posted 26th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- வாழ்க்கையால் நொந்தவன், வார்த்தையால் வெந்தவன் ககன்.
- சரச்சந்திரா, பூமியை அதாவது, தனது சொந்த மகளையே தனது மகளாகத் தத்தெடுக்கும் நிலையினை எங்குதான் பார்க்கலாம். இங்குதானே பார்க்கலாம்.
- தனது காதலை confirm பண்ணிய பின்பு தனது தாய் சாரதாவையும், தங்கை பூர்ணாவையும் கூட்டிக் கொண்டு, தாய் எடுத்த மருகளுக்கான நகையினை பூமிக்கு அணிவித்து தனது வீட்டிற்கு கூப்பிடப் போன ககனுக்கும், அவனது குடும்பத்தினையும் கேவலப்படுத்தி அனுப்பிய பூமி.
- மனம் உடைந்து போன ககன் வெளியில் ஒருவருக்கும் தனது துக்கத்தினைக் காட்டிக் கொள்ளாமல் தொண்டையினுள் வைத்துக் கொண்டு தாய்க்கும், தங்கைக்கும் நடித்துக் கொண்டிருக்கும் ககன்.
- காதலுக்கான பரிசினைக் ககன் கொடுத்த அந்த சோடியாக நிற்கும் சிலையினைக் கண்ட சரச்சந்திரா. சந்தேகத்தில் பூமியினைப் பார்த்து பூமியின் காதலைப் பற்றி கேட்ட தகப்பன் சரச்சந்திரா.
- நொந்து போயுள்ள சாரதாவும், பூர்ணாவும், புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் மகன் ககன். பூமியின் கோளினை கேட்டதும் கோபமோ பீறிட்டு சாரதாவிற்கு வந்தாலும், ககன் சொன்னதிற்காக தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு பூமிக்கு பதிலளித்த சாரதா.
- தான் ஏன் கதைத்தேன் என்று விளக்குவதற்கு வருவதற்காகக் கேட்ட பூமியினை வர வேண்டாம் என்று கூறிய சாரதா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சலங்கை ஒலி - Salangai Oli - 19.12.2025
சரச்சந்திரா பூமியினை தனது சொந்தப் பிள்ளையாகத் தத்தெடுப்தற்கான ஆயத்தங்களை கிறிஸ்ணபிரசாத்திடம் பொறுப்புக் கொடுத்துள்ளார். எல்லா ஆயத்தங்களும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று சொன்னதினைக் கேட்ட சரச்சந்திரா. இந்தச் செய்தியினை பூமியிடமும் சொல்லி தன்னை அப்பா என்று இந்த நிமிஷத்திலிருந்து கூப்பிடும்படி கேட்டுக் கொண்ட சரச்சந்திரா.
தான்தான் சரச்சந்திராவின் உண்மையான பி்ள்ளை என்று கிறிஷ்ணபிரஷாத்திற்குத் தெரிந்தும் சொல்ல முடியாமல் உள்ள நிலையினில் பூமி. உண்மையான தகப்பனும் வேண்டும், தனது வாழ்க்கையினுள் வந்துள்ள ககனும் வேண்டும் என்று இரு சமாந்திரக் கோடுகளையும் இணைத்துக் கொண்டும், இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கும் குறுக்கு பலகைக் குத்தியாக துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பூமி இங்கு.
ஷோபச் சந்திராவுக்கும், சரச்சந்திராவுக்கும் மகளாகப் பிறந்தவள்தான் பூமி. ஆனால், இவள் சாதாரணமாக ஷோபச் சந்திரா தனது கர்ப்பவலியானால் ஏற்பட்ட இயற்கையான பிறப்பாக இல்லை. ஆனால், இவளோ நெருப்பினிலே பிறந்தவள். நெருப்பினூடாகவே இந்த உலகிற்கு வந்தவள். செத்துப் பிறந்தவள். தாயின் உயிர்த் தியாகத்திலே பிறந்தவள். இவள்தான் பூமி.
ஒரு பக்கம் தன்னைப் பெத்தவன், சரச்சந்திரா. மறுபக்கம் தனது மனதினில் இடம் பெற்றவன், ககன். காதலின் முத்தத்தினால் இஸ்திரமாக்கப்பட்ட வாழ்க்கையினைக் கொடுத்தவன் மறுமக்கம். பூமிதான் என்ன செய்வாள்?
