Mahanadhi - மகாநதி - 06.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!

  • காவேரியின் வீட்டிற்குப் போன பசுபதி காவேரியின் முழுக் குடும்பத்தையும் சிதைச்சுப் போடுவேன் என்று மிரட்டி விட்ட போது காவேரியும், குமரனும் விரட்டியடித்து விட்டனர், பசுபதி.
  • இது போதாதென்று பசுபதியும், றாகினியும் விஜய் வீட்டிற்குப் போய் தாத்தாவின் குடும்பத்தினை வெருட்டத் தொடங்கினான். காவேரியை உங்கள் பேரன் விட்டு விட்டால் நான் உங்களை விட்டு விடுவேன் இல்லை என்றால் எல்லாரையும் சாகடிச்சு விடுவேன், என்று விரட்டினான், பசுபதி.

பசுபதி தனியே நிற்பதுமல்லாமல், றௌடிகளின் உதவி இருக்கின்றது என்று காவேரியையும், விஜேயையும் எதிரிகளாக்கிக் கொண்டிருக்கையில், பசுபதிக்கோ, காவேரி பக்கமும், விஜேயின் பக்கமும் உள்ள பலம் தெரியாமல் விளையாடுகி்ன்றான்.

  • கல்யாணி பாட்டி, கிடைச்ச சந்தர்ப்பத்தில் sixerஅடிக்கிறமாதிரி, பசுபதியிடம் எங்களுக்கும், காவேரி்க்கும் இனி தொடர்பில்லை, அவளை நாங்கள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டோம் என்று உறுதியாகச் சொல்கின்றா.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 06.08.2025

அடியாட்களை வைத்து கொள்ளை அடிப்பதையும், கொலை செய்வதையும், குடியைக் கெடுப்பதையும் தொழிலாகக் கொண்டவன்தான் பசுபதி. இப்பவும், வெண்ணிலாவின் கொலை முயற்சிக் குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்ட பசு இப்போ, just இரண்டு நாட்களுக்குள்ளே ஜாமீனிலே வெளியே வருவதுமல்லாமல், வந்ததும் வராததுமாக காவேரியின் வீட்டிற்கும், விஜேய் வீட்டிற்கும் போய் கொலை மிரட்டலைச் செய்கிறான் என்றால், எங்குதான் நீதி இருக்கின்றது?

இதனைக் கேட்கப் போக காவேரியிடம், பொலிஸ் அதிகாரி மீண்டும் complaint கொடுக்கும் படி சொல்கையில், இதென்ன ஒரே complaint கொடுப்பதும், கைது செய்வதும், விடிவிப்பதும் என்று இதே வேலையாகவே அல்லவா இருக்க வேண்டும், வேறு ஒன்றும் பார்க்கவும் முடியாது, நிம்மதியாக சீவிக்கவும் முடியாதல்லவா?

விஜேய் வீட்டே போய் வாலாட்டிய பசுபதியும், றாகினியும் அடி வாங்கி ஓடிட முடியாமல், தனக்குத் தோல்வி என்பதனை ஒத்துக் கொள்ளவும் முடியாமல், விறைத்துப் பார்த்து விட்டு போவதும், அது மட்டுமல்லாமல், இப்படி ஏதாவது வில்லங்கங்கள் தாறுமாறாக நடக்குமென்றால், றாகினி தன்னைக் கூட்டி கொண்டு போய் விடுவாள் என்று பசுபதிக்கு நன்றாகத் தெரிந்ததால், சும்மா வீறாப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றான் பசுபதி.

இனி, குமரனும், நெவீனும் சும்மா இருக்க மாட்டார்கள். வேண்டுமென்றே பசுவை வம்பிற்கு இழுப்பார்கள். இதனால் பசுபதி கைது செய்யவும் படலாம்.

இன்னமும் முக்கியமாக, காவேரி, ஒரு கர்ப்பிணித் தாய் என்பதனால், இதை வைத்து ஒரு complaint கொடுத்தால் காணும் சட்டம் உடனே பசுபதி மேல் பாயும். இந்த விடயத்தை காவேரி கடைசி ஆயுதமாகப் பயன் படுத்த வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

குமரனையும், நெவீனையும் விட, விஜேதான் பெரியவனும், புத்திசாலியும், அனுபவசாலியும் கூட, அத்துடன், செல்வாக்கு நிறைந்தவனும் கூட, விஜேயால்தான் எல்லாரையும் காப்பாற்ற முடியும். ஆனால், இதற்கு, காவேரியின் மேலுள்ள வினாவிற்குப் பதில் கிடைக்க வேண்டுமே. அது என்னவென்றால், ஏன் காவேரி தன்னுடன் வாழ மாட்டேன் என்று சொல்கின்றா என்பதுதான்.

இந்தக் கேள்விக்குப் பதில் எப்போதுதான் வரும்? யார் மூலம் அது வெளிவரும்?

இது சிலசமயம், கங்காவால், அல்லது, நெவீனால்தான் இதற்குப் பதில் வெளிவரலாம், அதுவும் நேரடியாக விஜேயுக்கே சொல்லப்படலாம்.

இப்படி பதில் தெரியவந்தால், கல்யாணி பாட்டிக்கு என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. ஆனால், விஜய் தாத்தா, பாட்டி குடும்பத்தினை விட்டு விட்டு காவேரியின் வீட்டிற்கு போக நேரிடலாம்.

இனி நடக்கப் போவதுதான் என்ன?

  • காவேரிக்கு என்ன நடந்தது – முதல்நாள் இரவு, சந்தோஷமாகவும், வீரிப்பாகவும் கதைத்தவள், காவேரி. அந்த ஒரே இரவில் என்ன நடந்து? அல்லது தான் காவேரியைக் கூட்டி வரப் போவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதுதான் விஜேயின் கேள்வி. பதிலை தேடும் விஜைக்கு பதில் கிடைக்குமா?
  • காவேரியின் வீட்டாரின் பெருந்தன்மையில் ஒரு சிறு பாகம் கூட விஜேய் வீட்டாரில் இல்லை. விஜேயுக்கும், பாட்டி,சித்தி இவர்களுக்கும் உள்ள மனநிலைகளிலே வெகு இடைவெளி இருக்கின்றது – எப்படி? இதில் இவர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் வருமா?
  • காவேரியின் complaintக்குப் பசுபதி கைது செய்யப்படுவானா? ஆனால், பெரும்பான்மையாக, பசுபதி கைது செய்யப்பட மாட்டான். ஏனென்றால், அவன் மூளை எப்பவும் criminalஆக யோசித்துப் பழக்கட்டாயிற்று.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!