல் பெரிய விருந்து பிரகாஷ் மாமாவிற்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுவும் இடைநடுவே நின்றது. தமிழ் என்று கூப்பிட்டபடி ஜனாம்மா வாசலில் மீனாவோடு நின்றா. தமிழை இன்னமும் மருமகளாக நினைக்கவில்லை என்று நினைவில் வைத்துள்ள மீனாவின் நினைவிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கோவிலில் இருந்து நேராகவே outdoorsற்கு வந்தா ஜனாம்மா.
சிபீயோ இசைக்கு விளையாட்டுப் பொருள் ஒன்று வாங்கியவனாய் தமிழின் outdoorsற்கு வந்து கொண்டிருக்கின்றான்.
இன்று, தமிழின் outdoorsஇல் ஜனாம்மா, மீனா, சிபீ ஒன்றாகச் சந்திக்கப் போகின்றார்களா?
தமிழின் அம்மா ஒழித்து விடுவா. ஆனால், சிபீக்குத் தெரியும் தமிழின் அம்மா யார் என்று? ஆனால், தமிழின் அம்மாவிற்காக ஹசீனா நிற்கையில் என்ன நடக்கும் என்பதுதான் அதிர்சியாக இருக்கின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!