posted 25th October 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 23ஆம், 24ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- கங்காவுடன், சேர்ந்து ஜமூனாவும் கை கோர்த்தாள், கொடைக்கானல் வீட்டினை விற்பதற்கு. இவர்களுக்கு பொறாமையினை உருவாக்கிய காவேரியின் வாழ்க்கை.
- தகப்பன் சந்தானமே இல்லை, அப்போ அந்த வீடு இருந்து என்ன பிரயோசனம் என்பது கங்காவினதும், ஜமூனாவினதும் பார்வை.
- தாத்தாவின் சத்தியத்தினை நிறைவேற்றத் துடிக்கும் காவேரி. இதனை விஜேயிடம் சொல்லி நடைமுறைப்படுத்தத் துடிக்கும் காவேரி.
- சாரதாவின் நம்பிக்கையினை, அவ சந்தானத்துடன் வாழ்ந்த வாழ்க்கையினைக் கொச்சப்படுத்தும் கங்காவும், ஜமூனாவும்.
- தாய்ப் பாசத்தினை கேவலப்படுத்தும் பிள்ளைகளா இவர்கள் என்ற எண்ணத்திற்கு கிட்டத்தட்ட கங்காவும், ஜமூனாவும் போய் விட்டனர்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 23 - 24.10.2025
வீட்டினை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று கங்கா கதையினைத் தொடங்கினாள். குமரன் வெளிநாட்டிற்குப் போய் கஷ்டப்பட்டு உழைக்கின்றார், ஏன் பணத்திற்காகத்தானே என்று குமரன் மேலே இரக்கப்படும் கங்கா.
வீட்டினை விற்றால் வரும் தனது பங்கினில் குமரனை இங்கு வரவழைத்து வசதியாக வாழலாம் என்று சாரதாவின் தலையினைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கையிலே, ஜமூனா தனது மாமியார், அதாவது, நெவீனின் தாய், தன்னிடம் பணம் ஒன்றும் கொண்டு வரவில்லை என்று தன்னை கேவலப்படுத்துவதுமல்லாமல், இல்லாவிட்டால், தன்னை தன் மகன் நெவீனிடம் இருந்து விவாகரத்து பண்ணி விடுவதாகத் துன்புறத்துவதாகவும், பயமுறுத்துவதாகவும் சாரதாவிடம் பொய்யினைச் சொல்லி சொத்தின் பங்கினை நேராகக் கேட்கின்றாள்.
ஆனால், ஜமூனா, இந்த விஷயத்தில் சிக்குவதற்கு ஒரு இடம் இருக்கு. அதாவது, காவேரி எதையுமே நேராகக் கதைக்கும் ஒரு பெண். இந்தக் கதையானது காவேரியின் காதுக்கு எட்டினால், காவேரி நேராகவே நெவீனிடம் கேட்பதற்கு கூடுதலான வாய்ப்புகள் உண்டு. இதனால், ஜமூனாவுக்கு நெவீனின் வீட்டிலும், தாய் வீட்டிலும் மிகவும் பிரச்சனைகளை ஜமூனா சந்திக்க நேருடும்.
கங்கா நினைத்துக் கொண்டிருக்கின்றா, குமரன் பணம் சம்பாதிக்க மட்டும்தான் வெளிநாடு சென்றுள்ளதாக. ஆனால், இதற்குரிய பதிலைத்தானே பாட்டி சொன்னா. கங்கா எவ்வளவுக்கு குமரனை வற்புறுத்தியது என்று. இதுதானே உண்மை. அதுமட்டுமா, கங்காவிற்கு இன்னமும் குமரனைப் புரியவேயில்லை. அவன் வெளிநாடு செல்லப் போவதாகச் சொல்லியும், வெளிக்கிட்டுப் போகையிலும் அவனை வழி அனுப்ப வெளியில் கூட வரவில்லையே. கோபமும், கவலையும் இருக்கத்தான் செய்யும் கங்காவுக்கு. ஆனால், கதைக்கவே மாட்டேன் என்று கங்கா சொல்லி விட்டு கதைக்காமலா இருக்கின்றா குமரனுடன். கதைக்கின்றாதானே!
குமரன் வெளிநாட்டிற்குச் சென்றதே பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, கங்காவை விட்டு கொஞ்சக் காலம் விலகி நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற உண்மை கங்காவிற்குத் தெரியவில்லையே! அதுமட்டுமா இன்னமும் அது விளங்குவதாகவும் இல்லையே!
தாய், நெவீனிடம் தனது சொத்துக்களை எல்லாம் உனக்குத் தாறேன் நீ ஜமூனாவை விவாகரத்து செய் என்று சொன்னாலும் அவன் ஜமூனா சின்னப் பிள்ளைத் தனமாச் செய்து தன்னைக் கல்யாணம் பண்ணி விட்டாள் என்று இப்பவும் அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கும் நெவீன். இதனை ஜமூனா பிழையாக விளங்கிக் கொள்கின்றாள் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
சொத்திற்காக தங்களது தாயின் வாழ்க்கையினையே பேரம் பேசிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், அவவினுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வினாடிக்கு வினாடி சாரதாவைக் கொன்று கொண்டிருக்கின்றார்களே!
பிள்ளைகள் இருவரும் சொத்து வேண்டும், தங்களது பங்குகளைத் தா என்று கேட்கையிலே எவ்வளவு அந்தத் தாய் வேதனைப் படுகின்றா என்று கொஞ்சமும் அவவின் முகத்தினைக் கூடப் பார்க்காத பிள்ளைகளாக இவர்கள்.
ஒன்று, காவேரி அந்த வீட்டின் பெறுமதியினைக் கொடுத்து தான் வாங்கிக் கொண்டால் வீட்டினைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், வெளியாட்களுக்கு வீட்டினை விற்க வேண்டி வரலாம். இதனால், உயிர் இழப்புகள் வர வாய்ப்பு உண்டு.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!