posted 22nd October 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 21ஆம், 22ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கங்கா அடுத்த ஓட்டத்தினை ஆரம்பித்துவிட்டா.
- கல்யாணி பாட்டியின் நாடகம் தொடர்கின்றது. இது ஒரு Professionalலான அணுகுமுறை. இதில், உண்மையும் கலந்த துரோகமும் இருப்பதாகத் தெரிகின்றது.
- கங்காவிற்கு மகாநதி வீடு ஒரு கல்லாலான ஒரு கட்டிடமாகத் தெரிகின்றது. ஆனால், அதில் சந்தானத்தின் பாடுகளை மூத்தவளாகப் பிறந்தவளால் உணரமுடியவில்லையே!
- தாத்தாவின் வேண்டுகோளானது நியாயமானதுதான். ஆனால், இதில் உள்ள துரோகத்தின் உள் நோக்கங்களை உணராமல் தனது மனைவிக்காக காவேரியிடம் சத்தியம் வாங்கி உள்ளார்.
- காவேரியின் வாழ்க்கை பயங்கரமான நினைவுகளைத் தாங்கவுள்ள இடிதாங்கியாகுமோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது?
- வாழ்ந்த வீடு கைவிட்டுப் போவதனை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும். உணரும் காவேரி, உணராமலுள்ள கங்கா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 21 - 22.10.2025
விஜேயின் வீட்டில் வாழப் போகவுள்ள சூழலானது காவேரிக்கு கானல் நீராகவுள்ள நிலையினை உணரந்தவனாய் விஜேய். காவேரியோ, விஜயின் பக்கம் இருந்து பார்க்கும் பெருந்தன்மையானவளாக இருக்கின்றாள்.
கல்யாணி பாட்டியின் மன நிலையானதும், அவவின் முகத்திற்கு நேரான கூற்றுக்களும், குத்தும் சொற்களும், கூனிக் குறுக வைக்கும் கொடூர வார்த்தைகளும் காவேரியினை தாங்கிக் கொள்ளும் மனநிலையினை உடைத்தெறிய வைக்கும் ஆயுதங்களாக இருக்கையிலேதான், தாத்தா, காவேரியிடம் சத்தியத்தினை வாங்குகின்றார்.
காவேரிக்குப் புரியாமல் இல்லை, தாத்தா என்ன கேட்கின்றார் என்று. ஆனால், அவளோ தனது உள்ளக் கிடைக்கைகளை வெளியினில் காட்டிக் கொள்ளாமல் தனது மனதினை போலி நிலைக்கு கொணருவதற்காக இருக்கும் அந்த ஒரு சில வினாடிகளில், தாத்தா காவேரியிடம் இப்ப யோசிக்கின்றாயே காவேரி என்று கூறுவதானது மிகவும் அவதானிப்பதற்குரியது.
ஆனால், காவேரியோ, இல்லை தாத்தா என்று இன்முகத்துடன் பதிலளித்தாள், ஒன்றும் இல்லை என்று. இதுதான் காவேரி. பாட்டியின் நினைவு என்ன? தாத்தாவின் நினைவுதான் என்ன? விஜய் – பாட்டியின் அன்னியோன்யம் இவ்வாறு இருக்கையிலே என்னென்று விஜயைக் கூட்டிக் கொண்டு காவேரி தன் வீட்டிற்குப் போயிடுவாள்.
காவேரியால் இங்கு விஜேய் வீட்டில் வந்து வாழ முடியாது. விஜயையோ கல்யாணி பாட்டி விட்டபாடாக இல்லை. ஆனால், விஜய் மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றான், ஒரு சுமூகமான முடிவொன்று தனது வீட்டில் இருந்து காவேரிக்கு வருமட்டும்.
கல்யாணி பாட்டியால் காவேரியை விஜேயுடன் நிம்மதியாக வாழ வைக்கவே முடியாது. விஜேயும், காவேரியும் எவ்வளவுக்கோ சமாளித்தும் சுமூகமான முடிவு விஜேய் வீட்டில் இருந்து வருவதாகவும் இல்லை.
காவேரியின் வீட்டில் விஜேய் வந்து வாழலாம். ஏனென்றால், சாரதாவும் எல்லாவற்றினையும் மறந்து சமாளிக்கக் கூடிய நிலையினில் இருக்கின்றா. ஆனால், இங்கு கங்காவோ ஏதோ ஒரு முடிவினில் இருக்கின்றா. சந்தானம் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டினை விற்றுவிடுவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையிலே,, மருமகன் விஜேயின் அபிப்பராயத்தினைக் கேட்ட சாரதாவுக்கு, விஜேயின் பதில், வீடல்ல அது, அது ஒரு நினைவாலயம் என்ற கருத்திற்கு ஒப்பிட்டு, விற்பது நல்லதல்ல என்று கூறினாலும், இது உங்களது குடும்பத்தினுள் முடிவெடுக்க வேண்டியது என்று கூறியது ஒரு நல்ல பதிலாகும்.
இதற்குக் காரணமும் உண்டு. கங்கா, அந்த வீட்டினை மீட்பதற்கு விஜேயின் உந்தலால்தான், குமரனும், நெவீனும் உடந்தையானர்கள் என்றும், அத்துடன், பசுபதியுடன் உள்ள பகையினை மூள வைத்துள்ளதும் விஜயினால்தான் என்ற பழியினை வீஜேய் மேலே போடும் போது, விஜயால் சரியான பதிலொன்றினை சாரதாவிற்குச் சொல்ல முடியாதே!
காவேரியும் தனது பக்கமாக இருந்து விஜேயை தாத்தாவிடம் கூட்டிச் செல்லலாம் என்று முயற்சிக்கையிலே, விஜயோ தனது முடிவினில் இருந்து ஒரு இஞ்சியும் அசைவதாகத் தெரியவில்லை.
ஆனால், றாதாவோ காவேரியுடன் நல்லவிதமாகக் கதைத்ததினை வைத்து காவேரியால் அவவை ஒரு சொட்டும் நம்ப முடியாதே! காவேரிக்கும் விளங்கும் இவர்கள் நடிக்கின்றார்கள் என்று. ஆனால், அவள் விஜேயையும் பார்க்கத்தானே வேண்டும்.
இப்படி, மற்றவர்களுக்கு நோகக் கூடாது என்று பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையினைத் தியாகம்தான் செய்ய வேண்டும். இப்படியானவர்களைத்தான் துக்கமும், கவலையும் சூழ்ந்து நிற்கும்.
ஒரு பெண்ணானவள், எவ்வளவுதான் கல்வியில் பாண்டித்தியம் பெற்றிருந்தலோ, பெரிய உத்தியோகத்தில் இருந்தாலோ, அவள் வாழப் போகும் வீடோ அவளுக்கு நரகமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த வீடானது எந்த விதத்திலும் இவளுக்கோ நிகராகாதுதான். ஆனால், அவர்களுக்கு இவள் அடிமையாகத்தான் வாழ வேண்டும். அப்படி என்றாலும் இவள் நிம்மதியாக வாழ வேண்டும், இவள் எங்களை நம்பி வந்து விட்டாளே என்று எந்தவிதமான பாசமோ, பந்தமோ அவர்களிடமிருந்து வரவே வராது. இப்படியான ஒரு சந்தர்ப்ப வாழ்க்கையினை காவேரிக்கு ஒத்துப் பார்த்தால், நினைத்துப் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. பயங்கரமாத்தான் இருக்கும்.
இப்படித்தான் இனி காவேரி வாழப்போகின்றாளா?
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!