posted 1st February 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 28ஆம், 29ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அயோத்தி லங்காவில், சீதா றாமாரின் கல்யாணக் கொண்டாட்டத்திற்காக அபூர்வாவின் குடும்பமும், ஷாரதாவின் குடும்பமும் வந்தன.
- ககனுக்கும், பூமிக்குமான இரகசிய கல்யாண ஒழுங்கொன்று இருப்பதாக அபூர்வாவிடம் மீரா சொல்லி விட்டா. இதனால், அபூர்வாவினால் ஏற்படப்போகும் விளைவுகளைச் சிந்திக்காமல்.
- தனிமையில் வீட்டினிலே விடப்பட்ட ஷரத்சந்திரா. இது ஒரு பொறுப்பற்ற, அசட்டைத் தனமாகத் தெரிகின்றது. ஷரத்சந்திராவின் மேலே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடைபெற்றன. அனால், இங்கு குடும்பமாக எல்லோரும் வைபவத்திற்கு வந்துள்ளார்களே!
- அபூர்வாவிற்கு பூமியையும், ககனையும் ஒரேயடியாகப் பழிவாங்கக் கிடைத்த சந்தர்பத்தினை நழுவ விட்டு விடுவாளா? றகுறாமிடம் போட்டுக் கொடுத்தாள்.
Salangai Oli - சலங்கை ஒலி - 28 - 29 .01 . 2026
- இக்கல்யாண விஷயமனாது பூமிக்கோ அல்லது ககனுக்கோ தெரியாது. இதனால் ஒருசில பழியினை ககன் வாங்கினாலும், தெய்வம் இருக்கின்றதென்று றகுறாமிற்கு விளங்கப்படுத்தியது. அதனை விளங்குவாராக இருந்தால் றகுறாம், ஷரத்சந்திராவின் உயிர் நண்பனாக இருக்க முடியாதே!
- தாயத்தினைக் கட்டுவதாக, றாமா, தாயத்தினுள் தாலியினை மறைத்து வைத்து பூமிக்குக் கட்டுவதற்கான திட்டத்தினை ஜானகி ஒத்துக் கொண்டு ககனைக் கூட்டி வரச் சென்றுள்ளா. ஆனால், றகுறாமிற்கு அபூர்வா சொன்ன பொய்யான தகவலை விளங்கி உள்ள றகுறாம், குருக்கள் எறிந்த மாலையானது ககனையும், பூமியையும் சுற்றி விழுந்ததைக் கண்டார்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ஷரத்சந்திராவை இரண்டு முறைகள் கொலை முயற்சியில் தோல்வி கண்ட நிலையில் கூட, ஷரத்சந்திராவை தனிமையாக வீட்டினிலே அல்லது வேலையாட்களின் கண்காணிப்பில் விட்டு விட்டு வருவது என்பது மிகவும் ஆபத்தானது என்று ஏன் ஒருவருக்கும் விளங்கவில்லை. அல்லது, சந்தேகத்திற்குள்ளான கொலையாளியும், இங்கு சீதா, றாமா கல்யாணத்தில் பங்கு கொள்வதற்காக வந்துள்ளார்களா? ஆனால், அப்படி வந்திருந்தாலும் இங்கு வந்தவர்களால் நேரடியாக ஒரு குற்றமும் செய்யப்படுவதாக இதுவரைக்கும் இல்லையே.
நயனியால் கைது செய்யப்பட்ட வம்சி, அடி தாங்க முடியாமல், உண்மையினைச் சொன்னான். இதனைக் கேட்ட நயனியும் அவவின் குழுவும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அப்போ முதன்மையான குற்றவாளியாக இருந்தவன்தான் வம்சி. அவனும் இப்போது இல்லையென்றாகி விட்டது. ஏனென்றால், வம்சி, ஷரத்சந்திராவைப் பார்ப்பதற்காக அவரின் Guest houseஇற்குப் போகையிலே, ஷரத்சந்திரா ஏற்கனவே யாரோவால் குற்றப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்பதுதான். அப்போது யார் அந்தக் கொலையாளி?
எனது மீண்டும், மீண்டுமான ஊகம், உண்மையான கொலையாளி அபூர்வா அல்லது நட்சத்திராவாக இருக்கலாம் என்பதுதான்.
சீதா, றாமா கல்யாண நிகழ்வினால் குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினைகள் தீரும் என்பது அயோத்திலங்காவில் உள்ள மக்களின் நம்பிக்கை. இதனால், ககனுக்கும், பூமிக்குமான தேவையில்லாத பிரச்சினையானது சுமூகமாவதற்கு, இவர்கள் இருவருக்குமான இரகசியமான கல்யாணம்தான். இதற்கு றாமா, பூஜையிலுள்ள தாயத்தினுள் தாலியினை ஒழித்து பூமியின் கழுத்தில் ககன் கட்டிவிட்டால் பிறகுள்ள பிரச்சினைகளைப் பின்பு சமாளிக்கல்லாம் என்று கிறிஷ்ணபிரஷாத் ஷாரதாவிடம் கூறி போட்ட திட்டமானது கை நழுவி விட்டது.
ஷரத்சந்திராவின் கொலை முயற்சியில் வந்த புதுத் திருப்பமானது, நயனி சந்தேகப்பட்ட ஒருவரும் இப்போது குற்றவாளிகளாக இல்லாததுதான். ஆனால், குற்றவாளியாகச் சந்தேகப்பட்டுள்ளவராக நினைக்கக் கூடிய நபர், யார் பூமியைக் கொல்ல வாய் பேசாத அடியாட்களை அனுப்பிய நபர்தான் அந்த கொலை முயற்சியின் சூத்திரதாரி.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!