Mahanadhi - மகாநதி - 12 & 13.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Review & Analysis சினிலே 12 ஆம், 13ஆம் திகதிகள் உள்ளடங்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சாரதாவின் வீட்டினை அபகரிக்க பசுபதியின் அடுத்த திட்டம். பொய்யான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றும் பசுபதி.
  • கஷ்டத்தின் மேல் கஷ்டத்தினை அனுபவிக்கும் காவேரியின் குடும்பம்
  • விஜேயுக்கு உண்மையினை எல்லோரும் மறைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஜமூனாதான் சரியான ஆளாகப்படுகின்றது. பொலிஸில் மாட்டிவிட்ட ஜமூனா இந்த உண்மையினை விஜயுக்குச் சொல்லி பரிகாரம் தேட வாய்ப்புகள் அதிமாக உண்டு.
  • விஜேயை எச்சரிக்கும் ஜமூனா – காவேரிக்கும், நெவீனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கு என்று அம்பலப்படுத்தும் ஜமூனா.
  • நேற்றைய இரவு சாரதாவின் குடும்பத்தினை வீட்டில் இருக்க அனுமதித்த பசுபதி இன்று காலையே தன் அடியாட்களுடனும், மகள் றாகினியுடனும் வீட்டினை ஆக்கிரமிக்க வந்தான்.
  • பொலிஸும் வந்தது, same பல்லவிதான். யார் இதில் உண்மை, யார் இதில் பொய் என்று கூடத் தெரியாத பொலீஸ்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 12 & 13.08.2025

பசுபதியின் இடது கை முறிந்தது காணாததென்று மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றான். இந்தப் பிரச்சினை இப்போது விஜயுக்குத் தெரிந்து விட்டது. இதனால், பசுவுக்கு அடுத்த வைத்தியம் பார்க்கப் போகப் போகின்றான் விஜய்.

எப்படி காவேரியின் குடும்பத்தினை அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் விட்டானோ, அதே போன்று றாகினியை விஜய் வெளியில் விடமாட்டானா? விடுவதற்கு மிகவும் கூடுதலான chance இருக்கின்றது. அல்லது, றாகினிக்கு விஜய் ஏதாவது ஒரு குடைச்சலினைக் கொடுப்பான், பசுபதி காவேரியின் வீட்டின் பக்கமே போகாதவாறு.

அயலவர்களின் அறிவித்தலினால் பொலிஸ் காவேரியின் வீட்டிற்கு வந்து இருவருக்குமான பிரச்சனையினைக் கோட்டு மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறிச் சென்றது.
விஜய் எதிர் பார்க்கும் 2 நாட்கள் தவணைக்கு முன்பு காவேரியை தன் வீட்டிற்கு தான் கூட்டிக் கொண்டு போய் விடுவேன் என்று உறுதியாகச் சொல்லும் போது, காவேரியின் வீட்டுப் பிரச்சனை வந்து வி்ட்டது.
இப்போது விஜய் தன்னுடைய வாழ்க்கையினைப் பார்ப்பானா? அல்லது காவேரியினதும், அவளது குடும்பத்தினதும் நிம்மதியினைப் பார்ப்பானா? காவேரியின் குடும்பத்தின் நிம்மதிதான் விஜேயுக்கு முக்கியம்.

அதுமட்டுமல்லாமல், விஜயுக்கு ஒன்றுமே விளங்குதில்லை. ஏன் காவேரி வாழ விரும்பி இருந்தவள், எதிர் காலத்தினைப் பற்றி ஒன்றாகக் கனவு கண்டவள், ஒரே இரவினிலே அவளுக்கு என்ன நடந்தது என்று ஒருவிதமான clueவும் இல்லாமல் அலைந்து திரிக்கின்றான்.

இந்தப் பிரச்சினையினை எவ்வாறு குமரனும், நெவினும், கங்காவும் விஜயிடம் சொல்லுவார்கள் அல்லது சொல்லத்தான் முடியுமா? இல்லையே!

