Varisu - வாரிசு - 14.01.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தாமரையின் கல்யாணத்தில் உள்ள உண்மை நிலையினைக் கண்டு கொள்வதற்காக, சிபீ றாஜாங்கத்தின் வீட்டிற்குப் மாறு வேடத்தில் போனான்.
  • றாஜாங்கமும், பாண்டியனும் கதைத்துக் கொண்டதினை அவனது கையடக்கத் தொலைபேசியில் பதிவாக்கினான். ஆனால், பாதுகாப்பிற்காக அதனைப் பகிரவில்லை.
  • பாண்டியனின் கையில் சிக்கிய சிபீயின் கையடக்கத் தொலைபேசியானது கொண்டிருந்த விஷயங்களைக் கண்டு பிடித்தான், சிபீயை அடித்து அடைத்து வைத்தனர்.
  • சிவதானு ஐயாவின் குடும்பத்தில் இப்படியான வில்லங்கமான வில்லங்கம் ஒன்று முளைத்ததினை சிவதானு ஐயா கண்டாலும் அதனை பின்பு அவதானிக்கத் தவறியது மிகப் பெரிய தவறாகிவிட்டது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Varisu - வாரிசு - 14.01.2026

கிராமத்தாரின் வீணான பழியினால் ஜனாம்மா இதெல்லாம் காணும் இனி இங்கு இருக்கக் கூடாது என்று புறப்பட முனைகையிலேதான் சிபியின் entry இருந்தது. ஆனால், பழியுடன் திரும்புகின்றோம் என்பதுதான் அனைவரின் வருத்தமாக இருக்கையிலே, அந்தச் சந்தர்பத்தினை கிராமத்தவருக்குக் கொடுக்காமல் சிபீயின் வருகை இருந்தது.

பாண்டியனின் கெட்ட பழக்க வழக்கங்கள் அம்பலமாகக் கூடாது என்று றாஜாங்கம் மிகவும் அவனை அவதானித்துக் கொண்டிருந்தான். அப்படி இருந்தும், பழக்கமான துஷ்ட குணங்கள் நெடுகவும் அடங்கி இருக்காது. எப்படியாவது வெளியில் வருவதற்கு அப்பழங்கங்கள் தயங்காது. இந்தத் தத்துவத்தினை அறிந்தவனாய் சிபீ ஆதாரத்திற்காக இறங்கினான். ஆதாரத்தினை வெற்றிகரமாகப் பதிவாக்கியும் விட்டான். ஆனால், சிபீ செய்த தவறானது அதனை ஜனாம்மாவுடனோ அல்லது தமிழுடனோ அல்லது இருவருடனோ பகிர்ந்து இருக்க வேண்டும். அப்போது சிபீயின் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது ஏதொரு காரணத்தால் காணாமல் போனாலோ மற்ற தொலைபேசிகளிலிருந்து அதனை எடுத்துக் காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல், கஷ்டப்பட்டு எடுத்த ஆதாரம் கொண்ட தொலைபேசியானதை, சிபீ, சாதரணமாக உள்ளே வேஷ்டியுனுள் சொருகி வைத்தது போன்று வைக்காமல், கையில் காட்டிக் கொண்டு வந்தது அடுத்த weak pointஆகவும் இருக்கின்றது. இதனால்தான், பாண்டியன் உடனே சிபீயின் கையடக்கத் தொலைபேசியினைக் கேட்டான். இதைவிட, போனுக்கு password போட்டு வைத்திருக்க வேண்டும். அதுவும் சிபீ செய்யவில்லை.

எல்லா சிபீயின் முயற்சிகளானது புஸ்வாணமாகி விட்டது. ஆனால், ஏதோ ஒரு சான்று சிக்கி இருக்க வாய்ப்புகள் உண்டு. கத்தி முனையினில் கொண்டு வரப்பட்டவன், றாஜாங்கத்தின் கையாட்களில் முக்கியமானவர்களில் ஒருவன். இவன் மூலம் றாஜாங்கத்தின் உள்ளூரான விஷயங்கள் வெளிவரக் கூடும்.

