Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 21.07.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

சுரேக்கா நந்தினியாலே காப்பாற்றப்பட்டாள். அதற்குரிய முக்கிய காரணம், புனிதாதான். கௌஷிக் ஆசை வார்த்தையினைக் காட்டி புனிதாவை மாதங்கியின் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக சுரேக்காவை அடைத்து வைத்த வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். இதனை பொலிஸ் இன்ஸ்பெக்டர், சூரியாவைச் சந்தித்த உடனே, நந்தினியையும், புனிதாவையும் இந்தக் கடத்தலிலே மாட்டி விடுவதற்க்காகவே என்பதனை தெட்டத் தெளிவாகக் கூறினாரே! சுரேக்கா தப்பித்து உயிருடன் வந்து விட்டாள். கடத்திய நந்தினியே சுரேக்காவைக் கூட்டி வந்தாள் என்பதனை பாண்டியனினதும், ஜோதியினதும் காதினில் போட்டு விடும்படி கௌஷீக்கிடம் எடுத்துரைத்தாள் மாதங்கி. ரொனாடோவாக ஜோதி, சுந்தரவள்ளியின் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கின்றா.

மாதங்கி ஒவ்வொன்றாக பொது அறிவு குறைந்த மாதவியின் காதினில் நந்தினியைப் பற்றிப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றாள். முன்பு, சுரேக்காவின் பிரச்சினைக்கு நந்தினியைப் பொலிஸினில் பிடித்துக் கொடுத்ததே சுந்தரவள்ளிதான். இப்போதும் நந்தினியையும், புனிதாவையும் பொலிஸில் பிடித்துக் கொடுப்பதற்காகத்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றா சுந்தரவள்ளி. சொல்வதனை விளங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் சுந்தரவள்ளியினை ஒரு நாளும் திருத்தவே முடியாது. திருந்தும் characterரே இவ இல்லையே!

Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 21.07.2026

இதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று படம்பிடித்தது போன்றும் எல்லாவற்றினையும் அலசி ஆராய்ந்து சூரியா நந்தினிக்கும், புனிதாவுக்கும் வரும் வழியிலேயே சொல்லி விட்டார். ஆனால், சுந்தரவள்ளியோ எதிர்பார்த்ததினை விட அதிகமாகக் கதைத்து விட்டா. அதுமட்டுமல்லாமல், சுந்தரவள்ளியினை அருணாச்சலத்தினால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டிலுள்ள நந்தினியின் குடும்பமோ சுந்தரவள்ளியின் ஆணவத்தினால் அடங்குப் போய் நந்தினியின் பாட்டி கையெடுத்துக் கும்பிடும் அளவிற்கு சுந்தரவள்ளியின் நடவடிக்கை இட்டுச் சென்றது.

புனிதாவை காதலிக்காத கௌஷித், மாதங்கியும், இவனும் செய்யும் குற்றங்களுக்கு அவளைப் பலிக் கடா ஆக்குவதுதான் இவர்களின் குறிக்கோளே! இதனை விளங்காமலும், அக்கா நந்தினியின் சொல்லையோ, மாமா சூரியாவின் சொல்லையும் நம்பாமல், கௌஷியின் நாடகத்தினை உண்மையென நம்பினாள் புனிதா. பட்டணத்தின் வாழ்க்கையினை விபரமாக சூரியா புனிதாவிற்குச் சொல்லியும், சூரியாவின் சொல்லுக்கு மரியாதை செய்யவில்லை புனிதா.

இப்போது சுரேக்கா கண்விழித்ததும், சுந்தரவள்ளி சுரேக்காவின் உடலினதும், மனத்தினதும் நிலையினைக் கருத்தில் கொள்ளாமல், யார் இதற்குக் காரணம் என்று துருவித் துருவி ஆராய்ந்தா. உண்மையாக, சுந்தரவள்ளியின் குறிக்கோளோ குற்றவாளியினைக் கண்டு பிடிப்பற்காக அல்ல. மாறாக எப்படியெல்லாம் நந்தினியின் மேலேயும், அவவின் தங்கை புனிதாவின் மேலேயும் இல்லாதது பொல்லாததெல்லாம் பழியாகப் போட்டு அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சுரேக்கா தனது தலைமுடியினை வெட்டியது ஒரு பெண் என்றும், ஆனால், அது நந்தினி இல்லை என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கையிலே, நந்தினியைக் கண்டதும், நீதான் சுரேக்காவின் தலைமுடியினை வெட்டினாய் என்று அபாண்டமான பழியினை சுந்தரவள்ளி போட்டது இதற்கான உடன் உதாரணமாகும். அத்துடன், சுரேக்காவின் அறையினிலே சுரேக்கா சொல்லுகையில் இருந்தவர்கள் ஒருவரும் சுந்தரவள்ளி சொல்வது பிழை என்று சொல்லவேயில்லை.

நந்தினியிடமும், புனிதாவிடமும் முழுவிதமான விபரங்களையும் கேட்டறிந்தார் பொலிஸ் அதிகாரி. அப்பவே அவருடைய கணிப்பு, நந்தினியையும், புனிதாவையும் இந்த சிக்கலினுள் மாட்டுவதற்காகத்தான் இந்த திட்டம் என்று கூறி விட்டார்.