ஆனால், ஜமூனாவுக்கு காவேரியின் பின் வாங்கல் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், நெவீனிடம் ஜமூனா கேட்டால் நெவீன் சொல்லுவானா?, ஜமூனாவுக்கு. ஆனால், வேறு வழியாக நெவீனைக் குளப்பி, நெவீனுக்கு கோபத்தினை உண்டாக்கி, அதன் மூலம் நெவீனைச் சொல்ல வைப்பதில் கில்லாடி ஜமூனா. இந்த உத்தியினால் நெவீனிடம் இருந்து விஷயத்தினைக் கறக்க கூடுதலான வாய்ப்புகள் உண்டு. இது நன்மையாக அவள் செய்யவில்லை, மாறாக, தனது வாழ்க்கையினைத் தக்க வைப்பதற்காக இதனை ஜமூனா செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஒருவர் சந்தேகப்படுவதிலும் நன்மைகளும் வருகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதல்லாவா!

கணவனை இழந்தவள் சாரதா. பெண்பிள்ளைகளை வைத்திருப்பவள். என்னதான் அவளால் செய்திட முடியும்? வெட்கத்தினை விட்டு பசுபதியின் காலில் விழுந்தாள்.

பொலிஸிடம், காவேரியின் குடும்பம் உண்மையினைச் சொல்லியிருக்கலாம். இப்பதான் பசுபதி கொலை குற்றத்திலே கைது செய்யப்பட்டவன், பிணையில் வெளியில் வந்திருக்கின்றான். அத்துடன் எங்களை வீட்டிற்கு வந்து கொலை செய்வேன் என்று வெருட்டினான் என்று சொல்லலாம். இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று, இவற்றினை இரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருக்கலாமே! அவற்றினை இப்போது ஆதாரமாகப் பாவிக்கலாமேதானே!

இதில், காவேரியின் பக்கமாக ஒருதரும் ஒருவிதமான ஆதரங்களினை சேகரிப்பதற்குரிய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதாக இல்லை. பொலிஸுக்கு முன்னாலே, பசுபதியினைத் திட்டுவதும், அடிக்கப் போவதும், இவர்கள்தான் முழு வில்லர்கள் என்று அவரவர் வாயினைச் சுழிச்சுக் கொண்டு முகத்தினை விகாரமாக வைத்திருந்தால், அது காவேரியின் பக்கமாக பெலவீத்தினைக் காட்டுகின்றது. எனவே, கோட்டுக்குப் போனாலும் இவர்களுக்குத் தோல்விதான் வரும் என்பது பசுபதிக்கு நன்றாகத் தெரியும்.

காலை விடிந்தது. பசுபதி தன் அடியாட்கள் சகிதம், றாகினாயையும் கூட்டிக் கொண்டு வீட்டினை அபகரிக்க சாரதா வீட்டிற்கு வந்தான். காவேரியின் குடும்பமே கோபம் கொண்டு பசுபதி கூட்டத்தினரை அடித்து வெருட்டியது. ஒருவாறாக, பசுவின் கூட்டத்தினை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர், சாரதாவின் குடும்பம். இவ்வளவு பிரச்சினை இங்கு நடைபெறுகின்றது. குமரன், அதுதான், சாரதாவின் மூத்த மருமகனைக் காணவில்லை. எங்கு போய்விட்டாராம்? அவன்தான் ஒரு ஆம்பிள்ளை வீட்டு வாசலில் காவலிருந்து காவல் தெய்வமாக இருக்கிறதை விட்டு விட்டு தோசை வாங்கக் கடைக்குப் போய் விட்டாரோ என்ன?

சரி பிரச்சனைதான் நடக்கின்றதே, காவேரியின் குடும்பம், அதற்கும் மேலே ஒரு வயசான பாட்டி சொல்லுகையில் அந்தப் பாட்டியினை அடக்குவதிலும், காவேரியின் கதையினை அசட்டையாக கேட்காமலும் பொலிஸ் இருப்பதில் உள்ள அர்த்தம்தான் என்ன?

அதுமட்டுமல்லாமல், பொலிஸ் கேட்கலாம்தானே பசுபதியிடம், சரி இது உனக்கு வருவேண்டிய வீடு என்றால், நீ பொலிஸூக்கெல்லவா வந்து complaint பதிவு பண்ணியிருக்க வேண்டும்? அதைவிட்டு நீ ஏன் அடியாட்களோடு வந்து பெண்களுடன் தகறாரு பண்ணுகின்றாய் என்று ஏன் பொலிஸ் கேட்கவில்லை?