ஒருவருக்காக மற்றவரைத் தியாகம் செய்ய முடியாத நிலையினில், நெருப்பூடாகப் பூமியினில் ஊண்டப்பட்டவள். அன்று பட்ட வேதனையினை விட, தனது காதலனுக்காக தன்னுயிரினைத் தியாகம் செய்யத் துணிந்தவளுக்கு மீண்டும் ஏற்பட்ட வலியானதைத் தாங்க முடியாமல் துடிக்கின்றாள்.
தனது உயிரிலும் மேலாக நினைத்து வாழும் பூமி தனது தகப்பனிடமிருந்து ககனைக் காப்பாற்றுவதற்காக அந்தக் கணம் அவளுக்கு புத்தியில் வந்தது ககனைப் பேசித் துரத்துவதுதான். ககனின் தகப்பன் கிறிஷ்ணபிரஷாத்தின் சொல்லினைக் கூட பூமி கேட்கவில்லை. என்ன நடந்தாலும் ககனைத் தனது அப்பாவின் கோபத்திலிருந்து காப்பாற்றத்தான் நினைத்தாளே தவிர, வேறொன்றும் இல்லை.
என்னதான் அபூர்வா திட்டம் போட்டு பூமியை இந்த வீட்டினையும், தான் ஷோபச்சந்திராவிடம் இருந்து அபகரித்த சொத்தினையும், விட்டுத் துரத்திவிட்டால் எல்லாச் சொத்துக்களெல்லாம் தனக்கும், தன் மகளான நட்சத்திராவுக்கும் வந்துவிடும் என்று பேராசை அபூர்வாவை ஆட்கொண்டுருந்தது. ஆனால், எல்லாவற்றினையும், பூமியின் செய்கையினால் ஒரு நொடியினால் தகடுபொடியாகி விட்டது.
கோவிலுக்குப் போகின்றேன் என்று அப்பாவிடம் விடை பெற்றுச் சென்றாள் பூமி, சாரதா அன்ரியுடனும், ககனைப் பார்த்துப் பேசுவதற்காகவும். சாரதா ஆண்டியால் அவவை கட்டுப்படுத்த முடியாமல் பூமியை இங்கு, தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும், தங்கள் வீ்ட்டிற்கும் உனக்கும் ஒருவிதமான சம்பந்தம் இல்லை என்றும் உறுதியாகச் சொல்லி விட்டா.
ககன் officeக்குச் செல்லும் வழியில் காரினை விட்டிறங்கி காத்துக் கொண்டு நின்றாள் பூமி. ககனும் அந்த வழியினால் வந்தவனாய் பூமியிடம் சுகம் விசாரித்தான். ககன் கதைத்த விதத்தில் பூமியின் வாய் அடைத்து விட்டது. மன்னிப்பும் கேட்டான். பதிலாக பூமிதான் ககனிடம் மன்னிப்பு கேட்டாள். இருவரின் மனமோ மிகவும் நொறுங்கி இருந்தது.
வீறாப்பாகப் பேசிய ககன் காரினை ஓட்டுகையில் அவனையும் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. தெய்வத்தினைச் சந்திக்கப் போன பூமி இடையில் கண்டதினால், அவளுக்கோ வரம் கிடைக்கவில்லை. அழுதுகொண்டு வீடு திரும்பிய பூமியை கட்டம்கட்டிய அபூர்வா. தனது திட்டத்தினைத் தெளிவாக அபூர்வாவுக்குச் சொன்னாள் பூமி. அதாவது, அப்பா என்னைப் பிள்ளையாகத் தத்தெடுக்கட்டும் அதன்பின்பு நரகத்தினை அன்றிலிருந்து உனக்குக் காட்டுவேன் என்று ஆபூர்வாவுக்கு சவால் விட்ட பூமி.
சவாலினை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், தத்தெடுத்தல் நடக்க வேண்டுமே! அபூர்வா விட்டு விடுவாளா?
ககனோ நடந்தவற்றினை மறந்து சாதாரணமாக ஆகி விட்டானா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!