Varisu - வாரிசு - 10 - 13.01.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysisஆனது 10ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையுள்ள Serial Review & Analysis களை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • கண்கலங்கி நின்ற தமிழைக் கண்டு தானும் கலங்கிய ஜனாம்மா. ஆறுதல் கூறி மனமாற்றிய தமிழ். ஜனாம்மாவின் தெரிவு என்றால் சும்மாவா?
  • சிவதானு ஐயா சிபீயை வேண்டுமென்று பழிவாங்குவதற்காகவா வருத்துகின்றார். இல்லையே என்பது தமிழின் வாதம்.
  • சிவதானு ஐயாவின் பேத்தி, தாமரையின் நிட்சயதார்த்தம் ஒருவிதமான கேள்விகளும் இல்லாமல் சுமூகமாகச் சென்றாலும், வாய் பேசாப் பிராணியாக வளர்ந்த தாமரை.
  • தாமரை கல்யாணம் பண்ணப் போவது றாஜாங்கத்தின் மனைவியின் தம்பி பாண்டியன். ஆனால், சிவதானு ஐயாவிற்குத் துரோகம் செய்யத் துணிந்த தம்பியான றாஜாங்கம்.
  • தமிழ் எப்படியோ அதேபோல்தான் ஜனாம்மாவும் தங்களது ஊழியர்களின் இன்பம், துன்பம், சந்தோஷம், துக்கம் எல்லாவற்றிலேயும் கலந்திருக்க வேண்டும் என்பதனை எதிர்த்து நிற்கும் சிபீ, இங்கு, சிவதானு ஐயாவின் வீட்டில் நடைபெற்ற உணவுப் பந்தியில் இதனைக் கண்டுணர்ந்த சிபீ.

Varisu - வாரிசு - 10 - 13.01.2026

  • தாமரையை எப்படி இந்தக் கல்யாணத்திலிருந்து காப்பாற்றலாம் என்பதற்கானது சிபீயிடமிருந்து வந்த விடை.
  • இது வேலைக்காது என்று காதலுக்காக உயிர் துறக்கத் துணிந்த தாமரை. முட்டாள் தனமான முடிவு, எடுக்கக் கூடாது கனவிலும்.
  • வெளியேறச் சென்ற சிவாவையும், தாமரையையும் வழி மறித்த தமிழ். கிராமத்தார் அனைவரும் கூட்டிவிட்டு இருக்கின்றாள் என்று பழிபோட்டனர் தமிழ் மேலே. இதெல்லாம் றாஜாங்கத்தின் setupஆகவும் இருக்கலாம். அப்போது இறங்கினான் ஆட்ட நாயகன் சிபீ கத்தி முனையினில் கொத்திக் கொண்டு வந்தான்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

இதெல்லாம் ஒரு மூன்று நாட்களில் முடிந்துவிடும். அதன் பின்பு ஒரு புது மனிதனாகத்தான் சிபீ வீடு வருவார் என்று திடகாத்திரமாகச் சொன்ன தமிழ். ஜனாம்மா, தமிழ் எப்போதும் உண்மையை, உண்மையாகத்தான் சொல்லுவாள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு ஜனாம்மாவிற்கு.

ஒன்றுமே தெரியாமல் கமத்தினுள் கால் பதித்த சிபீ. சேற்றுடனும், சாணத்திலும் சரளமாக வேலையினைக் கட்சிதமாகச் செய்து முடித்து விட்டவன், அவனது egoவினைத் தூண்டி வெற்றிக் கோட்டினைத் தாண்ட வைத்தாள் தமிழ்.

எங்கெங்கே எந்தெந்த switch சிபீயிடம் இருக்கிறதென்று நன்கு அறிந்தவளாய் தமிழ். நீ ஆடு தமிழ் உன் ஆட்டத்தினை என்று ஜனாம்மா விடை கொடுத்த பின்பு சும்மா கைகட்டி நிற்பாளா தமிழ்.

சிபீயும் தன்னால் இயலுமான முறையில் இணையத் தளத்தினிலே தேடி இந்த கமத்தொழிலினை எவரிடமும் கேட்காமலே master பண்ணலாம் என்று படிக்கையிலே தமிழ் மிகவும் எழிதான உதாரணத்தினைச் சொல்லிச் சீபீயைச் சிந்திக்க வைத்தாள். தமிழ் என்ன சொன்னாள், சிபீ என்ன விளங்கிக் கொண்டான். ஆனால், சிபீ அதனைச் செய்தான்.

