Salangai Oli - சலங்கை ஒலி - 17 .01 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • ஷரச்சந்திராவின் கோளானது பூமியின் வாழ்க்கையினைப் புரட்டிப் போட்டது.
  • பூமி யாரோ ஒருத்திதானே. ஆனால், ஷரச்சந்திராவோ, பூமியை உண்மையாகத் தனது மகள் என நினைக்கவில்லையே! தனது காலில் வந்து விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உண்மையான ஒரு தகப்பன் சொல்வானா? ஆனால் இவர், நட்சத்திராவுக்குச் சொன்னாரா?
  • ஒன்றுமே இல்லாதவள்தான் பூமி என்று கீழ்த்தரமாக நினைத்துதான் இதற்குக் காரணமென்றும் கூறலாம். ஆனால், இவர்கள் ஆண்டனுபவிக்கும் சொத்தோ பூமியுடையதுதான் என்பது இவர்களுக்குத் தெரியவருகையில் இவர்களின் முகம் எத்திசைக்குப் போகும் என்பதனையும் பார்க்கத்தானே போகின்றோம்?
  • ககனிடம் சொல்லாமல் ஓடிவிட்டாள் பூமி. ஐஸ்கிறீமோடு வந்த ககனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஐஸ்கிறீமோ கரைகின்றது. ஆனால், ககனின் மனமோ உறைந்து போனது, பூமியைக் காரினுள் காணவில்லை என்பதனால்.
  • வம்சி தனது முன்னைய காதலி தீபாவின் உண்மையினைத் தெரிந்து கொண்ட ஷரச்சந்திராவைப் பழிவாங்கினான். அந்த சமயத்தில் தகப்பனைத் தேடி வந்த பூமி தகப்பனைக் காப்பாற்றுவதற்காக அவரைக் குத்தியிருந்த போத்தலின் பாகத்தினை இழுத்தெடுத்தாள். குற்றவாளி ஆக்கப்பட்டாள்.

Salangai Oli - சலங்கை ஒலி - 17 .01 . 2026

  • தேடிக் களைத்துப் போய் வந்த ககனை தாயும், தங்கையும் மனமாற்றினார்கள். பூமியைப் பற்றிய ஐமிச்சம் வேண்டாமே என்கையிலே, அதிரும்படியான செய்தியானது TVயிலே சொல்லப்பட்டது.
  • குற்றவாளியாக்கப்பட்டாள் பூமி. வைத்தியசாலையில் கோமாவிற்குப் போன ஷரச்சந்திரா. உயிருடன் இருக்கையிலே உண்மையானது உதாசீனப்படுத்தப்பட்டது. உண்மையானது comaவிலிருந்து எப்போது வெளிவரும்?
  • புருஷன் உயிருடன் போராடுகையில், இங்கு இவர்களுக்கு தேனீர் ஒரு கேடாக இருக்கின்றது.
  • ஷரத்சந்திரா comaவிலிருந்து பூமியைத் தேடி ஏங்கும் காலம் வருவதனை தடுக்கத்தான் முடியுமா?

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

பூமியைக் கலைத்து விட்டோமே, குமர்ப்பிள்ளையாக, வீட்டினிலே பிள்ளையாக இருந்தவள் எங்குதான் போனாள் என்றில்லாமல், காலில் வந்து நீ விழுந்து மன்னிப்பு கேட்காமல், ககனுடன்தானே சுற்றுகின்றாய் என்று கேவலமாகக் கேட்கும் தகப்பனாக ஷரச்சந்திரா இங்கு காட்சியளிக்கின்றார்.

வெளியே பூமியைத் துரத்தி விட்டோமே, என்னென்ன பிரச்சனைகளுக்குள் இருக்கின்றாள் என்றில்லாமல், சரி அவள் ககனுடனாவது இருக்கட்டமே என்றில்லாமல் அவள் மனம் நோகப் பண்ணி இப்போது அவளை ஒரு கொலைக் குற்றவாளியாக பிரகடனப்படுத்திவிட்டாயே ஷரச்சந்திரா.

அப்பவும் அனைவரும் உனக்காகத் துடிக்கின்றனரே ஓழிய, அவள் ஒரு குமர்ப்பிள்ளை என்ன செய்வாளோ சிந்திக்காமல், அனைவரும் வீ்ட்டினுள்ளே ஒய்யாரமாகப் போய் விட்டார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், அபூர்வா, பொலிஸ் ஸ்ரேஷனுள்ளே போய் பொலிஸின் தடியாலேயே பூமியைத் தாக்கின்றாள், பொலிஸார் அனைவரின் முன்னாலேயும்.

அங்குள்ள பொலீஸில் ஒரு கனிவான இதயமும் உண்டென்பதனைக் காண மிகவும் கனிவாக இருந்தது. கடவுள் இருக்கின்றான் என்று.

ஆனால், இப்படி ஷரச்சந்திராவை ஒரு கொடுமைக் காரன் என்று எடுத்தவுடனே வர்ணிக்க முடியாது. அவருக்குக் கோபம் வருவதோ என்னவோ உண்மைதான். ஆனால், அவர் ஒரு நேர்மையானவர் என்பதனால்தான் அவருக்குக் கோபமும் அடக்க முடியாமல் வருகின்றதனை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், பூமியின் விஷயத்தில் கூட அவசரப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகின்றது.

