Mahanadhi - மகாநதி - 11 - 12.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த சீரியல் றிவூ and analysis இனில் 11ஆம், 12ஆம் திகதிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • கறள் பிடித்துக் கொண்டிருக்கும் கங்காவின் மனம். ஊதிக் கெடுக்கும் ஜமூனா.
  • வாழ்க்கையினை ஆரம்பமாக்கிக் கொள்ளும், விஜயும், காவேரியும். விஜேயினைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறும் காவேரி.
  • நெவீனின் தாயை வீ்ட்டிற்கு அழைத்துவரும் நெவீன். ஏமாற்றுக் காறியாக ஜமூனாவை மனதில் படம் போட்டிருக்கும் நெவீனின் அம்மா.
  • காவேரியின் தூய்மையினையும், நெவீனின் களங்கமற்ற மனத்தினையும் கொச்சப்படுத்தும் ஜமூனா. காவேரியின் கர்ப்பத்திற்கு நெவீனைத் தொடர்புபடுத்தி, புதிய பிரச்சனையினால் நெவீனை சொற்களாலே கணத்திற்குக் கணம் கொல்லும் ஜமூனா.
  • கங்கா கூறும் விஜேயுக்கான வரவேற்பு, காவேரியின் கர்ப்பத்தில் நெவீனைச் சந்தேகிக்கும் ஜமூனா, இத்தனையும் ஜமூனாவின் துருப்பிடித்த மூளையினுள் ஓடுகையில், அம்போ என்று போகவுள்ள IAS சோதனை.
  • சோதனைக்குச் சோதனையாக உள்ளிறக்கப்பட்டாவா நெவீனின் அம்மா.
  • இப்போது ஒன்றும் இல்லாத பணக்கார மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிக்கும் அதாவது உபசரிக்கும் சாரதா. தான்தான் எல்லாச் செலவுகளையும் பாரத்துக் கொள்ளுவா என்றும், காவேரி – விஜேய் தனது ஆதரவில்தான் இருக்க வேண்டும் என்று குமரனுக்குக் கட்டளை போட்ட கங்கா. சூழ்நிலையினை வைத்து எடை போடுவது தப்பு என்று முன்பு படித்த பாடத்தில் கருத்து விளங்காத கங்கா.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 11 - 12.09.2025

கால் சுளுக்கினதால் அவதியுற்ற சாரதாவிற்கு மருமகன் விஜேய் உழுக்கெடுத்து விட்டு சுகமாக்கியதனை இட்டு மிகவும் சந்தோஷத்திற்குள்ளான சாரதா. மன நெகிழ்ச்சியுடன் நோக்கிய காவேரி.

அப்பியாசத்தினால்தான் அவதியுற்றா அம்மா என்பது காவேரியின் ஊடலின் உச்சம். அத்துடன் அதனைச் சுட்டிக் காட்டி காவேரி விஜேயினை வெறுப்பேற்றினாள். காவேரியை அக்கு வேறு ஆணி வேறாக உணர்ந்தவன் விஜய். இதெல்லாம் விஜயுக்கு விளங்காதா என்ன.

அப்பியாசமே உடலுக்கு ஆரோக்கியம் என்பதனை வீட்டிற்கு வந்தும் வராததுமாக செய்து காட்டி, வாழ்க்கையில் சுகாதாரத்தின் பங்கு என்ன என்பதனை பயிற்சி முறையில் காட்டிக் கொடுத்த விஜய். மூட்டு வலி என்று சாரதா சொல்லியும் நடந்தால்தான் இந்த நோவெல்லாம் சுகமாகும் என்று எடுத்துச் சொல்லி வழிகாட்டினான் விஜய்.

இவ்வளவு பெரிய மனம் படைத்தவனாக விஜய் சாரதாவிற்கு மருமகனாக அவவின் குடும்பத்தினுள் சென்றது என்பது ஒரு பெரிய கடவுளின் ஆசீர்வாதமாகும் என்பதனை விளங்காத, விளங்கிக் கொள்ளாத கங்கா. கௌரவத்தினைத் தாரக மந்திரமாகத் தலையில் மகுடமாகச் சூட்டிக் கொள்ளும் கங்கா.

அதுமட்டுமல்லாமல், ஜமூனா, காவேரிக்கு அடுத்தது, ஒரே வயிற்றினில் பிறந்திருந்தாலும், காவேரியின் நிழலினைக் கூட மிதிக்கும் அளவிற்கு அருகதையில்லாத சகோதரங்கள் இவர்கள். ஆனால், கங்கா கொஞ்சம் பரவாயில்லை, ஜமூனாவுடன் ஒத்துப் பார்க்கையிலே.

காவேரியும், நெவீனும் ஒருவரை ஒருவர் எப்பவோ விரும்பி இருந்தாலும், காவேரிக்கும், விஜேயுக்குமான ஒப்பந்தத்தின் காரணமாக பிரிந்து விட்டனர். அந்த ஒப்பந்தம் contract இருந்தாலும் இது மனது சம்பந்தப்பட்டதாகையால், கடவுளின் திட்டம் இந்தப் பந்தத்தினை இப்படித்தான் இவர்களுக்கு தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதால், மனிதனால் என்னதான் செய்ய முடியும்.

உண்மையான காதலர்கள் பிரிந்து கொள்ளுவதன் வலியினைக் காதலித்து, சந்தர்ப்ப சூழ்நிலையினால் பிரிந்து போனவர்களால் மட்டும்தான் இந்த ஒட்டியிருந்த இதயங்களை இழுத்து பிரிக்கையில் ஏற்படும் வலியினை உணர முடியும்.