தாமரையின் கல்யாணம் இனி சிவதானு ஐயாவின் கையில் என்று சிபீ கைகழுவி விட்டான். ஏனென்றால், அந்த விஷயம் அவர்களின் குடும்ப விஷயமாச்சே. றாஜாங்கத்தினதும், பாண்டியனதும் அடாவடித்தனங்கள், அவர்களின் நினைவுகள் எல்லாவற்றினையும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து சொல்லி விட்டாச்சு. இனி, அவர்களின் முடிவு என்பது அவர்களின் பொறுப்பாகும்.

இப்படி சிபீ சொன்னதினை சிவதானு ஐயா நம்பினால் நம்பட்டும். நம்பாமல் விடட்டும். அது அவர்களின் பிரச்சினை. அவர்களின் குடும்பப் பிரச்சினை. ஜனாம்மா சொன்னது போன்று நாங்கள் போய் விடுவோம் என்று அனைவரையும் அளைத்தா. தமிழை ஜனாம்மா நொந்தாலும், ஜனாம்மா தமிழ் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நம்பாமல் இல்லை. ஆனால், தமிழின் வார்த்தைகளோ தாமரையின் நன்மைக்காக என்று சொன்னதில் பூரணமான நம்பிக்கையுடன் இருக்கின்றா.

சிபீயின் வாதமோ, பாண்டியன் நல்லவன் இல்லை, கெட்டவன் என்பதனை உறுதியாகவும், இறுதியாகவும் சொன்னான். சிபீ சொல்வது உண்மைதான் என்பது ஜனாம்மாவுக்கும், தமிழுக்கும் தெரியும். ஆனால், இவர்களுக்குத் தெரியாதல்லவா.

இதைவிட, இந்தக் கல்யாணத்தில் தாமரைக்கு விருப்பமில்லை என்பதுவும், சிவாவுடன்தான் அவளால் வாழமுடியுமே ஒழிய, இல்லையேல் தனது உயிர் தேவையில்லை என்பதனை முடிவெடுத்தவளாய், கேணியினுள் வீழ்ந்து தன்னுயிரினை மாய்க்கத் திடம் கொண்டாள். அதிஷ்ட வசமாக, சேதுவின் கண்ணில் தாமரையின் முயற்சியானது தென்பட்டது, காப்பாற்றப்பட்டாள். புத்திமதியும் கொடுத்தான் சேது.

சேதுவின் வசனத்தில் நம்பிக்கை கொண்டவளாய் வீட்டிற்குத் திரும்பிய தாமரை, சிவாவுடன் வீட்டை விட்டு வெளியேறத் துணிந்தாள். தமிழ் தடுத்தாள். இது தமிழின் தவறா? இவ்வளவு நடந்திருக்கின்றதே, றாஜாங்கத்தினதும், பாண்டியனினதும் குற்றஞ் சுமத்தலுக்கு இவற்றினைச் சொல்ல எவ்வளவு நேரம் செல்லும் தமிழுக்கு. ஆனால், தமிழ் அடங்கி நின்றாள். தாமரையின் செயல்கள் கிராமத்தவருக்கு தெரியக் கூடாது என்று சூட்டப்பட்ட பழியினை ஏற்றுக் கொண்டாள். இதனால், தமிழ் அடங்கிக் கதைக்கின்றாள் என்பதற்காக மரியாதையின்மையாக பாண்டியன் கதைத்தமைக்கு பதில் கூற தமிழால் முடியாதா என்ன?

சிபீயால், றாஜாங்கத்தினதும், பாண்டியனினதும் நாடிகள் அறுந்தன. அதிர்ச்சியில் அனைவர் முன்னாலும் விறைத்துப் போய் நின்றவர்கள் சிவதானு ஐயாவின் தீர்ப்பிற்கு முன்னால்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)