posted 1st February 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவுக்கு சிபீ கொடுத்த அதிர்ச்சியினைத் தாங்க முடியாமல், இனியும் சிபியை தமிழுடன் வாழும்படி கட்டாயப் படுத்தக் கூடாது என்று சிபீயின் விருப்பத்திற்குச் செய்யும்படி விடை கொடுத்தா. சந்தோஷத்தில் துள்ளிய சிபீ.
- இதில், ஜனாம்மா போய் சேர்ந்திற்றாவோ என்று மனதினில் குதூகலித்த கணேஷனும், அமுதாவும். இவர்களுக்கு ஜனாம்மாவின் மீது எந்தவிதமான அக்கறையும் இல்லை.
- சிபீ இனி free என்றுணர்ந்த சம்யூத்தா, வெண்பா, பிறேம். இங்கு பிறேமுக்கு என்ன வேலை என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது. ஜனாம்மாவின் குடும்பத்தவருடன் சேர்ந்த நிற்பதற்கு இவன் யார்?
- ஜனாம்மாவிற்கு வயசாகி விட்டது. மிகுதி வாழ்க்கையினை சந்தோஷமாக சீவிக்க வேண்டிய காலம் இது. ஆனால், முக்கியமாக சிபீயோ ஜனாம்மாவைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றானே! முன்பும் ஜனாம்மாவும் இப்படித்தான் மயக்கத்தில் விழுந்தா. அது சும்மா வெருட்டுவதற்காக. ஆனால், இப்போது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், ஜனாம்மாவைப் பார்த்த டொக்டரின் முகத்தினில் seriousness தெரியவில்லையே! எனவே, இதுவும் சும்மாவாகவும் இருக்கலாம்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 29.01.2026
ஜனாம்மாவும், சிபீ, எப்படியாவது நல்ல பெண்ணான தமிழுடன் வாழட்டும் என்று நினைத்தால், சிபீ தான் சுயமாகத்தான் வாழுவேன், வாழ்க்கையினைத் தொலைத்து அழிந்துதான் போவேன் என்றால், யார்தான் சிபீயைக் காப்பாற்ற முடியும்? ஜனாம்மா சொன்ன மாதிரி, சிபீயை freeயாக விட்டு விட்டா, என்னவும் அவன் இஸ்டத்திற்குச் செய்யும்படி. இந்த முடிவினை சிபீ எதிர்பார்க்கவில்லை. தமிழும் எதிர்பார்க்கவில்லை. பட்டென்று ஜனாம்மா சிபீக்குச் சொன்ன பதிலில் சிபீ சந்தோஷப்பட்டாலும், தமிழ் அதிர்ந்து போனாள்.
இந்த அதிர்ச்சியினை மீனாவினாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழும் இதற்கும் ஒன்றுமே கதைக்காமல் இருக்கின்றாள். இது அவளுடைய வாழ்க்கை. எல்லாரும் புகுந்து விளையாட இவள் வாழ்க்கை என்ன பொது மக்களின் விளையாட்டரங்கா? இப்படியாக சிபீயின் ஆட்டத்திற்கு தமிழால் இனி ஆடிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் இனியாவது வாய் திறக்க வேண்டும். சிபியை இனியும் தமிழால் tolerate பண்ண முடியாதுதானே!
ஜனாம்மாவின் நிலைமை கடுமையாகத்தான் இருக்கின்றது என்று டாக்டர் சொல்லுகையிலே, அனைவரும் அதிர்ந்து போனார்கள். கணேஷனுக்கோ மிகவும் கவலை. ஏனென்றால், சிபீ ஏதும் தமிழின் வாழ்க்கையில் குளப்பம் செய்தால், எல்லாச் சொத்துக்களையும் தமிழுக்கு எழுதி விடுவா ஜனாம்மா என்பதால்தான் இந்தக் கவலையே ஒழிய, வேறென்றும் இல்லை கணேஷனுக்கு.
ஜனாம்மாவின் நிலைமேயோ மிகவும் கடுமையாக இருப்பதனால், அதாவது, shock நிலைக்குப் போய் விட்டாவா என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன், டாக்டரின் புத்திமதியின்படி, இனி கடவுளின் கையில்தான் உள்ளது என்று கைவிரித்து விட்டா.
தமிழை வாட்டினாலும், தமிழ் ஒன்றும் சொல்லாத மட்டும் சிபீ சந்தோஷமாக இருப்பான். ஆனால், தமிழின் அமைதியான செய்கையால் சிபீ பாதிக்கப்படுவானாக இருந்தால், ஐயோ! துரோகம் செய்து விட்டேனே என்று அழுவான். இன்று மட்டும் தமிழுக்காக இரண்டு தரம் அழுது விட்டான் சிபீ. ஜனாம்மாவிற்காக சிபீ அழுததோ இது இரண்டாவது தரம். சிபீயின் அழுகைக்கு உண்மையாக பெறுமதி இல்லாதது போலத்தான் தோன்றுகின்றது. அந்த நேரத்திற்காக, மாரடப்போர் அழுவதைப் போல், சிபீ அழுகின்றானோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
தமிழ் மிகவும் சிரமப்பட்டாள். அத்துடன், மீனாவும், வர்ஷினாயும் மிகவும் நொந்து போனார்கள். தமிழ் எங்கு போகின்றாள் என்று பின் தொடர்ந்தனர். தமிழோ பிள்ளையார் அப்பாவிடம் போனாள். கடவுளே! ஜனாம்மாவை விட்டு விடு, நீ சோதித்தது போதும். ஏதும் நீ ஜனாம்மாவிற்குக் கொடுக்க நினைத்தால் அதெல்லாம் எனக்குத் தா, இல்லை அவவின் உயிர்தான் உனக்கு வேண்டுமென்றால், ஜனாம்மாவின் உயிருக்காக என்னுயிரை எடுத்துவிடு என்றும் கும்பிட்டாள். தமிழ் கும்பிடுவதைப் பார்த்த மீனாவும், வர்ஷினியும் அதிர்ந்து போனார்கள். தாங்கள் கூட இப்படியெல்லாம் கடவுளிடம் மன்றாடுவதில்லையே! இவள் மன்றாடுகின்றாளே என்று வியந்து போனார்கள்.
அது அன்பின் உச்சம் என்றுதான் கூறவேண்டும். எல்லோராலேயும் முடியாது. ஆனால், மீனா, இவள், தமிழ் இப்படி சாமியைக் கும்பிட, உண்மையாக, தமிழுக்கும் ஜனாம்மாவிற்கும் ஏதும் உள் தொடர்பு இருக்குமோ என்றும் யோசிக்க இடமுண்டு. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!