காதலே என்ன என்று தெரியதவர்கள்தான் வெளியில் நின்று காதலைக் கொச்சைப்படுத்துவதும், குறணி கதைப்பதும், அவ்வாறான குடும்பங்களுக்கிடையே குளப்பத்தினை ஏற்படுத்துவதும், மான பங்கப்படுதுவதிலும், கண்ணும் கருத்துமாக இருந்து குடும்பங்களைப் பிரித்து ஒரு முடிவு கட்டும் மட்டும் இவர்களுக்கு இதெங்க விளங்கப் போகின்றது? இவர்கள் பாறைகளை விட இறுக்கமான மனம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.

ஆனால், ஜமூனாவோ இந்த levelக்குக் கீழே இறங்கினாள். தன்னோடு பிறந்த சகோதரிதானே காவேரி என்றொரு சிந்தையும் இல்லாமல், காவேரி – நெவீனுடைய உறவினைக் கொச்சப்படுத்தினாள்.
தனது வாழ்க்கைக்கு காவேரி என்னவெல்லாம் செய்தாள் என்பதனை மறந்தாள். தான் செய்த உள்குத்துகளைக் கூட வெளியில் சொல்லாமல் காவேரியும், விஜேயும் ஜமூனாவிற்கு நெவீனை அவனின் விருப்பமில்லாமல் இருக்கையிலும் கல்யாணம் செய்து வைத்ததனை மறந்து விட்டாள்.

குமரன் சொன்ன ஒரு கதையினை வைத்து காவேரியைத் துவைத்தெடுக்கின்றாளே ஜமூனா. ஏன் குமரன் அதனைச் சொன்னார் என்று கூட ஆராய்ந்து நினைக்கக் கூட அறிவினில் கோளாறுள்ள ஜமூனாவுக்கு IAS சோதனையும், collector ஆவதும் ஒரு கேடா என்று நினைக்கத் தோன்றுகின்றது.
இந்த பெரிய பொறுப்பு நிறைந்த நிலைக்கு தகுதி உடையவராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அந்நபர் ஒரு சந்தர்ப்பத்தினை எல்லா பக்கத்திலும் பகுத்தறிந்து நடுநிலைமையில் நின்று முடிவெடுக்க வேண்டிய மன நிலையும், பக்குவமும் இருக்க வேண்டும். அவ்வாறு ஆராய்ந்து அறியும் ஆற்றல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், அதனைப் படிப்படியாக அவருள் உருவாக்க வேண்டும்.

ஜமுனாவின் காவேரி – நெவீன் மீதான சந்தேகம் இன்னமும் கங்காவிற்கு எட்டவில்லை. எட்டினால், கங்கா அதனை ஜமூனாவுடன் சேர்ந்து கதைப்பாவா அல்லது ஜமூனாவைக் கண்டிப்பாளா என்று இக் கதை சந்தைக்கு வந்தால்தான் தெரியும்.

ஆனால், கங்காவோ அந்த அளவிற்கு கேடு கெட்ட மனம் கொண்டவள் இல்லை. ஜமூனா இந்த கேடு கெட்ட கதையினை கங்காவிற்குச் சொல்லுவாவென்றால், கங்காவிடம் அடி வாங்கித்தான் சாவாள்.
கங்காவின் பிரச்சனையோ தன் புருஷனுக்கு மதிப்புக் கொடுக்கப்படவில்லை, விஜேயுக்கு மதிப்புக் கொடுக்கின்றா அம்மா என்பதும், விஜேயுக்குக் கொடுக்கும் உணவு போன்று எப்போவாவது தன் புருஷனுக்கு அம்மா கொடுக்காததுதான் பிரச்சனையே தவிர வேறொன்றும் இல்லை. அதற்காக மனத்தினால் ஜமூனா மாதிரி கேடு கெட்டவள் இல்லை கங்கா.

சாரதா அத்தையின் கண்ணீரினைக் கண்டு நொறுங்கிப் போனான் விஜய். என்னென்று காவேரியின் தகப்பனின் நிராசையாக்கப்பட்ட ஆசையினை நனவாக்கலாம் என்று, பசுபதியின் வழியிலே போய் அடித்துத் துவைக்கத் தீர்மானித்தான். தன்னுடன் மைத்துணர்களைத் துணைக்கழைத்தான் விஜய்.

பசுபதியின் தறுதலை மகனைக் கடத்தி சந்தானம் மாமா, அதாவதுர, காவேரியின் தகப்பன், சேர்த்து வைத்த சொத்துகள் அத்தனையையும் ஒரே ஆட்டத்தில் பசுபதியிடமிருந்து மீட்டெடுக்கும் திட்டத்தினை குமரனுக்கும், நெவீனுக்கும் விளங்கப்படுத்திய விஜய்.

இதுவரைக்கும், குமரனால் ஒன்றும் இயலாது என்று பெயரிடப்பட்டவன், வெண்ணிலாவின் மாமனாரை பசுபதியின் அடியாட்களிடமிருந்து தனியாகச் சென்று மீட்டெடுத்த பெருமை குமரனுக்கு இப்போ உண்டு.

எனவே, இப்போ விஜேயுடன் போட்ட கடத்தல், சொத்து மீட்டெடுத்தல் திட்டமானது வெற்றியடைய வாய்ப்புகள் அதிகமாக உண்டென்பது எனது ஊகம்.

உங்கள் ஊகம்தான் என்ன?

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00