posted 22nd May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரிக்கு மாணவி வராததினை விட வேறு ஏதோ இருக்கின்றது அம்மு விஷயத்தில் என்பதனை விளக்குகின்றது
- அம்மு பாடசாலையினை விட்டு விலகினால் தன்னால் என்ன செய்ய முடியும்? அதுவும் ஏன்?
- டயறியில் உள்ள குறிப்பின் அர்த்தம்தான் என்ன?
விளங்கியும், விளங்காமலும் உள்ள இந்த வரிகளின் அர்த்தம்தான் என்ன?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 21.05.2026
காவேரியால் அம்முவைப் பிரிந்து இருக்க முடியவில்லை. பாடசாலையிலே அம்முவைக் காணாதது காவேரியால் பாடசாலையில் இருப்புக் கொள்ளவில்லை. அவளின் துடிப்பு அவளாலே கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
நேற்றையது போல காவேரி, அம்முவின் வீட்டிற்கு விரைந்து சென்றாள். விஜய் காவேரியை இனி இந்த வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியும், ரீச்சர் வேலையை மட்டும் பாருங்கள் மிஸ் என்று கூறியும், அம்முவின் வகுப்பு ஆசிரியை என்பதனை விட, காவேரி உரிமையாக வராமல், மிகவும் வருத்தத்தோடும், பணிவோடும், ஒருவிதமான ஏக்கத்தோடும் அம்முவைப் பார்க்க வந்தாள்.
வீட்டின் வாசலிலே விஜய் நின்று கொண்டிருந்தான். காவேரிக்கும், விஜேயுக்கும் வாக்குவாதம் இடம் பெற்றது. அம்மு, காவேரி மிஸ்ஸின் குரலைக் கேட்டதும் ஓடோடி வந்து காவேரியைக் கட்டி அணைத்தாள். காவேரியும் அணைத்துக் கொண்டாள். இதனைப் பார்த்ததும் உண்மை தெரிந்த விஜேயின் மனம் குமறியது. ஒவென்று அழ வேண்டும் போல விஜேயுக்குத் தோன்றிற்று.
காவேரி நினைத்ததோ அம்முவிற்கு ஏதாவது சுகவீனமாக இருக்குமே என்ற ஏக்கம்தான் காவேரியை வாட்டியது. ஆனால், மனதினுள் உள்ள ஆசைகளை எல்லாம் அடியிலே புதைத்துக் கொண்டு விஜேய் காவேரியுடன் கோவித்துப் பேசலானான்.
ஆனால், விஜேயின் பதிலால் காவேரியோ நடுங்கிப் போனாள். நிலை தடுமாறிப் போனாள். விஜேயிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டாள். வேறு பாடசாலைக்கு இப்போதைக்கு மாற்ற வேண்டாம் என்றும் பணிந்துரைத்தாள். ஆனால், விஜேயோ அதைப்பற்றி உங்களிடம் ஒரு விதமான அபிப்பிராயமும் தான் கேட்கவில்லை என்பதனை மனமில்லாமல், காவேரி மனதால் வாடுவாள் என்று தெரிந்தும் சொன்னான்.
வழமையை விட காவேரி பாடசாலையிலிருந்து நேராக வீட்டிற்குப் போகாமல், விஜேய் வீட்டிற்கு அம்முவைப் பார்க்கப் போவதினால், பிந்தியே போக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதனை சாரதா கேட்டதற்கு காவேரி உண்மையினைத்தான் சொன்னாள்.
ஆனால், இப்போது காவேரி நினைக்கின்றாள் தனக்கேன் அம்முவின் மேலே இவ்வளவு அக்கறை வருகின்றது என்று நினைத்துக் கொண்டு தனது அறையினுள் போகின்றாள். அங்கேயுள்ள ஒரு டயறியினை எடுத்து அன்று விஜயின் குறிப்பினை வாசிக்கின்றாள், அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமோ என்பது அவளின் ஒரு ஊகம்.
இப்படி ஏன் விஜேய் சொன்னார் என்பது காவேரிக்குப் புரியவில்லை. என்னை அவர் அந்தளவிற்கு காதலிக்கின்றாரா? அதெப்படி? ஜீப்பினிலே போகையிலே காவேரியின் கேள்விக்குத்தான் அந்தப் பதிலினை விஜேய் சொல்ல வேண்டியதாயிற்று. இனி, வாழ்நாளில் எந்தப் பொண்ணும் இல்லை, உன்னைத் தவிர காவேரி என்று விஜேயின் குறிப்பின் அர்த்தத்தினைப் புரிந்து கொண்டாள் காவேரி.
காவேரிக்கோ தான் ஏன் அம்முவை யோசிக்க வேண்டும்? அவளை எந்தப் பள்ளிக் கூடத்திலும் சேர்த்தால்தான் எனக்கு என்ன? கங்கா சொன்னது போன்று அம்முவை எங்கு விட்டுப் படிப்பிப்பதற்கான முழுமையான அதிகாரமும் விஜேயுக்கு இருக்கின்றது என்பது சரிதானே.
இப்படி கங்கா கூறியதானது ஒருவிதமான சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்தான். அதாவது, அவர்கள் எங்குதான் போனாலும் காவேரிக்கு கவலை வருவதற்கு அர்த்தமில்லையே என்பதனைக் குறிக்கின்றது!
ஆனால், காவேரியோ இந்த இரண்டு நாட்கள் அம்மு பாடசாலைக்கு வராமல் விட்டதினால், காவேரியோ மிகவும் மனதினால் கஷ்டப்பட்டாள். ஆனால், அம்மு வேற பாடசாலைக்குப் போய் விட்டால் காவேரியால் அம்முவைப் பார்க்காமல் இருக்க முடியாதே என்று காவேரி தனது குடும்பத்தவர்களிடம் மிகவும் வருத்தத்துடன் கூறினாள்.
இதனை நல்ல pointஆக வைத்தாள் கங்கா. காவேரியின் மனதிற்கு மேலும் உணர்வுகளை கங்கா தூண்டி விட்டாள். கங்கா கூறியது சரிதான் என்று காவேரி ஒத்துக் கொண்டாலும், நான் ஏன் அம்முவைப்பற்றி நினைக்க வேண்டி வருகின்றது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. அத்துடன் அம்முவைப் பற்றிய நினைவுகள் காவேரியின் மனதினிலே மேலும் படரத் தொடங்கியது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!