தாமரையின் நிட்சயதார்த்தத்தினை நோக்கி அனைத்து ஒழுங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தாமரைக்கோ இந்தக் கல்யாணத்தில் விருப்பமேயில்லை. காரணம் அவள் மனதில் இருப்பவனோ சிவாதான். இதனை உணருவார் இங்கு அங்கு யாருமில்லை. தாய் இருந்தால்தானே தாமரை அவவிடமாவது சொல்வதற்கு. தன் மூச்சுதான் எல்லாம் என்று சிவதானு ஐயா ஓடிக்கொண்டிருக்கையிலே அவருக்கு என்னதான் விளங்கும்?

நண்பிகள் தாமரையை அணுகிக் கேட்கையிலே அவர்களைத் திட்டித் துரத்தி விட்டு, சிவாவைச் சந்திப்பதற்காக மொட்டை மாடிக்குச் சென்றாள் தாமரை. ஓன்றுமே இல்லை என்று தமிழிடம் சொன்ன தாமரை அகப்பட்டுக் கொண்டாள் தமிழிடம். இப்போ தமிழிடம்தான் தாமரையின் கடிவாளம். இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமென்றால் அதனை ஜனாம்மாவாலும் நிவர்த்தி செய்யவும் முடியவில்லை.

தாமரையின் விதியினை சிவதானு ஐயாவின் கையினில் இருந்து கழற்ற முடியவில்லை. சிவதானு ஐயாவே கேள்வியும் கேட்டு விடையையும் சொல்கின்றார். அப்போது கேள்விக்கு உண்மையான பதில்தான் என்ன?

அனால், றாஜாங்கம், தன்னை மரியாதையீனப் படுத்தி விட்டார் தனது அண்ணன், சிவதானு ஐயா என்பதனால் எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தனது மைத்துணனை கைக்குள் போட்டுக் கொண்டு காயினை நகர்த்துகின்றான், அதுதான், தாமரையை, தன் மைத்துணனுக்குக் கட்டி வைக்க முடிவு செய்தான். இதனை, அதாவது, தனது பேத்திக்கு நல்லதுதானே செய்கின்றான் தன் தம்பி றாஜாங்கம் என்று 100%தத்திற்கு மேலாக நம்புகின்றார் சிவதானு ஐயா.

சேதுவின் சொல்லானது தாமரைக்கும், சிவாவிற்கும் நம்பிக்கையினைக் கொடுத்தது. அதன்படி செயல்படுகையில்தான் தமிழ் அவர்களை இடைமறித்தாள். ஆனால், கிராமத்தவர்கள் எல்லாரும் ஒன்று கூடி ஜனாம்மாவின் வாரிசை தப்பாக எல்லாம் பேசினார்கள். ஏன் ஜனாம்மாவையே மரியாதை இல்லாமல் முகத்திற்கு நேராகப் பேசினார்கள். ஜனாம்மாவோ அமைதியாக இருந்தா. ஏன்? சிவதானு ஐயாவிற்காக வேண்டி. ஜனாம்மாவின் ஒரு சொல்லு காணும், major ஆன பெண்ணிற்கு அவவின் விருப்பத்திற்கு எதிராக இங்கு கலாயாணம் பண்ணுகினம் என்று ஒரு complaint அங்குள்ள பொலிஸுக்குக் கொடுத்தால் காணும், அனைத்து கிராமத்தினையே பொலிஸில் கம்பி எண்ண வைக்க எவ்வளவு நேரம் ஆகும்.

பாண்டியனின் கேடு கெட்ட தனங்களெல்லாம் தமிழுக்கோ, ஜனாம்மாவிற்கோ, சிபீ்க்கோ, ஏன் சிவதானு ஐயாவிற்கோ தெரியவே தெரியாது. ஆனால், உண்மையோ வெளியாலே வந்தது அந்த ஆலை மரத்தின் கீழே, கிராமத்தார் ஒருபக்கமும், சிபீயும், சேதுவும் மறுபக்கமும் இருந்து தண்ணி அடிக்கையிலே. பாண்டியனின் பண்பாட்டினை பெருமிதமாகப் பேசியது கிராமத்துத் தண்ணிக் கோஷ்டி. இதனைக் கேட்டுவிட்டு அமைதியாகச் சிபீ போனான் என்றுதான் அனைவருக்கும் தெரியும், சேது உட்பட.