நேற்று இதே பொலீஸ் வந்ததுதானே, காவேரி தனது தகப்பன் சாவில் இவன்தான் சம்பந்தம் என்று பசுபதியினைச் சொல்லுகையில், நீங்கள்தானே அந்தக் கேசினை deal பண்ணினனீங்கள் சார் என்று காவேரி சொல்லுகையில், அதனை இதே பொலீஸ் அசட்டை செய்வது ஏன்? சரி அப்பதான் பொலீஸூக்கு இந்தக் கேஸ் ஞாபகம் வரவில்லை என்றால், ஸ்ரேஷனுக்குப் போய் இந்தக் கேசினைப் பார்த்திருக்கலாம்தானே! அதுமட்டுமல்லாமல், பசுபதி யாரு? அவனுடைய சரித்திரத்தினையே ஆராஞ்சிருக்கலாம்தானே! இதே பொலீஸ் நேற்று வந்ததிற்கும், இன்று வந்ததிற்கும், என்ன வித்தியாசம்? ஒன்றுமே இல்லை.

இதை விட, நேற்றைய review and analysis சொன்னனான்தானே காவேரி ஒருசில ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என்று, அதாவது, பசுபதிக்கெதிரான ஆதாரங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டும் என்று. ஆனால், சாரதாவின் குடும்பம் என்ன செய்கின்றது? இவர்களுக்கு ஒன்றுமே நடக்காத மாதிரி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றா சாரதா.

அத்துடன், காவேரி ஒரு கிண்டியினைத் தூக்கிக் கொண்டு விரட்டுகையில் எல்லாரும், அதாவது, றௌடிக் கும்பல்கள் எல்லாரும் அவவுக்குப் பயந்து ஓடுகின்றார்கள் – இது வேடிக்கையாக இல்லை. மேலும், பொலிஸ் வருகின்றது என்று தெரிந்ததும், கையில தூக்கிய அந்த கிண்டியினைத் தூரப் போடாமல் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு pose கொடுத்துக் கொண்டு, நேற்றைய மாதிரி உண்மையான வில்லியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு நிற்கின்றா, காவேரி. இதனால், என்ன நடக்கும்? காவேரியை நேற்றும், இன்றும் எச்சரித்த பொலீஸ், இறுதியாக உள்ளே தூக்கி சிறையினுள் போடத்தான், விஜய் இங்கு entryஆவார். அப்போதுதான், விஜய் பொலிஸிடம் சத்தம் போட்டு இவள் என் மனைவி என்றும், அவள் ஒரு கர்ப்பிணித் தாய் என்றும், என்னென்று இவளை கைது செய்வீர்கள் என்றும் கேட்கும் நிலைமை இனி வரலாம்.

இனி நடக்கப் போவதுதான் என்ன?

  • விஜயினால் பசுபதி விரட்டபட்டாலும், பசுபதி சும்மா இருப்பானா? Chance றொம்பக் கம்மிதான்.
  • பொலிஸூக்கு காவேரியின் குடும்பம் போகுமா? போகத்தான் வேண்டும்.
  • இந்தப் பிரச்சனைகளுக்குள் விஜய் தலையிட அது விஜேயின் வீட்டிற்குத் தெரிய வர, அவர்களிடம் இருந்து விஜயுக்கு எதிர்ப்பு வரச் சாத்தியமுண்டு.
  • மீடியாவில் காவேரி கர்ப்பமாக இருக்கின்றாள் என்று சொல்வதனால், அனைவருக்கும் தெரியவரப் போகின்றது. இதனால், விஜய் வீட்டில் என்ன நடக்கும்? நல்ல முடிவுகள் வருமா? அப்படியொன்றும் நடக்காது. இன்னமும் கேவலமாகத்தான் போகும் – விஜய் வீட்டிலுள்ள அந்த இரண்டு பெண்களும் நல்ல விபரத்தோட இருக்கினம்தானே!

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!