மாதங்கி தங்கியிருந்த வீடானது அடையாளம் காட்டப்பட்டது. இங்கு பொலிஸ் பிரிவினர் விசாரித்துப் பார்க்கையிலே, ஒரு பெண் எப்பவும் காரினில் வந்து போவதாகக் கூறப்பட்டது. அத்துடன், ஒரு பெண்ணும், பையனும் மேட்டார் சைக்கிளில் வந்து போவார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் புனிதாதான் மோட்டார் சைக்கிளில் வந்தவள் என்பது பொலிஸுக்குத் தெரிந்ததே! ஆனால், அவளைக் கூட்டி வந்தவன், ரூவீல் ரக்ஸி ஓடியவன் என்றும், அவன் பெயர் கௌஷித் என்பதுவும் தெரியும். ஆனால், காரில் வந்தவளினதும், கௌஷீத்தின் போட்டோக்கள் இல்லாததினால் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றது.

புனிதாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போபவன் ஒருநாளும் அவளுடன் சேர்ந்து போட்டோ ஒன்றும் எடுப்பதற்கு அனுமதி அவளுக்குக் கொடுக்கவில்லை. அவனும் போட்டோ எடுத்துக் கொள்ளவுமில்லை. அதனால், அவனைப்பற்றிய விபரங்கள் எதுவும் ஒருவருக்கும் தெரியவில்லை.
ஆனால், கௌஷித், பரமேஸ்வரியின் வீட்டில்தான் இருக்கின்றான் என்றும், அவன் றஞ்சித்தின் அமெரிக்க நண்பன் என்றும் ஜோதி, பாண்டியன், பரமேஷ்வரி ஆகியோருக்கும் தெரிந்திருந்தாலும், கௌஷித் மெதுமையான குணம் படைத்தவன் என்று மட்டும்தான் தெரியும்.

ஆனால், இத்தனையையும் ஒன்றாகச் சிந்திக்கையிலே எங்கேயோ உதைக்கின்றதே என்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கின்றேன்.

இவற்றை விட முக்கியமானது, ஹரீத்தாவின் உடலத்தில் இருந்த சென்றைதான் நந்தினி, சுரேக்கா அடைத்து வைத்திருந்த வீட்டினில் கண்டுகொண்டா. அத்துடன் ஒரு கை பையையும் கண்டா. இந்த கை பையானது ஒரு நாளைக்கு மாதங்கி வைத்திருப்பதனையும், அந்த சென்றின் மணத்தினையும் மாதங்கியில் மணப்பதனையும் நந்தினி அறிந்து கொள்ள வாய்ப்புகள் வெகு தூரத்தில் இல்லை.
சுரேக்கா, நந்தினியை இப்போது கை காட்டி இருந்தாலும், விசாரணையில் இந்தக் கேசானது நிற்காது. ஏனென்றால், சென்ரானது நந்தினி ஒருகாலும் பாவிப்பது இல்லை, அத்துடன், அந்த சென்றாரனது மிகவும் விலை உயர்ந்ததுமாகும்.

அப்படியென்றால், கௌஷித் பரமேஸ்வரின் மேலே மணந்த சென்ரும், தான் பாவித்துக் கொண்டிருப்பதற்குமான தொடர்பு என்னவாக இருக்கும்?

கௌஷீத் பாவிக்கும் சென்ரானது, றஞ்சித் வாங்கியதில் ஒன்றினை கௌஷீத்திற்குக் கொடுத்தது. அதைத்தான் கௌஷீத் புனிதாவின் மேலே ஒருநாள் அடித்ததும் தெரிந்ததே! ஆனால், இது ஒரு நாளைக்கு நந்தினியின் நினைவிற்கு வந்ததும், நந்தினி, புனிதாவிடம் கேட்டறிந்து கொள்ளுவாள். அத்துடன், பரமேஸ்வரியின் மேலே மணந்த அந்த சென்ரானது, பரமேஸ்வரி றஞ்சித்திடமிருந்து ஆட்டையைப் போட்டதுதான்.

ஆனால், சுரேக்காவிற்கு முழு நினைவு வந்தால், அவள், ஒரு பெண்தான் தனது தலைமுடியினை வெட்டியதைச் சொல்லுவாள். அதன் பின்பு தனக்கு ஊசி போட்டது, ஒரு ஆண் என்பதனையும் சொல்லுவாள். எப்போது என்று கேட்டால், அதிலிருந்து புனிதா அந்த வீட்டிற்குப் போன நாளும், சுரேக்கா கண்டு பிடிக்கப்பட்ட நாளும் ஒன்றாக இருப்பது தெரியவர சாத்தியக் கூறுகள் உண்டு. இதனால், புனிதாவுடன் போனவன், கௌஷித்தான் என்பது உறுதியாக வாய்ப்புகளும் உண்டு.

கறுப்புச்சாமியை நம்பின குடும்பம் நந்தினியின் குடும்பம். இப்படி தன்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்திற்கு அநியாயம் நடக்கின்றது என்றால் அந்தச் சாமி கண்ணை மூடிக் கொண்டு இருக்குமா?

அந்தக் கறுப்புச் சாமி உங்களுக்கும் சாமியாக இருக்கலாம். அப்படி என்றால் உங்கள் கருத்துக்கள் என்ன என்று சொல்லுங்கள்.

எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது Reel Review channel லினில் இந்த சீரியலின் overall analysisஇனைச் செய்கின்றேன். இது முற்றுமாக எனது கருத்து என்பதனால், உங்களுக்கு ஏதாவது கூற விரும்பினால் கூறுங்கள். அத்துடன், எமது channelலினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன். இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் எமது channelலினை subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel இனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)