posted 11th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!
- பசுபதியின் றிலீஸினால், முதன் முறையாக காவேரியின் வீட்டிற்கு வந்த பசுபதி. காவேரியின் கோரத் தாண்டவத்தினைக் கண்டு பயந்தோடினர், பசுபதியும், றாகினியும்.
- இரண்டாவது visit விஜேயின் வீடுதான். விஜேயின் வீட்டிற்குப் போன பசுபதியும், றாகினியும், பாட்டியையும், தாத்தாவையும் கொன்று விடுவதாக பசுபதி வெருட்டினான். அதுமல்லாமல், காவேரியை விட்டு விட்டுவிட்டால், உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று warn பண்ணினான், பசுபதி.
- அடித்து வெருட்டியும் பசுபதி அடங்கவில்லை. காவேரியினை வெருட்டினான் என்று அறிந்ததும், விஜேய் கோபமடைந்தான்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 08 & 11.08.2025
பசுபதி எதிர்பார்க்காத நேரத்திலே விஜய் பசுபதியின் வீட்டினுளே சென்றான். றாகினியும், தகப்பனும் சந்தோஷமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். பசுவின் மனமும் நிறைந்திருத்ததினால் அவனுக்குப் பசி எடுக்கவில்லை.
காவேரியின் வீட்டினுள் போய், அவளின் குடும்பத்தினை வெருட்டியது விஜேயுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. சரியான காண்டோடதான் உள்ளே நுழைந்தான்.
பலவிதமான பேச்சுப் பரிமாற்றம் மூவருக்குமிடையில் நடைபெற்றன. வெகுவான கோபத்தினால் பசுபதியினை என்ன செய்யலாம் என்ற விஜய் யோசிக்கையிலே, றாகினி இடையிட்டு விஜேயைப் பேசத் தொடங்கினாள். விஜேய் போட்ட சத்தத்தினால் றாகினி பயத்தினால் அவர்களது sofa விலே விழுந்துவிட்டாள். றாகினி, தன் மகளை விஜேய் தள்ளி விட்டான் என்று நினைத்தவனாய் விஜேயின் மேலே கோபம் கொண்டான். விஜேயுடன் ஏறி விழுந்தான் பசுபதி.
விஜேய் சும்மா இருப்பானா? பசுவின் இடது கையினை முறுக்கினான். இறுக்கமாக முறுக்கினான். நோவினால் துடித்தான். அட விடு விஜய் என்று குளறினான். றாகினியோ விஜய் விடு விஜய். உன்ர காலிலே விழுகிறேன் விஜேய், please விட்டு விடு அப்பாவை என்று அழத் தொடங்கினாள் றாகினி. பரவாயில்லை காலில் விழு என்று காலை நீட்டினான் விஜய். ஏய் றாகினி அப்படி விளாதே என்று அந்த நோவிலும் கர்ச்சித்தான் பசு. அடங்காத பசுவின் கையினைத் திருகி முறித்து அடக்கினான் விஜய்.
இனி வேண்டாம் அப்பா இவங்களுடம் பிரச்சனை ஒன்றும் வேண்டாம் என்று கெஞ்சினாள் றாகினி.
இப்படியே விட்டு விட்டு விஜய் போன பின்பு, பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. இவனையும், காவேரியையும் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டினான் பசு. றாகினியோ வேண்டாம் அப்பா என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினாள்.
கெட்ட ஆத்மா சும்மா இருக்காது. கொஞ்சம் நோவு ஆற, பசுபதி சாரதாவின் வீட்டிற்குப் போய் அங்கு தலைவாசலிலே குந்தி விட்டான். சாரதாவும் அங்குதான் போனா. அங்கு போய்ப் பார்க்கையிலே பசுபதி அவனது அடியாட்களுடன், இது தனது வீடு என்று உரிமை கொண்டாடிக் கொண்டு இருக்கிறானாம். இதனை வீட்டிற்கு அறிவித்தா சாரதா.
கோபம் கொண்டதால் காவேரி வீட்டிலிருந்த அனைவரும் உடனே கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.
பலவிதமான காரணங்களைச் சொன்னான், பசுபதி. எல்லாமே பொய்யும், பித்தலாட்டமும் என்று சாரதாவுக்குத் தெரியும். ஆனால், அவன் அடியாட்களோடு இருக்கையிலே தனிப் பெண்ணாக சாரதாவால் என்னதான் செய்ய முடியும்?
ஜமூனா, நெவீனுடன் இப்பதான் பதுமையாகக் கதைக்கின்றா – அப்போது நெவீனும் அமைதியாகக் கதைத்தான். ஒன்றுக்கும் கவலைப்படாதே! பார்த்துக் கொள்ளலாம் என்றான்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!