கோவில் கேணியினுள் விழுந்து தனது உயிரினை மாய்த்துக் கொள்ளலாம் என்று பாய்ந்த தாமரையை மீட்டுக் கொண்டு வந்தான் சேது. தாமரையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கள்ளமாக ஓடிக் கல்யாணம் பண்ணுவதுதான் சரியென்று முடிவெடுத்தான் சேது. எல்லா ஒழுங்குகளையும் செய்தான்.

அந்த இறுதிக் கணம்தான் தமிழின் கையில் சிக்கினார்கள், தாமரையும், சிவாவும். தனது தகப்பனும், தாயும் செய்த காரியத்தினை தமிழ் நினைத்தாளோ என்னவோ. அதனால்தான் தமிழ் இவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினாள் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.

இந்த சமயத்தில்தான் தமிழில் முழுப்பழியினையும் கிராமமே சேர்ந்து போட்டார்கள். ஆனால் தமிழோ வாயோ திறக்கவில்லை. அதுதானே தமிழின் உயரிய குணமும் கூட. ஆனால், தமிழ் வாய் திறந்தால், இந்தக் கிராமமே தமிழுக்கு அடிமையாக வேண்டியதுதான். அவளின் அருமையையும், அதிகாரத் தோறனையும் தெரியாதவர்களாய் வாலாட்டும் இந்த கிராமத்தவர்கள்.

கல்யாணம் பண்ணின நாளிலிருந்து தாமரையைத் துன்புறுத்துவேன் என்று பாட்டியனும், றாஜாங்கத்திற்குச் சத்தியம் பண்ணினான். இதன் மூலமாக, தான், சிவதானு ஐயாவை சித்திரவதை செய்து எல்லாச் சொத்துக்களையும் அபகரிப்பதற்கான master plan ஒன்றினைச் செயற்படுத்துவதே இவர்கள் இருவரினதும் நோக்கமே.

அடை மழையிலும், சிபீ தானாக உணர்ந்தவனாய் வயலினுள் இறங்கி வரம்பு வெட்டி தண்ணீரை வடிய விட்டுக் கொண்டிருந்ததனை சிவதானு ஐயா பார்த்து தட்டிக் கொடுத்தார். இவ்வாறன இருவிதமான தட்டல்களும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும்.

ஆனால், சிவதானு ஐயா தனிமையாக அந்த அடை மழையினுள் கமத்திற்கு போவதென்பது மிகவும் ஆபத்தானது என்று அவர் உணரவில்லை போலும். யார் யாரெல்லாம் றாஜாங்கத்தின் அடியாட்கள் என்று சிவதானு ஐயாவிற்கோ தெரியாது. ஏனென்றால் அவர் றாஜாங்கத்தினை மலையினை விட உயர்வாக நம்புகின்றார். இதுதான் சிவதானு ஐயா போன்றோரின் பலவீனமென்தாகும்.

ஜனாம்மாவின் முகத்திற்கு நேராகவும், தமிழின் மேல் பழி போட்ட அனைத்து கிராமத்தவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து சிபீ சும்மா கைகட்டிக் கொண்டு இருந்திடுவானா? அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

அதுதான், இறங்கினான் றாஜாங்கத்தின் துருப்புச் சீட்டினைக் கத்தி முனையினில் கொணர்ந்தான், சிபீ. விறைத்துப் போய் இருந்தனர் இரு மைத்துணர்களும். என்னென்று இவர்கள் ஜனாம்மாவின் குடும்பத்தினைப் பற்றி நினைத்துள்ளார்கள், பட்டணத்தில் இருந்து வந்தவர்கள் மிகவும் மெருதுவானவர்கள், ஊதிவிட்டால் விழுந்து ஓடி விடுவார்கள், அரிவாளைக் காட்டினால் அடிமையாகிக் காலில் விழுந்து விடுவார்கள் என்று ஆளுக்குகாள் கதைத்திடலமா? இனித் தெரியும், A/Cக்குக் கீழே குந்தி இருப்பவனின் சக்தி என்னவென்று.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)