ஷரச்சந்திரா கத்தியினால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் என்று தெரிந்த Binthu, இந்தச் செய்தியினை குடிபோதையில் வந்த Cheryயிடம் சொல்லத் துடித்தாள். அதனை அசட்டை செய்து விட்டு போய் விட்டான் Chery. சரி இவன்தான் குடித்து விட்டான் பூமி இல்லை என்ற கவலையினால் என்று இருக்கையில், கிறிஷ்ணபிரஷாத் அடுத்து வந்தார். அவரும் நிறை போதையில் வந்தார். அப்பாவிடம், மாமா ஷரச்சந்திராவின் நிலைமையினைச் சொல்ல முனைகையில், அவரும் Binthu என்ன சொல்லப் போகின்றாள் என்பதனை தவிர்த்தவராய் விலகிச் சென்றார். கிறிஷ்ணபிரஷாத்தின் அசட்டைத் தனமோ நியாயமானது என்று கூற இங்கு இடமுண்டு. ஆனால், விஷயம் தெரிந்தால், Cheryயும், கிறிஷ்ணபிரஷாத்தும் அவ்வளவுக்கு கல் நெஞ்சம் கொண்டவர்கள் அல்லவே! ஓடோடி விடுவார்கள் வைத்தியசாலைக்கு.

செய்தி கேட்டதும் குடும்பமே வைத்திய சாலைக்கு வந்தது. ஆனால், இதனைச் செய்தது ஒரு பெண். அவளின் பெயரோ பூமி என்று சொன்னதினை அறிந்தவர்களில் ஒருவர் ஷரச்சந்திராவின் தங்கை, கிறிஷ்ணபிரஷாத்தின் மனைவி, மீராவின் வார்த்தைகளோ துரோகம் இளைத்துவிட்டாள் பூமி என்று வாய் விட்டுச் சொல்லி விட்டா.

அதிர்ச்சிச் செய்தியினை அறிந்ததும் ஷாரதாவின் குடும்பமோ அதனை நம்பவில்லை. ககனோ இதில் ஏதோ தவறு நடந்திருக்கின்றது என்று ஊகித்தான்.

சிறையில் வாடும் பூமிக்கு உதவச் சென்ற பொலிஸ் யாரும் இருக்கின்றனரா உன்னை ஜாமீனில் எடுப்பதற்கு என்பதற்கு அவளோ ககனின் பெயரைக் கூடச் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை பூமி என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். அல்லது அவளாகச் சொன்னால்தான் உண்டு. இதைத்தானே தரணியும் சொல்லி இருக்கின்றாளே, ககனுக்கு.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள் பூமி என்று இப்போது ககனுக்குத் தெரிந்து விட்டது. இந்துவின் புருஷன் வம்சி, ஷரத்சந்திரா மீதான கொலை முயற்சியால் மாட்டுப்பட்டவள் பூமி. கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள் இவள்.

ஜாமீனுக்காக வருவான் பூமியைக் காப்பாற்ற ககன். ஆனால், அவனுக்கு முக்கிய பொறுப்புண்டு. இதற்குக் காரணம் யார் என்பதுதான். வம்சி, பூமி தனக்காக பிடிபட்டுள்ளாள் என்று அறிந்து உண்மையினைச் சொல்ல முன்வருவானா? ஆனால், பூமி ஷரத்சந்திராவின் Guest Houseக்கு வந்த போது வம்சி, பூமியைக் கண்டுதான் ஓடினானே தவிர, பூமியும் கண்டாள். யாரோ அங்கிருந்து வெளியே ஓடும் போது. அனால், யாரென்றுதான் பூமிக்குத் தெரியவில்லை.

இந்துவுக்கு இப்போது Binthu கோள் பண்ணி ஷரச்சந்திராவின் விஷயத்தினைச் சொன்னாள். ஆனால், Binthuவோ, ஒரு நாளும் இல்லாமல் ஏன் வம்சி தன்னிடம், தன்னை எவ்வளவுக்கு அவள் காதலிக்கின்றாள் என்பதனையும், யாரும் தன்னைப்பற்றி பிழையாக ஏதும் சொன்னால் Binthu, நீ நம்புவாயா? என்ற கேள்விகளினால் வம்சி கேட்கும் போது கொஞ்சம் குளம்பினாளே ஒழிய, இனி, ஷரச்சந்திராவோ இப்படியான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் வம்சியைச் சிந்தித் தோன்றுமா? அப்படித் தோன்றினால், அவளது சந்தேகம் உறுதியாக்கப்பட்டால், Binthu, இதனை அண்ணன் ககனுக்குச் சொல்லுவாளா?

Binthuவின் character ஆனது, இவள் நேர்மையானவள் என்றுதான் தோன்றுகின்றது. அதாவது, ஒன்று, வம்சியின் தகப்பனும், தாயும் மிகவும் அதிகமான பணத்துடன் அவர்கள் அவர்களது கட்டிலில் வைத்து எண்ணும் போது பொலிஸுக்குச் சொல்லுவேன் என்று சொன்னது. இரண்டாவது, அண்ணன் ககனுடன் இப்போது நல்ல அந்நியோன்யமாக இருப்பது. இதனால், வம்சிதான் ஷரச்சந்திராவிற்கு இந்த நிலைமையினை உருவாக்கினான் என்று தெரிந்தால் அடுத்த செக்கன் ககனுக்குச் சொல்லுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உண்டு எனலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)