posted 22nd May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- அம்முவை பாடசாலையில் காணவில்லை என்று கவலையுடனும், ஆதங்கத்துடனும் காவேரி
- காவேரியின் கேள்வியால் விஜேய் காவேரியைக் கலைத்து விட்டான்
- தாய் வீடில்லாமல் யோசித்துக் கொண்டு காவேரி கொடைக்கானலுக்கு போக நினைத்தவளாய் காவேரி
- மாப்பிள்ளை வீட்டார் காவேரியைப் பெண் பார்க்க வந்ததை கருத்து ஒன்றும் சொல்லாத விஜேய்
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 19.05.2026
காவேரியோ எங்கதான் போகலாம் என்று யோசித்துக் கொண்டு வீட்டிலிருந்து வருகையிலே, சினிமா கொட்டகையினைக் கண்டதும் அதற்குள் உள்ளிட்டு வேண்டாத படத்தினை நேரத்தினைக் கடத்துவதற்காக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பார்த்து முடிந்ததும் அவளது நினைவோ தகப்பன் சந்தானத்தின் மேலே காலையிலிருந்து இருந்ததினால், பஸ் ஏறி கொடைக்கானலுக்குப் போய் அங்கு வீட்டிலே இருப்போம் என்று முடிவெடித்துக் கொண்டு வருகையிலேதான் நெவீன் இடைமறித்தான்.
வீட்டில் அனைவரும் படும் கஷ்டத்தினை விளங்கப்படுத்தினான் நெவீன். சாரதா அழுது கொண்டு இருக்கின்றா என்பதனையும் சொன்னான். காவேரியோ நெவீனின் சமாதானத்தினை மறுத்துக் கொண்டு அடம்பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுக்கோ ஏன் விஜேய் அப்படிக் கதைத்தார். இப்படி அவர் ஒரு நாளும் இப்படி தன்னுடன் கதைப்பதில்லையே என்பது அவளுக்கு இன்னமும் ஒரு விடை தெரியாத கேள்வியாக இருந்தது.
காவேரிக்கோ தான் என்ன அம்முவிடம் கேட்டேன் என்று கூட அவளின் நினைவிற்கோ வரவில்லை. ஒரு சாதாரணமாகத்தானே கேட்டேன் என்பது அவவின் வாதமும் கூட. அதற்கு விஜேய் தன்னை வீட்டை விட்டுக் கலைகப்பதிலேயே குறியாக இருந்தார் என்பது அவளுக்கு விளங்கவில்லை.
இரண்டாம் தரமாக அதுவும் ஒரு குழந்தைக்குத் தாயாக கல்யாணம் முடித்தவருக்கு முடித்துக் கொடுப்பதற்காக ஏன் எல்லாரும் வீட்டிலே பிடிவாதமாக இருக்கின்றனர் என்று காவேரி மீண்டும் மீண்டும் தன்னைக் கேட்டுக் கொண்டதுமல்லாமல், வீட்டாரிடமும் கேட்டாள். ஆனால், எல்லாரும் ஒரு மாதிரியாக தான் கதைக்கையிலே அமைதி காப்பது காவேரிக்கு இன்னமும் விளங்கவில்லையா?
அதை காவேரி அவதானிக்கவில்லையா? ஏன் தான் கேட்கும் இந்தக் கேள்விக்கு சரியான பதில் ஒருவரும் கூறுவதாக இல்லை என்று கூட காவேரி இன்னமும் நினைக்கவில்லை. ஏன் விஜேயைதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று வீட்டில் எல்லாரும் பிடிவாதமாக இருக்கின்றனர். ஒருவரும் சரியான பதிலை இன்னமும் சொல்லவில்லை என்று ஏன் காவேரி வீட்டாரிடம் ஒரேபிடியாகக் கேட்கவில்லை.
காவேரிக்கோ அம்மு ஒரு நாள் பாடசாலை வரவில்லை என்பதனை பொறுக்க முடியாமல் அம்முவின் வீட்டிற்கே வந்தவ, இனி விஜேய் அம்முவை வேற பாடசாலைக்கு மாற்ற நினைத்து அப்படி அம்முவை மாற்றினால் காவேரியால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அது மட்டுமல்லாமல், அம்முவால் அதனைத் தாங்கத்தான் இயலுமா?
காவேரியை பெண் பார்க்க வருகின்றனர். அதுவும் காவேரிதான் இதனை ஒழுங்கு படுத்தியதும். வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை வீட்டாரை வீட்டிலுள்ள ஒருவரும் வாசலுக்குப் போய் இன்முகத்துடன் வரவேற்கவில்லை. அதும்மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள ஒருவரும் ஒருவிதமான கதையும் பேசாமல் உம்மென்று இருக்கையிலே, மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒன்றும் விளங்கவில்லையா?
சாரதா வீட்டிற்கு இனி வராதே என்று ஏசியும், விஜேய் இனி ரீச்சர் வேலையை மட்டும் பாருங்கள் என்றும் இனி இங்கு வராதேயுங்க என்று ஏசியும் அதொன்றையும் கணக்கெடுக்காத மாதிரி காவேரி படம் பார்க்கப் போகிறாள் என்றால் அதுதான் காவேரி என்று பெருமிதத்துடன் சொன்னான் விஜேய்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!